আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
142 : 2

سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ— قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ— یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

"அவர்கள் (தொழுது கொண்டு) இருந்த அவர்களின் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?" என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு) கூறுவீராக! "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்." info
التفاسير:

external-link copy
143 : 2

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாக இருப்பதற்காகவும் நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தம் குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் இருந்த (பைத்துல் முகத்தஸ்) கிப்லாவை நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் நேர்வழி நடத்தியவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே இருந்தது. உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கி விடுபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்தான். info
التفاسير:

external-link copy
144 : 2

قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ— فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪— فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟

(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக காண்கிறோம். ஆகவே, நீர் விரும்புகிற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாகத் திருப்புவோம். எனவே, நீர் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப் பட்டவர்கள் "நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்'' என திட்டமாக அறிவார்கள். அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை. info
التفاسير:

external-link copy
145 : 2

وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ— وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ— وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ

(நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சியை (களை)யும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்குக் கல்வி வந்த பின்னர் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான். info
التفاسير: