Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Abdulhamid Albaqoi * - Übersetzungen

XML CSV Excel API
Please review the Terms and Policies

Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anʿām   Vers:
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِیْنَ ظَلَمُوْا ؕ— وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
45. ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே!
Arabische Interpretationen von dem heiligen Quran:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَاَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰی قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِهٖ ؕ— اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ ثُمَّ هُمْ یَصْدِفُوْنَ ۟
46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قُلْ اَرَءَیْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ ۟
47. (நபியே! அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?''
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ— فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
48. (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا یَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
49. ஆனால், (உங்களில்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قُلْ لَّاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ لَكُمْ اِنِّیْ مَلَكٌ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ؕ— اَفَلَا تَتَفَكَّرُوْنَ ۟۠
50. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاَنْذِرْ بِهِ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْ یُّحْشَرُوْۤا اِلٰی رَبِّهِمْ لَیْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
51. (நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَلَا تَطْرُدِ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ ؕ— مَا عَلَیْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَیْهِمْ مِّنْ شَیْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِیْنَ ۟
52. (நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
Arabische Interpretationen von dem heiligen Quran:
 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anʿām
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Abdulhamid Albaqoi - Übersetzungen

Übersetzt von Scheich Abdulhamid Albaqoi.

Schließen