Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: El-Enbija   Ajet:
قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ— وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟
21.45. -தூதரே!- நீர் கூறுவீராக: “-மக்களே!- என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து நான் உங்களை எச்சரிக்கிறேன். ஆயினும் சத்தியத்தை செவியேற்காத செவிடர்களுக்கு, அல்லாஹ்வின் வேதனையைக்கொண்டு எச்சரிக்கப்பட்டால், அவர்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க மாட்டார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.46. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களை உம் இறைவனுடைய வேதனையின் ஒரு பகுதி தீண்டிவிட்டால், “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி, முஹம்மது நபி கொண்டுவந்ததை பொய்ப்பித்து அக்கிரமக்காரர்களாக இருந்தோமே” என்று அந்த நேரத்தில் கூறுவார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ— وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ— وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟
21.47. நாம் மறுமையில் மனிதர்களின் செயல்களை எடைபோடுவதற்காக நியாயமான தராசுகளை நிறுவுவோம். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ எவர் மீதும் அநீதி இழைக்கப்படாது. ஒருவரின் எடை மிகவும் குறைவானதாக கடுகளவு செயல் போன்று இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். எங்களது அடியார்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நாமே போதுமானவர்களாவோம்.
Tefsiri na arapskom jeziku:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
21.48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் அதனை நம்பிக்கைகொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும் தங்கள் இறைவனை அஞ்சியவர்களுக்கு நினைவூட்டலாகவும் இருந்தது.
Tefsiri na arapskom jeziku:
الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟
21.49. காணாமலேயே தாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவனின் வேதனையை அஞ்சியவர்கள் மறுமையைக்குறித்து அச்சத்தோடு உள்ளனர்.
Tefsiri na arapskom jeziku:
وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ— اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠
21.50. முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அறிவுரை பெற விரும்பக்கூடியவர்களுக்கு உபதேசமாகவம் அறிவுரையாகவும் அதிக பலன்களையும் நன்மைகளையும் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இருந்தும் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அதன்படி செயல்படாமல் மறுக்கிறீர்களா?
Tefsiri na arapskom jeziku:
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
21.51. நாம் இப்ராஹீமுக்கு சிறு வயதிலேயே அவருடைய சமூகத்திற்கு எதிராக ஆதாரத்தை வழங்கினோம். நாம் அவரைக்குறித்து நன்கறிந்தவர்களாக இருந்தோம். எனவேதான் நமது அறிவின் பிரகாரம் அவரது சமூகத்துக்கு எதிராக அவருக்குத் தகுதியான சான்றை வழங்கினோம்.
Tefsiri na arapskom jeziku:
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟
21.52. இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “உங்கள் கைகளால் செய்துகொண்டு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள்தான் என்ன?”
Tefsiri na arapskom jeziku:
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟
21.53. அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களை இவற்றை வணங்குபவர்களாகவே கண்டோம். அவர்களைப் பின்பற்றி நாங்களும் இவற்றை வணங்குகிறோம்.”
Tefsiri na arapskom jeziku:
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
21.54. இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறினார்: -“பின்பற்றுபவர்களான- நீங்களும் பின்பற்றப்படும் உங்கள் முன்னோர்களும் தெளிவான சத்தியத்தை விட்டுவிட்டு தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”
Tefsiri na arapskom jeziku:
قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟
21.55. அவருடைய சமூகத்தார் கேட்டார்கள்: “நீர் எங்களிடம் கூறும் போது உண்மையாகத்தான் கூறுகிறீரா? அல்லது நீர் நகைச் சுவையாகக் கூறுகிறீரா?”
Tefsiri na arapskom jeziku:
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ— وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
21.56. இப்ராஹீம் கூறினார்: “நான் கூறுவது வேடிக்கையல்ல உண்மையே. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன். வானங்களையும் பூமியையும் படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன் என்று நிச்சயமாக நான் சாட்சி கூறுகின்றேன். உங்களின் சிலைகளுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.
Tefsiri na arapskom jeziku:
وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟
21.57. அவருடைய சமூகத்தினருக்குக் கேட்டுவிடாமல் இப்ராஹீம் கூறினார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் உங்களின் சிலைகளை விட்டு விட்டு உங்கள் பண்டிகைக்குச் சென்ற பிறகு நீங்கள் விரும்பாததை (உங்களின் சிலைகளுக்கு நான் திட்டம் தீட்டுவேன்).”
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• نَفْع الإقرار بالذنب مشروط بمصاحبة التوبة قبل فوات أوانها.
1. மனிதனுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிவதற்கு முன்னரே அவன் பாவத்தை ஒத்துக்கொண்டுவிட்டேன் என்ற நிபந்தனையுடன் மன்னிப்புக் கோரினால்தான் அது அவனுக்குப் பயனளிக்கும்.

• إثبات العدل لله، ونفي الظلم عنه.
2. அல்லாஹ்வின் நீதியை நிரூபித்து, அவனை விட்டும் அநீதியை மறுத்தல்.

• أهمية قوة الحجة في الدعوة إلى الله.
3. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதில் பலமான ஆதாரத்தின் முக்கியத்துவம்.

• ضرر التقليد الأعمى.
4. கண்மூடித்தனமாக பின்பற்றுவதின் பாதிப்பு.

• التدرج في تغيير المنكر، والبدء بالأسهل فالأسهل، فقد بدأ إبراهيم بتغيير منكر قومه بالقول والصدع بالحجة، ثم انتقل إلى التغيير بالفعل.
5. தீமையைத் தடுப்பதில் படிமுறையைக் கையாண்டு முதலில் இலகுவானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவேதான் இப்ராஹீம் அலை அவர்கள் தனது சமூகம் செய்த தீமையை வார்த்தையின் மூலமும் ஆதாரத்தை எடுத்துக்கூறுவதன் மூலமும் தடுக்க ஆரம்பித்தார்கள். பின்பு செயல் ரீதியாகத் தடுத்தார்கள்.

 
Prijevod značenja Sura: El-Enbija
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje