Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: El-A'araf   Ajet:
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ— وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
7.23. ஆதமும் ஹவ்வாவும் பிரார்த்தித்தார்கள்: “எமது இறைவா! குறிப்பிட்ட மரத்திலிருந்து உண்ண வேண்டாம் என நீ தடுத்ததைச் செய்து, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது கருணை காட்டவில்லையெனில் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உள்ள எமது பங்கைத் தவறவிட்டு நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்.”
Tefsiri na arapskom jeziku:
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
7.24. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் இப்லீசுக்கும் அல்லாஹ் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடம் உண்டு. குறிப்பிட்ட தவணைவரை அதிலுள்ளவற்றை அனுபவிக்கவும் முடியும்.”
Tefsiri na arapskom jeziku:
قَالَ فِیْهَا تَحْیَوْنَ وَفِیْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ۟۠
7.25. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அல்லாஹ் கூறினான்: “இப்பூமியிலே அல்லாஹ் நிர்ணயித்த தவணை வரை நீங்கள் வாழ்வீர்கள். இங்குதான் மரணிப்பீர்கள், அடக்கம் செய்யப்படுவீர்கள். உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்தே நீங்கள் மீண்டும் எழுப்பபடுவீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ— وَلِبَاسُ التَّقْوٰی ۙ— ذٰلِكَ خَیْرٌ ؕ— ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
7.26. ஆதமுடைய மக்களே! உங்களின் வெட்கத்தலங்களை மறைப்பதற்கு அத்தியவசியமான ஆடைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களிடத்தில் உங்களை அழகுபடுத்தும் பரிபூரணமான ஆடைகளையும் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நீங்கள் கடைப்பிடிக்கும் தக்வா என்னும் ஆடையே வெளிரங்கமான இந்த ஆடையை விட மிகச் சிறந்ததாகும். மேற்குறிப்பிட்ட இந்த ஆடை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். இது, அவன் உங்கள் மீது புரிந்த அருட்கொடைகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
Tefsiri na arapskom jeziku:
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ— اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ— اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
7.27. ஆதமுடைய மக்களே! பாவங்களை அலங்கரித்துக் காட்டி வெட்கத்தலங்களை மறைக்கும் வெளிரங்கமான ஆடையையோ தக்வா எனும் ஆடையையோ விட்டுவிடுமாறு ஷைத்தான் பாவத்தை உங்களுக்கு அலங்கரித்து ஏமாற்றிவிட வேண்டாம். தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்பதை அலங்கரித்துக் காட்டி உங்களின் தந்தையையும் தாயையும் அவன் ஏமாற்றி அதன் விளைவாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. ஷைத்தானும் அவனுடைய சந்ததிகளும் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களால் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவனிடமிருந்தும் அவனுடைய சந்ததிகளிடமிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தானை நேசர்களாக ஆக்கியுள்ளோம். நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்த முடியாது.
Tefsiri na arapskom jeziku:
وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَیْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ— قُلْ اِنَّ اللّٰهَ لَا یَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ— اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
7.28. இணைவைப்பாளர்கள் இணைவைப்பு, நிர்வாணமாக கஃபாவை வலம் வருதல் போன்ற ஏதேனும் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, தங்கள் முன்னோர்களும் இவ்வாறே செய்து கொண்டிருந்ததாகவும், அல்லாஹ்தான் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான் என்றும் காரணம் கூறுகின்றனர். முஹம்மதே! நீர் அவர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “அல்லாஹ் பாவங்கள் புரியும்படி ஏவமாட்டான். மாறாக பாவங்கள் புரிவதைத் தடுக்கிறான். அவ்வாறிருக்கும் போது அவன்தான் பாவங்களை ஏவினான் என எவ்வாறு கூறலாம்? இணைவைப்பாளர்களே! நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?”
Tefsiri na arapskom jeziku:
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫— وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬— كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
7.29. முஹம்மதே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீதியாக நடக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். மானக்கேடானவற்றையும் தீயவற்றையும் அவன் கட்டளையிடுவதில்லை. பொதுவாகவும் குறிப்பாக பள்ளிவாயில்களிலும் அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை உரித்தாக்க வேண்டும், அவனிடம் மட்டுமே கீழ்ப்படிந்து பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஆரம்பத்தில் இல்லாததிலிருந்து உங்களைப் படைத்தது போன்று மீண்டும் உயிரோடு உங்களைக் கொண்டுவருவான். உங்களை ஆரம்பத்தில் படைத்தவன் உங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஆற்றலுடையவன்.
Tefsiri na arapskom jeziku:
فَرِیْقًا هَدٰی وَفَرِیْقًا حَقَّ عَلَیْهِمُ الضَّلٰلَةُ ؕ— اِنَّهُمُ اتَّخَذُوا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
7.30. அல்லாஹ் மனிதர்களை இரு பிரிவினராக ஆக்கியுள்ளான். அவர்களில் ஒரு பிரிவினருக்கு நேர்வழிகாட்டி நேர்வழிக்கான வழிகளையும் அவர்களுக்கு இலகுபடுத்தி தடைகளையும் அகற்றியுள்ளான். மற்றொரு பிரிவினர் மீது நேர்வழியை விட்டும் வழிகேடு உறுதியாகிவிட்டது. அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமையினால் அந்த ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டார்கள். தாங்கள் நேர்வழியில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• من أَشْبَهَ آدم بالاعتراف وسؤال المغفرة والندم والإقلاع - إذا صدرت منه الذنوب - اجتباه ربه وهداه. ومن أَشْبَهَ إبليس - إذا صدر منه الذنب بالإصرار والعناد - فإنه لا يزداد من الله إلا بُعْدًا.
1. பாவம் நிகழ்ந்தவுடன் ஆதம் அலை அவர்களைப் போல் ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டி வருந்தி அதனை விட்டும் விலகிக் கொள்பவரை அவனது இறைவன் தேர்ந்தெடுத்து வழிகாட்டுவான். இப்லீஸைப் போல் பாவத்திலேயே தொடர்ந்து பிடிவாதமாக இருப்பவர் அல்லாஹ்வை விட்டும் மென்மேலும் தூரமாகிச் செல்வார்.

• اللباس نوعان: ظاهري يستر العورةَ، وباطني وهو التقوى الذي يستمر مع العبد، وهو جمال القلب والروح.
2. இரண்டு வகையான ஆடைகள் இருக்கின்றன. ஒன்று, அடியானின் மறைவிடங்களை மறைக்கக்கூடிய வெளிப்படையான ஆடை. இரண்டு, அடியானுடன் தொடராக இருக்கக்கூடிய, தக்வா என்னும் மறைமுக ஆடை. அதுவே உள்ளம் மற்றும் ஆன்மாவின் அழகாகும்.

• كثير من أعوان الشيطان يدعون إلى نزع اللباس الظاهري؛ لتنكشف العورات، فيهون على الناس فعل المنكرات وارتكاب الفواحش.
3. ஷைத்தானின் உதவியாளர்களில் பெரும்பாலோர், மறைவிடங்கள் தெரிவதற்காக வெளிப்படையான ஆடையைக் களைவதன்பால் அழைப்பு விடுக்கிறார்கள். இதனால் மானக்கேடான, தீய காரியங்களில் ஈடுபடுவது மக்களுக்கு சர்வ சாதாரணமாகிவிடுகிறது.

• أن الهداية بفضل الله ومَنِّه، وأن الضلالة بخذلانه للعبد إذا تولَّى -بجهله وظلمه- الشيطانَ، وتسبَّب لنفسه بالضلال.
4. நேர்வழி, அல்லாஹ்வின் அருள் மற்றும் கிருபையினால் கிடைப்பதாகும். வழிகேடு, அடியான் தனது அறியாமை மற்றும் அக்கிரமத்தினால் ஷைத்தானுடன் நேசம்கொண்டு வழிகேட்டுக்குத் தானாகவே காரணமாகும் போது அல்லாஹ் அவனைக் கைவிடுவதன் மூலம் ஏற்படும் விளைவாகும்.

 
Prijevod značenja Sura: El-A'araf
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje