আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
41 : 39

اِنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ— فَمَنِ اهْتَدٰی فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟۠

நிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (அவர்களை பாதுகாப்பவராக) இல்லை. info
التفاسير:

external-link copy
42 : 39

اَللّٰهُ یَتَوَفَّی الْاَنْفُسَ حِیْنَ مَوْتِهَا وَالَّتِیْ لَمْ تَمُتْ فِیْ مَنَامِهَا ۚ— فَیُمْسِكُ الَّتِیْ قَضٰی عَلَیْهَا الْمَوْتَ وَیُرْسِلُ الْاُخْرٰۤی اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் கைப்பற்றுகின்றான். இன்னும் (அவ்வாறே இதுவரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன் (உயிர்) கைப்பற்றுகின்றான். (இறந்தவர்களின் ஆன்மாக்களும் உயிருள்ளவர்களின் ஆன்மாக்களும் தூக்கத்தில் சந்திக்கின்றன. பிறகு அவை பிரியும் போது) மரணத்தை (முன்பே) எதன் மீது விதித்து விட்டானோ அதை (-முன்பே மரணித்துவிட்டதை மீண்டும் உலகிற்கு வர முடியாதவாறு) அவன் தடுத்துக் கொள்கிறான். மற்றொன்றை (-மரணித்திருக்காத, உலகில் வாழ்ந்து வருகின்ற ஆன்மாவை) அவன் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) விட்டு வைக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
43 : 39

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ— قُلْ اَوَلَوْ كَانُوْا لَا یَمْلِكُوْنَ شَیْـًٔا وَّلَا یَعْقِلُوْنَ ۟

அல்லாஹ்வை அன்றி (பிற தெய்வங்களை வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களாக (அவற்றை) எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் (-தங்களுக்கு எதையும் செய்துகொள்வதற்கு) சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா? info
التفاسير:

external-link copy
44 : 39

قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِیْعًا ؕ— لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

(நபியே) கூறுவீராக! சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. பிறகு, அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
45 : 39

وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ— وَاِذَا ذُكِرَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟

அல்லாஹ் ஒருவனை மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். info
التفاسير:

external-link copy
46 : 39

قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَیْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَیْنَ عِبَادِكَ فِیْ مَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய். info
التفاسير:

external-link copy
47 : 39

وَلَوْ اَنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا مَا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ یَكُوْنُوْا یَحْتَسِبُوْنَ ۟

நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போல் இன்னமும் இருந்தால் மறுமை நாளில், கெட்ட வேதனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணையாகக் கொடுத்து (தங்களை விடுவித்து) இருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும். info
التفاسير: