Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Abdulhamid Albaqoi * - Übersetzungen

XML CSV Excel API
Please review the Terms and Policies

Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anʿām   Vers:
اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰی ؕ— یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَمُخْرِجُ الْمَیِّتِ مِنَ الْحَیِّ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
95. வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَالِقُ الْاِصْبَاحِ ۚ— وَجَعَلَ الَّیْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ؕ— ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
96. அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ ؕ— قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
97. உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ؕ— قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّفْقَهُوْنَ ۟
98. (மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَهُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ— فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَیْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا ۚ— وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِیَةٌ ۙ— وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— اُنْظُرُوْۤا اِلٰی ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَیَنْعِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكُمْ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
99. அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِیْنَ وَبَنٰتٍ بِغَیْرِ عِلْمٍ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوْنَ ۟۠
100. (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَنّٰی یَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ؕ— وَخَلَقَ كُلَّ شَیْءٍ ۚ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anʿām
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Abdulhamid Albaqoi - Übersetzungen

Übersetzt von Scheich Abdulhamid Albaqoi.

Schließen