للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: الجن   آية:
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ— فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟
72.14. எங்களில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களும் இருக்கிறார்கள். நேரான, சரியான வழியை விட்டும் விலகிய அநியாயக்காரர்களும் இருக்கிறார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்களில் ஈடுபடுவார்களோ அவர்கள்தாம் நேர்வழியையும் சரியானதையும் நாடியவர்களாவர்.
التفاسير العربية:
وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ
72.15. நேரான, சரியான வழியை விட்டும் விலகிய அநியாயக்காரர்கள் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்ற மனிதர்களைக் கொண்டே நரகம் எரிக்கப்படுகிறது.
التفاسير العربية:
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ
72.16. நிச்சயமாக ஜின்களில் சிலர் செவிமடுத்ததை அவருக்கு அவன் அறிவித்ததைப் போன்றே பின்வரும் வஹியையும் அல்லாஹ் அறிவிக்கிறான்: “மனிதர்களும் ஜின்களும் இஸ்லாம் என்னும் நேரான வழியில் நிலைத்திருந்து அதன்படி செயல்பட்டால் அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நீரைப் புகட்டுவான். பலவகையான அருட்கொடைகளில் அவர்களை நீடிக்கச்செய்வோம்.
التفاسير العربية:
لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ— وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ
72.17. அது அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிப்பதற்காகவேயாகும். யார் குர்ஆனையும் அதிலுள்ள அறிவுரைகளையும் புறக்கணிப்பாரோ இறைவன் அவரை தாங்கமுடியாத கஷ்டமான வேதனையில் பிரவேசிக்கச் செய்வான்.”
التفاسير العربية:
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ
72.18. “நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். வேறு யாருக்காகவும் அல்ல. எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் வேறு யாரையும் அழைக்காதீர்கள். அவ்வாறு அழைத்தால் நீங்கள், தமது வணக்கஸ்தலங்களில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கும் யூதர்களையும் கிருஸ்தவர்களையும் போன்று ஆகிவிடுவீர்கள்.”
التفاسير العربية:
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠
72.19. “அல்லாஹ்வின் அடியார் முஹம்மது ‘பத்னு நஹ்லா’ என்ற இடத்தில் அல்லாஹ்வை வணங்கியவராக நின்றபோது ஜின்கள் அவர் ஓதிய குர்ஆனைச் செவியேற்பதற்காக கடுமையாக நெருங்கிக்கொண்டு கூட்டம்கூட்டமாக நின்றார்கள்.
التفاسير العربية:
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟
72.20. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் என் இறைவனை மாத்திரமே அழைக்கின்றேன். வேறொன்றை வணக்கத்தில் அவனுக்கு இணையாக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரியே.”
التفاسير العربية:
قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟
72.21. நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு விதித்த தீங்கினை அகற்றுவதற்கோ, அவன் உங்களுக்குத் தடுத்த பயன்களை கொண்டுவருவதற்கோ நான் சக்திபெற மாட்டேன்.”
التفاسير العربية:
قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬— وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ
72.22. நீர் கூறுவீராக: “நான் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனிடமிருந்து யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது. அவனைத்தவிர ஒதுங்கும் வேறு புகலிடத்தையும் நான் பெற முடியாது.”
التفاسير العربية:
اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ— وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ
72.23. என்னால் முடிந்ததெல்லாம் அவன் எனக்கு இட்ட கட்டளையையும் உங்களின்பால் கொண்டுவந்த தூதுச் செய்தியையும் உங்களிடம் எடுத்துரைக்கிறேன் என்பதுதான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்பவர் நரக நெருப்பை தங்குமிடமாகப் பெறுவார். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார். அதிலிருந்து அவரால் ஒருபோதும் வெளியேற முடியாது.
التفاسير العربية:
حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟
72.24. நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருப்பார்கள். உலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையை மறுமை நாளில் காணும் சமயத்தில் யார் பலவீனமான உதவியார்களைப் பெற்றவர்கள்? யார் குறைவான உதவியாளர்களைப் பெற்றவர்கள்? என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
التفاسير العربية:
قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟
72.25. -தூதரே!- மீண்டும் எழுப்பப்படுவதை மறுக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கு எச்சரிக்கப்படும் வேதனை சமீபத்தில் உள்ளதா? அல்லது நிச்சயமாக அல்லாஹ் மாத்திரமே அறிந்த ஒரு தவணை இருக்கின்றதா என்பதை நான் அறிய மாட்டேன்.
التفاسير العربية:
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ
72.26. அவனே மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் மறைவாக அமைத்த விஷயங்களை யாருக்கும் அறிவிக்கமாட்டான். அவன் மாத்திரமே அதனை பிரத்தியேகமாக அறிந்து வைத்துள்ளான்.
التفاسير العربية:
اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ
72.27. ஆயினும் அவன் யாரைத் தூதராக தேர்ந்தெடுத்தானோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு தான் விரும்பியதைக் கற்றுக்கொடுக்கிறான். தூதரை தவிர மற்றவர்கள் அறிந்துகொள்ளாதவகையில், அவன் தன் தூதரைப் பாதுகாப்பதற்காக அவருக்கு முன்னாலும் பின்னாலும் வானவர்களை பாதுகாவலர்களாக அனுப்புகிறான்.
التفاسير العربية:
لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠
72.28. இது தமக்கு முன்னர் வந்த தூதர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த அல்லாஹ்வின் அருளால் அவன் ஏவிய தூதுச் செய்தியை எடுத்துரைத்து விட்டார்கள் என்பதை தூதர் அறிந்துகொள்வதற்காகத்தான். அல்லாஹ் வானவர்கள் மற்றும் தூதர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்து அறிந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் ஒவ்வொன்றையும் எண்ணி கணக்கிட்டு வைத்துள்ளான். அவனைவிட்டு எதுவும் மறைவாக இல்லை.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• الجَوْر سبب في دخول النار.
1. அநியாயம் நரகத்தில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது.

• أهمية الاستقامة في تحصيل المقاصد الحسنة.
2. நல்ல நோக்கங்களை அடைவதில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவம்.

• حُفِظ الوحي من عبث الشياطين.
3. ஷைதானின் திருவிளையாடல்களை விட்டும் வஹி பாதுகாக்கப்பட்டுள்ளது.

 
ترجمة معاني سورة: الجن
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق