Meningsmæssige oversættelser af Den Hellige Koran - Den tamilske oversættelse af "Al-Mukhtasar fi Tafsir al-Quran al-Karim"

external-link copy
3 : 11

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ— وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟

11.3. -மக்களே!- உங்கள் இறைவனிடம் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருங்கள். அவன் விடயத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு அவன் பக்கம் திரும்புங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணைகள் வரை அவன் உங்களை நல்ல முறையில் அனுபவிக்கச் செய்வான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிந்த ஒவ்வொருவருக்கும் அவன் குறைவின்றி நிறைவாக தன் அருளை வழங்கிடுவான். நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததன் மீது நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் புறக்கணித்தால் உங்கள் மீது பயங்கரமான நாளான மறுமை நாளின் வேதனையைக் குறித்து அஞ்சுகிறேன். info
التفاسير:
Hovedpunkter omkring versene på denne side:
• إن الخير والشر والنفع والضر بيد الله دون ما سواه.
1. நலவும், கெடுதியும், பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வேறுயாராலும் முடியாது. info

• وجوب اتباع الكتاب والسُّنَّة والصبر على الأذى وانتظار الفرج من الله.
2. குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதும் அதில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ்விடம் விடுதலையை எதிர்பார்ப்பதும் கட்டாயமாகும். info

• آيات القرآن محكمة لا يوجد فيها خلل ولا باطل، وقد فُصِّلت الأحكام فيها تفصيلًا تامَّا.
3. குர்ஆனின் வசனங்கள் தீர்க்கமானவை. அதில் குறைகளோ அசத்தியமோ காணப்படாது. அதில் சட்டங்கள் மிகவும் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. info

• وجوب المسارعة إلى التوبة والندم على الذنوب لنيل المطلوب والنجاة من المرهوب.
4.எதிர்பார்ப்பதை அடைந்து அஞ்சுவதை விட்டும் தப்புவதற்காக தவ்பாவின் பக்கமும் பாவங்களை விட்டு வருந்துவதன் பக்கமும் விரைவது அவசியமாகும். info