আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
102 : 6

ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— خَالِقُ كُلِّ شَیْءٍ فَاعْبُدُوْهُ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟

அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. எனவே, அவனை வணங்குங்கள்; (அவன்) எல்லாவற்றின் படைப்பாளன்; அவன் எல்லாவற்றின் மீது கண்காணிப்பாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
103 : 6

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ ؗ— وَهُوَ یُدْرِكُ الْاَبْصَارَ ۚ— وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟

பார்வைகள் அவனை அடையாது. அவன்தான் பார்வைகளை அடைகிறான். அவன்தான் மிக நுட்பமானவன்; ஆழ்ந்தறிந்தவன். info
التفاسير:

external-link copy
104 : 6

قَدْ جَآءَكُمْ بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ عَمِیَ فَعَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟

உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. எவர் (அவற்றைப்) பார்த்தாரோ அது அவருக்குத்தான் நன்மை. எவர் குருடாகி விட்டாரோ (அது) அவருக்குத்தான் கேடாகும். (நீர் அவர்களை நோக்கி) "நான் உங்கள் மீது (ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்லை” (என்று நபியே! கூறுவீராக). info
التفاسير:

external-link copy
105 : 6

وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ وَلِیَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَیِّنَهٗ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

(நேர்வழி நாடுவோர் நேர்வழி பெற) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை விவரிக்கிறோம்). info
التفاسير:

external-link copy
106 : 6

اِتَّبِعْ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟

(நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் அறவே இல்லை. இணைவைப்பவர்களை புறக்கணிப்பீராக. info
التفاسير:

external-link copy
107 : 6

وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ؕ— وَمَا جَعَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۚ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟

அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை. info
التفاسير:

external-link copy
108 : 6

وَلَا تَسُبُّوا الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَیْرِ عِلْمٍ ؕ— كَذٰلِكَ زَیَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ۪— ثُمَّ اِلٰی رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَیُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை அன்றி எவர்களை அவர்கள் வணங்குகிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறிவின்றி வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே, ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயல்களை நாம் அலங்கரித்தோம். பிறகு, அவர்களுடைய இறைவனிடமே அவர்களுடைய மீட்சி இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) அவர்களுக்கு அறிவிப்பான். info
التفاسير:

external-link copy
109 : 6

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَتْهُمْ اٰیَةٌ لَّیُؤْمِنُنَّ بِهَا ؕ— قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ وَمَا یُشْعِرُكُمْ ۙ— اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا یُؤْمِنُوْنَ ۟

(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், "நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.” என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா? info
التفاسير:

external-link copy
110 : 6

وَنُقَلِّبُ اَفْـِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ یُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟۠

முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகிறோம்; அவர்களுடைய அட்டூழியத்தில் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை (விட்டு) விடுகிறோம். info
التفاسير: