Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (118) Sura: Et-Tevba
وَّعَلَی الثَّلٰثَةِ الَّذِیْنَ خُلِّفُوْا ؕ— حَتّٰۤی اِذَا ضَاقَتْ عَلَیْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَیْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَیْهِ ؕ— ثُمَّ تَابَ عَلَیْهِمْ لِیَتُوْبُوْا ؕ— اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟۠
9.118. தபூக் போருக்கு தூதருடன் புறப்படாமல் பின்தங்கியதனால் பாவமன்னிப்பு ஏற்கப்படுவது பிற்போடப்பட்ட மூவர்களான கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீஃ, ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தூதர் அந்த மூவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மக்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். எந்த அளவுக்கெனில் பூமி விசாலமாக இருந்த போதும் அது அவர்களை நெருக்கடியாகி விட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட தனிமையினால் அவர்களது உள்ளங்கள நெருக்கடிக்குள்ளாகின. அல்லாஹ்வைத் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்து அவர்கள் மீது கருணை காட்டினான். பின்னர் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். தனது அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• وجوب تقوى الله والصدق وأنهما سبب للنجاة من الهلاك.
1. அல்லாஹ்வை அஞ்சுவதும் உண்மை பேசுவதும் கட்டாயமாகும். அவை அழிவிலிருந்து தப்புவதற்கான காரணிகளாகும்.

• عظم فضل النفقة في سبيل الله.
2. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் சிறப்பின் மகத்துவம் தெளிவாகிறது.

• وجوب التفقُّه في الدين مثله مثل الجهاد، وأنه لا قيام للدين إلا بهما معًا.
3. மார்க்கத்தில் தெளிவு பெறுவது கட்டாயமாகும். அது போர் புரிவதற்குச் சமனாகும். அவையிரண்டின் மூலமே மார்க்கம் நிலைக்கும்.

 
Prijevod značenja Ajet: (118) Sura: Et-Tevba
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje