আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

அந்நிஸா

external-link copy
1 : 4

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். இன்னும், அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் (இவ்வுலகத்தின் பல பாகங்களில்) பரப்பினான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் மூலமாகவே உங்களுக்குள் (தேவைகளை ஒருவர் மற்றவரிடம்) கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும், இரத்த உறவுகளை முறிப்பதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான். info
التفاسير: