Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-An‘ām   Ayah:
فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ ۚ— وَلَا یُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
6.147. தூதரே! உம் இறைவனிடமிருந்து நீர் கொண்டு வந்ததை அவர்கள் உண்மைப்படுத்தாமல் உம்மைப் பொய்யர் என்று கூறினால் ஆர்வமூட்டும் விதமாக அவர்களிடம்: “உங்களின் இறைவன் கருணை காட்டுவதில் தாராளமானவன். உங்களை அவன் உடனுக்குடன் தண்டிக்காமல் அவகாசம் அளிப்பதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான், எனவும், எச்சரிக்கும் விதமாக அவர்களிடம்: பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட்டவர்களை விட்டும் அவனுடைய தண்டனை திருப்பப்படாது.” எனவும் கூறுவீராக.
Arabic explanations of the Qur’an:
سَیَقُوْلُ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰی ذَاقُوْا بَاْسَنَا ؕ— قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَا ؕ— اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ۟
6.148. அல்லாஹ்வின் நாட்டத்தையும் விதியையும் தங்களின் இணைவைப்பு சரி என்பதற்கு ஆதாரமாக்கி இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்திருக்கமாட்டோம். நாம் எம்மீது தடைசெய்துகொண்டவற்றை நாம் தடைசெய்யக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அதனை நாம் தடைசெய்திருக்கமாட்டோம்.” இவர்களது தவறான வாதம் போன்றவற்றைக் கொண்டே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் தங்களின் தூதர்களை நிராகரித்தார்கள். “நாம் அவர்களை நிராகரிக்கக் கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை நிராகரித்திருக்க மாட்டோம்” என்று கூறினார்கள். நாம் அவர்கள் மீது இறக்கிய வேதனையைச் சுவைக்கும் வரை இந்த நிராகரிப்பில் அவர்கள் நிலைத்திருந்தார்கள். தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை விரும்புகிறான் அல்லது அவன் தடைசெய்தவற்றை அனுமதிப்பதையும், அனுமதித்ததை தடைசெய்வதையும் அவன் விரும்புகிறான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? நீங்கள் இவ்வாறு செய்வது மாத்திரம் அல்லாஹ் திருப்தியடைந்தான் என்பதற்கான ஆதாரமல்ல. நிச்சயமாக நீங்கள் யூகங்களையே பின்பற்றுகிறீர்கள். சத்தியத்திற்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. நீங்கள் பொய்தான் கூறுகிறீர்கள்.
Arabic explanations of the Qur’an:
قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ ۚ— فَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟
6.149. தூதரே! இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த பலவீனமான ஆதாரங்களைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரம் இல்லையெனில் நீங்கள் கூறும் சாக்குப் போக்குகள் அனைத்தையும் இல்லாமலாக்கும், உங்களின் ஆட்சேபனைகள் அனைத்தையும் தவறு என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இணைவைப்பாளர்களே! அவன் உங்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்ட நாடியிருந்தால் நேர்வழிகாட்டியிருப்பான்.”
Arabic explanations of the Qur’an:
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِیْنَ یَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ۚ— فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟۠
6.150. அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்து ‘அல்லாஹ்தான் தடைசெய்தான்’ என்று வாதிடும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் இவற்றை தடைசெய்தான் என்பதற்கான சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்.” அல்லாஹ்தான் தடைசெய்தான் என்று அறிவில்லாமல் அவர்கள் சாட்சிகூறினால் அவர்களின் சாட்சியத்தை நீர் உண்மைப்படுத்தாதீர். ஏனெனில் அது பொய்சாட்சியாகும். தங்களின் மனஇச்சையின்படி செயல்படுபவர்களின் மனஇச்சையை நீர் பின்பற்றாதீர். அல்லாஹ் அனுமதித்ததை அவர்கள் தடைசெய்த போது நம்முடைய வசனங்களை மறுத்துவிட்டனர். மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைத்து மற்றவர்களை அவனுடன் சமமாக்குகின்றனர். தங்கள் இறைவனுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்களை எவ்வாறு பின்பற்றுவது?
Arabic explanations of the Qur’an:
قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ۚ— وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ ؕ— نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ ۚ— وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ— وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
6.151. தூதரே! மக்களிடம் நீர் கூறுவீராக: “வாருங்கள், அல்லாஹ் தடைசெய்ததை நான் உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்: தனது படைப்புகளில் எவரையும் அவனுக்கு இணையாக ஆக்குவதையும் தாய் தந்தையருடன் முறையற்று நடந்து கொள்வதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அறியாமைக்கால மக்கள் செய்தது போன்று வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மானக்கேடான காரியங்களை நெருங்குவதையும், அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை, திருமணத்தின் பின் விபச்சாரத்தில் ஈடுபடல், இஸ்லாத்தை விட்டு மதம் மாறுதல் போன்ற உரிய காரணமின்றி கொல்வதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வின் ஏவல்களையும் விலக்கல்களையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டே அவன் மேற்கூறிய அறிவுரையை வழங்கியுள்ளான்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• الحذر من الجرائم الموصلة لبأس الله؛ لأنه لا يُرَدُّ بأسه عن القوم المجرمين إذا أراده.
1. அல்லாஹ்வின் தண்டனையின்பால் இட்டுச் செல்லும் குற்றங்களை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குற்றவாளிகளுக்கு அல்லாஹ் வழங்கும் தண்டனையை அவன் நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது.

• الاحتجاج بالقضاء والقدر بعد أن أعطى الله تعالى كل مخلوق قُدْرة وإرادة يتمكَّن بهما من فعل ما كُلِّف به؛ ظُلْمٌ مَحْض وعناد صرف.
2. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் நாட்டத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கிய பிறகு விதியை ஆதாரமாகக் கொண்டு தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பது பெரும் அநியாயமும் பிடிவாதமுமாகும்.

• دَلَّتِ الآيات على أنه بحسب عقل العبد يكون قيامه بما أمر الله به.
3. அடியானுக்கு வழங்கப்பட்ட அறிவுக்கேற்பவே அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவான் என்ற விஷயம் வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

• النهي عن قربان الفواحش أبلغ من النهي عن مجرد فعلها، فإنه يتناول النهي عن مقدماتها ووسائلها الموصلة إليها.
4. மானக்கேடான விடயங்களைச் செய்ய வேண்டாம் எனத் தடைசெய்வதை விட அவற்றை நெருங்கக்கூட வேண்டாம் எனத் தடைசெய்வது மிகச் சிறந்ததாகும். ஏனெனில் அது மானக்கேடானவற்றுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் சாதனங்களையும் தடைசெய்வதாக அமைகின்றது.

 
Translation of the meanings Surah: Al-An‘ām
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close