Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: En-Nur   Ajet:
رِجَالٌ ۙ— لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ— یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۙ
24.37. அந்த மனிதர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும், தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுவதை விட்டும், ஸகாத்தை உரியவர்களுக்கு கொடுப்பதை விட்டும் அவர்களைத் பராக்காக்கிவிடாது. அவர்கள் மறுமை நாளை அஞ்சுவார்கள். அந்த நாளில் உள்ளங்கள் வேதனையில் இருந்து தப்பும் எதிர்பார்ப்பு சிக்கிவிடுவோம் என்ற அச்சம் ஆகியவற்றுக்கிடையில் தடுமாறிக் கொண்டிருக்கும். பார்வைகள் எங்கு செல்லும் என பிரண்டுகொண்டிருக்கும்.
Tefsiri na arapskom jeziku:
لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
24.38. அவர்கள் செயல்பட்டதெல்லாம் அவர்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்க வேண்டும் என்பதற்காகவும் தன் அருளால் அவன் அவர்களுக்கு இன்னும் அதிகமான கூலி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தான் நாடியோருக்கு அவர்களின் செயல்களுக்கேற்ப கணக்கின்றி வழங்குகிறான். மாறாக அவர்கள் செய்தவற்றுக்குப் பலமடங்கு கூலியை வழங்குகிறான்.
Tefsiri na arapskom jeziku:
وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ— حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ— وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ
24.39. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் செய்த செயல்களுக்கு எவ்வித கூலியும் இல்லை. அவை பூமியின் சமதரையில் காணப்படும் கானல் நீரைப் போன்றதாகும். தாகித்தவன் அதனை தண்ணீர் என்று எண்ணுகிறான். அதன் அருகில் வரும்போது எதையும் அவன் காண மாட்டான். இவ்வாறே நிராகரிப்பாளன் தான் செய்த செயல்கள் தனக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் இறந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டால் எதையும் அவன் பெற மாட்டான். தனக்கு முன்னால் அல்லாஹ்வையே காண்பான். அல்லாஹ் அவன் செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி வழங்கிடுவான். அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன்.
Tefsiri na arapskom jeziku:
اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ— ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ— اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ— وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠
24.40. அல்லது அவனுடைய செயல்கள் ஆழ்கடலின் இருள்களைப் போன்றதாகும். அதற்கு மேல் அலை இருக்கிறது. அதற்கு மேல் அடுக்கடுக்காக அலைகள் இருக்கின்றன. அதற்கு மேல் மேகம் வழிகாட்டும் நட்சத்திரங்களை மறைக்கிறது. அடுக்கடுக்கான இருள்கள். ஒருவன் இந்த இருள்களில் தன் கையை வெளியே நீட்டினால் காரிருளின் காரணமாக அவனால் எதையும் பார்க்க முடியாது. இவ்வாறே நிராகரிப்பாளனை அறியாமை, சந்தேகம், தடுமாற்றம், உள்ளத்தில் முத்திரை போன்ற இருள்கள் அடுக்கடுக்காக சூழ்ந்துள்ளன. அல்லாஹ் யாருக்கு வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் தன் வேதத்தைப் பற்றிய அறிவையும் வழங்கவில்லையோ அவருக்கு நேர்வழியை பெற வழிகாட்டக்கூடியவனோ, பிரகாசம் பெறத்தக்க வேதமோ கிடையாது.
Tefsiri na arapskom jeziku:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ— كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
24.41. -தூதரே!- நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்பினங்களும் காற்றில் இறக்கைகளை விரித்தவாறு பறவைகளும் அல்லாஹ்வைப் புகழ்கின்றன என்பதை நீர் அறியமாட்டீரா? இந்த படைப்பினங்கள் அனைத்திலும் மனிதனைப் போன்று தொழுபவர்களின் தொழுகையையும் பறவை போன்று புகழ்பவையின் புகழையும் அல்லாஹ் அறிந்துள்ளான். அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Tefsiri na arapskom jeziku:
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
24.42. வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. மறுமையில் விசாரணைக்காகவும் கூலிக்காகவும் அனைவரும் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.
Tefsiri na arapskom jeziku:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ— وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ— یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ
24.43. -தூதரே!- நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை இழுத்து வந்து பின்னர் அவற்றின் சில பகுதிகளை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, பலத்தால் மலைபோன்ற கனமான மேகத்திலிருந்து சிறுகற்கலைப் போன்ற ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த குளிர்ந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை விட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் கடும் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• موازنة المؤمن بين المشاغل الدنيوية والأعمال الأخروية أمر لازم.
1. ஒரு நம்பிக்கையாளன் இவ்வுலக காரியங்கள், மறுவுலகக் அமல்களுக்கிடையில் சமநிலை பேணுவது அவசியமான விடயமாகும்.

• بطلان عمل الكافر لفقد شرط الإيمان.
2. ஈமான் எனும் நிபந்தனையை இழந்ததனால் நிராகரிப்பாளனின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

• أن الكافر نشاز من مخلوقات الله المسبِّحة المطيعة.
3. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்து கொண்டிருக்கும் படைப்புகளுக்கு மத்தியில் நிச்சயமாக நிராகரிப்பாளனே ஒதுங்கிநிற்கிறான்.

• جميع مراحل المطر من خلق الله وتقديره.
4. மழையின் அனைத்து கட்டங்களும் அல்லாஹ்வின் படைத்தல் மற்றும் நிர்ணயித்தலில் உள்ளதாகும்.

 
Prijevod značenja Sura: En-Nur
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje