আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ আয়াত: (272) ছুৰা: ছুৰা আল-বাক্বাৰাহ
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ— وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
2.272. தூதரே! அவர்களுக்கு நேர்வழிகாட்டி, அதற்கு அவர்களைப் பணிய வைப்பது உம்முடைய கடமையல்ல. சத்தியத்தை எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். பாக்கியம் அளித்து நேர்வழிகாட்டுவது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். நீங்கள் செய்த தர்மங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அல்லாஹ் அதனை விட்டும் தேவையற்றவன். நீங்கள் செய்யும் செலவுகள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்கட்டும். அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் அவனது திருப்திக்காகவே செலவுசெய்வார்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் செய்த தர்மத்திற்கான கூலியை குறைவின்றி நிறைவாகப் பெறுவீர்கள். அல்லாஹ் எவர்மீதும் அநீதி இழைத்துவிட மாட்டான்.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• إذا أخلص المؤمن في نفقاته وصدقاته فلا حرج عليه في إظهارها وإخفائها بحسب المصلحة، وإن كان الإخفاء أعظم أجرًا وثوابًا لأنها أقرب للإخلاص.
1. நம்பிக்கையாளன் தான் செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆக்கிக் கொண்டால் பொதுநலவைக்கருத்திற்கொண்டு அவற்றை வெளிப்படையாகச் செய்வதிலோ மறைமுகமாகச் செய்வதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆயினும் தர்மங்களை மறைவாகச் செய்வது அதிக நன்மையையும் கூலியையும் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அதுவே மனத்தூய்மைக்கு நெருக்கமானதாகும்.

• دعوة المؤمنين إلى الالتفات والعناية بالمحتاجين الذين تمنعهم العفة من إظهار حالهم وسؤال الناس.
2. தன்மானத்தால் மக்களிடம் கையேந்தாமல் தவிர்ந்திருக்கும் ஏழைகளின்பக்கம் கவனம் செலுத்தும்படி நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

• مشروعية الإنفاق في سبيل الله تعالى في كل وقت وحين، وعظم ثوابها، حيث وعد تعالى عليها بعظيم الأجر في الدنيا والآخرة.
3. அனைத்து நிலமைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப்பெரும் நன்மைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

 
অৰ্থানুবাদ আয়াত: (272) ছুৰা: ছুৰা আল-বাক্বাৰাহ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

বন্ধ