Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: ইউনুছ   আয়াত:
لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ— وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
(அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்கி, மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழ்ந்து) நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. இன்னும், அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ— وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
இன்னும், தீமைகளை செய்தவர்கள் (அவர்களின்) தீமைக்கு கூலி(யாக) அது போன்ற (தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! இன்னும், அவர்களை இழிவு சூழ்ந்துவிடும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் எவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பல பாகங்களால் அவர்களுடைய முகங்கள் போர்த்தப்பட்டதைப் போன்று (கடும் கருப்பாக) இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ— فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟
இன்னும், (நபியே!) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளை நினைவு கூர்வீராக! பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி, “நீங்களும் (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். ஆக, அவர்களுக்கிடையில் (இருந்த தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று அவர்க(ள் இணை வைத்து வணங்கிய அவர்க)ளுடைய தெய்வங்கள் கூறும்.
আৰবী তাফছীৰসমূহ:
فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟
ஆக, “எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்; உங்கள் வழிபாட்டை நிச்சயம் நாங்கள் அறியாதவர்களாகவே இருந்தோம்” (என்றும் அந்த கற்பனை தெய்வங்கள் கூறும்).
আৰবী তাফছীৰসমূহ:
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
அங்கு (மறுமையில்), ஒவ்வொரு ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றை நன்கு அறிந்துகொள்ளும். இன்னும், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். (தெய்வங்கள் என்று) அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (இறுதியாக) அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
আৰবী তাফছীৰসমূহ:
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ— فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ— فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் உணவளிக்கிறான்? அல்லது, (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வான்? இன்னும், இறந்ததிலிருந்து உயிருள்ளதையும்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் உற்பத்தி செய்கிறான்? இன்னும், எல்லா காரியங்களையும் யார் திட்டமிட்டு நிர்வகிக்கிறான்?” ஆக, (அதற்கு பதிலில்), “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, நீர் கூறுவீராக: “ஆகவே, நீங்கள் அந்த அல்லாஹ்வை அஞ்சவேண்டாமா?”
আৰবী তাফছীৰসমূহ:
فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ— فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۚ— فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
ஆக, “அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். ஆக, (இந்தளவு தெளிவான) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது? ஆகவே, நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?”.
আৰবী তাফছীৰসমূহ:
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
(அல்லாஹ்விற்கு கீழ்ப்படியாமல்) உண்மையை மீறியவர்கள் மீது, - நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் - என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உறுதியாகி விட்டது.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: ইউনুছ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

শ্বাইখ ওমৰ শ্বৰীফ বিন আব্দুচ্ছালাম চাহাবে অনুবাদ কৰিছে।

বন্ধ