அவன் (-அல்லாஹ்) கூறினான்: அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.
அது (-என்னை நீ வளர்த்தது) நீ என் மீது சொல்லிக் காட்டுகின்ற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என்னை அடிமையாக்கவில்லை, ஆனால், என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய்.
மூசா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் (எவற்றை நீங்கள் பார்க்கின்றீர்களோ அவற்றை நீங்கள் பார்ப்பதைப் போன்று) உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்).
அவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே, சிந்தியுங்கள்!)
அவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது சூனியத்தால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள் தான் வெற்றியாளர்கள்”என்று அவர்கள் கூறினர்.
அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: அவரை (அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை என்று) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் (-மூஸா) உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் மூத்தவர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும் போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். (பிறகு,) உங்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்.
எனினும், யார் சந்தேகப்படாத (உன்னை மட்டும் வணங்குவதிலும் மறுமையை நம்புவதிலும் ஐயமில்லாத, சுத்தமான) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவருக்கு அவரது உள்ளம் பயன்தரும்).
அவர்களிடம் கேட்கப்படும்:) “அல்லாஹ்வை அன்றி (நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?)” (அல்லாஹ்வை அன்றி) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமா?
ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
அவர் கூறினார்: இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.
நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆனை) கேட்பதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (அதை அவர்களால் நெருங்கவே முடியாது.)
இன்னும், சிரம் பணிபவர்களுடன் (-உம்மை பின்பற்றி தொழுபவர்களுடன்) (நின்ற நிலையிலிருந்து குனிதல், பிறகு அதிலிருந்து சிரம் பணிதல், இப்படி ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு) புரலுவதையும் (-மாறுவதையும் அவன் பார்க்கிறான்).
நிச்சயமாக அவன்தான் நன்கு செவி ஏற்பவன், நன்கு அறிந்தவன். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக! ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக! நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக!)
(எனினும்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்கியவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உள்ளவர்கள் அல்லர்.) அநியாயம் செய்தவர்கள் (-இணைவைத்தவர்கள்) தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.