Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

Broj stranice:close

external-link copy
75 : 39

وَتَرَی الْمَلٰٓىِٕكَةَ حَآفِّیْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ ۚ— وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَقِیْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

39.75. இந்நாளில் வானவர்கள் அர்ஷைச் சூழ்ந்திருப்பார்கள். நிராகரிப்பாளர்கள் கூறும் பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ்வை அவர்கள் தூய்மைப்படுத்துவார்கள். அவன் படைப்புகள் அனைத்திற்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். கண்ணியத்திற்கு உரியவர்களை கண்ணியப்படுத்துவான். வேதனைக்குரியவர்களை வேதனைக்கு உள்ளாக்குவான். நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது அருள்புரிந்து, நிராகரித்த தன் அடியார்களைத் தண்டித்து வழங்கிய தீர்ப்புக்காக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறப்படும். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الجمع بين الترغيب في رحمة الله، والترهيب من شدة عقابه: مسلك حسن.
1. அல்லாஹ்வின் கருணையில் ஆர்வமூட்டுதல், அவனுடைய தண்டனையின் கடுமையை விட்டும் எச்சரித்தல் ஆகிய இரண்டையும் ஒன்றுசேர மேற்கொள்வது சிறந்த வழிமுறையாகும். info

• الثناء على الله بتوحيده والتسبيح بحمده أدب من آداب الدعاء.
2.அல்லாஹ்வின் ஏகத்துவத்தைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவனது புகழைக் கொண்டு துதிப்பது பிரார்த்தனையின் ஓர் ஒழுங்காகும். info

• كرامة المؤمن عند الله؛ حيث سخر له الملائكة يستغفرون له.
3. அல்லாஹ்விடத்தில் நம்பிக்கையாளனுக்குள்ள கண்ணியத்தினால், வானவர்களை அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதில் அல்லாஹ் ஈடுபடுத்தியு்ளளான். info