আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
155 : 4

فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ— بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟

ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அல்லாஹ் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது முத்திரையிட்டான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
156 : 4

وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்). info
التفاسير:

external-link copy
157 : 4

وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ— وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ— مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ— وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ

“அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை. info
التفاسير:

external-link copy
158 : 4

بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
159 : 4

وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ

அவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார். info
التفاسير:

external-link copy
160 : 4

فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ

ஆக, யூதர்களின் அநியாயத்தின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
161 : 4

وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ— وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟

இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன் காரணமாகவும்; - அவர்களோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். - இன்னும், மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்களை சபித்தோம்). இன்னும், நிராகரிக்கின்ற அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
162 : 4

لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்னும் நம்பிக்கையாளர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துபவர்கள்; ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள், (ஆகிய) இவர்களுக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம். info
التفاسير: