আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
11 : 41

ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ— قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟

பிறகு, அவன் வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது (தண்ணீரில் இருந்து வெளியேறும்) ஓர் ஆவியாக இருந்தது. (அந்த ஆவியைத்தான் ஒரு வானமாக அவன் ஆக்கினான். அந்த ஒரு வானத்தில் இருந்து ஏழு வானங்களைப் படைத்தான்.) அவன் அதற்கும் (-வானத்திற்கும்) பூமிக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் வாருங்கள்” (உங்களுக்குள் படைக்கப்பட்டதை வெளிப்படுத்துங்கள்.) அவை இரண்டும் கூறின: “நாங்கள் விருப்பமுள்ளவர்களாகவே வந்தோம்.” (உனக்கு கீழ்ப்படிந்து உனது கட்டளையை ஏற்று நடப்போம். ஆகவே, சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இன்னும் அதனுள் அல்லாஹ் படைத்த மற்ற படைப்புகளையும் வானம் வெளிப்படுத்தியது. மலை, செடி கொடி, நதி, கடல், ஊர், கிராமம், பாலைவனம், காடுகள் என தன்னில் உள்ளவற்றை பூமி வெளிப்படுத்தியது.) info
التفاسير: