Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: Junus   Ajet:
لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ— وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
10.26. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ள பாவங்களிலிருந்து விலகி சிறந்த முறையில் செயல்படுபவர்களுக்கு சுவனம் என்னும் மிகச் சிறந்த வெகுமதி இருக்கின்றது. இன்னும் மேலதிகமாக அவனுடைய திருமுகத்தைக் காணும் பாக்கியத்தையும் அவன் அவர்களுக்கு அளிப்பான். அவர்களின் முகங்களில் புழுதியோ அவமானமோ இழிவோ படர்ந்திருக்காது. சிறந்த முறையில் செயல்படக்கூடியவர்கள் என்று வர்ணிக்கப்பட்ட இவர்களே சுவனவாசிகளாவர். அங்கு என்றென்றும் அவர்கள் தங்கியிருப்பார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ— وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
10.27. அல்லாஹ்வை நிராகரித்தல், பாவங்கள் புரிதல் போன்ற தீயசெயல்களில் ஈடுபடுபவர்கள் மறுமை நாளில் அவர்கள் செய்த தீமைக்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் முகங்களில் இழிவும் அவமானமும் படர்ந்திருக்கும். அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கிவிட்டால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவர்களின் முகங்களைச் சூழ்ந்திருக்கும் நரக நெருப்பின் புகையாலும் கருமையாலும் இருளான இரவின் கருமையால் அவை மூடப்பட்டுள்ளதைப் போல் தோன்றும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நரகவாசிகளாவர். அங்கு என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ— فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟
10.28. -தூதரே!- நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. பின்னர் உலகில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களிடம் நாம் கூறுவோம்: “இணைவைப்பாளர்களே! நீங்களும் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிய தெய்வங்களும் உங்களின் இடத்திலேயே நில்லுங்கள். நாம் வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்தி விடுவோம். வணங்கப்பட்டவர்கள் தங்களை வணங்கியவர்களை நோக்கி, “நீங்கள் உலகில் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்.
Tefsiri na arapskom jeziku:
فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟
10.29. அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிய எல்லா தெய்வங்களும், “நீங்கள் எங்களை வணங்கியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எங்களை வணங்குமாறு உங்களுக்குக் கட்டளையிடவும் இல்லை. நாங்கள் உங்களின் வணக்கத்தையே அறியாதிருந்தோம் என்பதற்கு சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன்” என்று கூறி அவர்களை விட்டும் நீங்கி விடுவார்கள்.
Tefsiri na arapskom jeziku:
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
10.30. பயங்கரமான இந்த சூழலில் ஒவ்வொரு ஆன்மாவும் தான் இவ்வுலக வாழ்வில் செய்திருந்த செயல்களைக் பரிசோதித்துக்கொள்ளும். இணைவைப்பாளர்கள் தங்களின் உண்மையான இறைவனான அல்லாஹ்வின் பக்கம் கொண்டுவரப்படுவார்கள். அவனே அவர்களின் கேள்வி கணக்குக்குப் பொறுப்பாளனாவான். தமது சிலைகள் பரிந்துரை செய்வார்கள் என்று அவர்கள் கூறிய அவதூறு அவர்களை விட்டும் சென்று விடும்.
Tefsiri na arapskom jeziku:
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ— فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ— فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
10.31. தூதரே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? பூமியிலிருந்து தாவரங்களையும் இன்னபிற கனிமங்களையும் வெளிப்படுத்தி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து பறவையை வெளிப்படுத்துபவன் யார்? உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உதாரணமாக மிருகத்திலிருந்து விந்தை பறவயிலிருந்து முட்டையை வெளிப்படுத்துபவன் யார்? வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிலுமுள்ள எல்லா படைப்புகளையும் பராமரித்து நிர்வகிப்பவன் யார்? இவையனைத்தையும் செய்பவன் அல்லாஹ்தான் என்று அவர்கள் பதில் கூறுவார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் இவற்றை அறிய மாட்டீர்களா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”
Tefsiri na arapskom jeziku:
فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ— فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۚ— فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
10.32. -மனிதர்களே!- இவையனைத்தையும் செய்பவனே உங்களைப் படைத்த, உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற உண்மையான இறைவனான அல்லாஹ் ஆவான். சத்தியத்திற்குப் பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தெளிவான இச்சத்தியத்திலிருந்து உங்களுடைய சிந்தனைகள் எங்கு செல்கின்றன?
Tefsiri na arapskom jeziku:
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
10.33. -தூதரே!- அல்லாஹ் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பது உறுதியானது போல பிடிவாதத்தினால் சத்தியத்தை விட்டும் வெளியேறிவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்ற உம் இறைவனின் விதி ரீதியான வார்த்தையும் உறுதியாகி விட்டது.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• أعظم نعيم يُرَغَّب به المؤمن هو النظر إلى وجه الله تعالى.
1. அல்லாஹ்வின் திருமுகத்தைக் காணுவதே நம்பிக்கையாளரை ஆர்வமூட்டும் மிகப் பெரும் இன்பமாகும்.

• بيان قدرة الله، وأنه على كل شيء قدير.
2. அல்லாஹ்வின் ஆற்றலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• التوحيد في الربوبية والإشراك في الإلهية باطل، فلا بد من توحيدهما معًا.
3. அல்லாஹ்தான் அனைத்தையும் செய்கிறான் என்று நம்பி வணக்கவழிபாடுகளில் இணை வைப்பது தவறாகும். இரு பகுதிகளிலும் ஏகத்துவம் அவசியமாகும்.

• إذا قضى الله بعدم إيمان قوم بسبب معاصيهم فإنهم لا يؤمنون.
4. ஒரு சமுதாயத்தின் பாவங்களின் காரணமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என அல்லாஹ் முடிவுசெய்துவிட்டால் அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

 
Prijevod značenja Sura: Junus
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje