Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
146 : 4

اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ— وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟

4.146. ஆயினும் தமது நயவஞ்சகத்திலிருந்து பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தங்கள் உள்ளத்தை சீர்படுத்தி, அவனிடம் செய்த வாக்குறுதியைப் பேணி தங்களின் செயல்களை முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களைத் தவிர. இந்த பண்புகளை உடையவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் பெரும் கூலியை வழங்கிடுவான். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• بيان صفات المنافقين، ومنها: حرصهم على حظ أنفسهم سواء كان مع المؤمنين أو مع الكافرين.
1. நயவஞ்சகர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. நம்பிக்கையாளர்ளுடன் இருந்தாலும் நிராகரிப்பாளர்களுடன் இருந்தாலும் தங்களின் பங்கினைப் பெறுவதில் அவர்களது பேராசை அவற்றில் ஒன்றாகும். info

• أعظم صفات المنافقين تَذَبْذُبُهم وحيرتهم واضطرابهم، فلا هم مع المؤمنين حقًّا ولا مع الكافرين.
2. நயவஞ்சகர்களின் பண்புகளில் மிகப்பிரதானமானது, தடுமாற்றமும் குழப்பமும் உறுதியற்ற தன்மையுமாகும். அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். நிராகரிப்பாளர்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். info

• النهي الشديد عن اتخاذ الكافرين أولياء من دون المؤمنين.
3. நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பாளர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். info

• أعظم ما يتقي به المرء عذاب الله تعالى في الآخرة هو الإيمان والعمل الصالح.
4. ஈமானும் நற்செயல்களுமே மறுமையில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காக்கும் முக்கிய காரணிகளாகும். info