Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: আল-মায়িদাহ   আয়াত:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
10. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠
11. நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ— وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ— وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ— لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
12. நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.
আৰবী তাফছীৰসমূহ:
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ— یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ— وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ— وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
13. அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: আল-মায়িদাহ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

শ্বাইখ আব্দুল হামীদ আল-বাক্বৱী চাহাবে অনুবাদ কৰিছে।

বন্ধ