Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: আল-বাক্বাৰাহ   আয়াত:
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
இன்னும், தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் செய்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ச்சை செய்து நிறைவேற்றினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் யாரும் இல்லை.
আৰবী তাফছীৰসমূহ:
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ— وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தந்தால் அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். இன்னும், உங்கள் பாவங்களில் (அல்லாஹ் நாடிய) சிலவற்றை உங்களை விட்டு போக்கிவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
আৰবী তাফছীৰসমূহ:
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ— وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
(நபியே! நீர் எவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கிறீர்களோ) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது கடமை அல்ல. (உம்மீது நேர்வழியின் பக்கம் அழைப்பதுதான் கடமை.) என்றாலும், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாகும். இன்னும், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். இன்னும், (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ— یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ— تَعْرِفُهُمْ بِسِیْمٰىهُمْ ۚ— لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
(கல்வி கற்பதற்காக அல்லது ஜிஹாது செய்வதற்காக) அல்லாஹ்வின் பாதையில் முற்றிலும் அடைக்கப்பட்ட ஏழைகளுக்கு (உங்கள் தர்மங்களை கொடுப்பது மிக ஏற்றமானதாகும்). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க சக்திபெற மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (-கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்,) நீர் அவர்களை அவர்களின் (முகம் அல்லது ஆடை, அல்லது இருப்பிடத்தின்) அடையாளத்தால் (அவர்கள் தேவையுடையோர் என) அறியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அ(தையும் அதன் நோக்கத்)தை(யும்) நன்கறிந்தவன் ஆவான்.
আৰবী তাফছীৰসমূহ:
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: আল-বাক্বাৰাহ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

শ্বাইখ ওমৰ শ্বৰীফ বিন আব্দুচ্ছালাম চাহাবে অনুবাদ কৰিছে।

বন্ধ