Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (18) Sura: Junus
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ— قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
10.18. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாத கற்பனைக் கடவுள்களை வணங்குகிறார்கள். வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவனால் மட்டுமே தான் நாடிய போது பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும். அவர்கள் தங்களின் தெய்வங்களைக் குறித்துக் கூறுகிறார்கள்: “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்துரை செய்யும் தரகர்களாகும். அதனால் அவன் எங்களின் பாவங்களினால் எங்களைத் தண்டிக்கமாட்டான். -”தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “வானங்களிலும் பூமியிலும் அவன் அறியாத ஒரு இணை உண்டு என்பதை அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்களா ? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களையும், அசத்தியத்தையும் விட்டு அவன் பரிசுத்தமானவன்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• عظم الافتراء على الله والكذب عليه وتحريف كلامه كما فعل اليهود بالتوراة.
1. யூதர்கள் தவ்ராத்தை திரித்தது போல அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து அவனது வார்த்தையைத் திரிவுபடுத்துவது மாபெரும் தவறாகும்.

• النفع والضر بيد الله عز وجل وحده دون ما سواه.
2. பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கைவசம் மாத்திரமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாாிடமும் இல்லை.

• بطلان قول المشركين بأن آلهتهم تشفع لهم عند الله.
3. தங்களின் சிலைகள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற இணைவைப்பாளர்களின் வாதம் தவறானதாகும்.

• اتباع الهوى والاختلاف على الدين هو سبب الفرقة.
4. மனஇச்சையைப் பின்பற்றுவதும் மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும் பிரிவினைக்கான காரணங்களாகும்.

 
Prijevod značenja Ajet: (18) Sura: Junus
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje