Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil- Abdul Hamid Bakawi * - Índice de traducciones

XML CSV Excel API
Please review the Terms and Policies

Traducción de significados Capítulo: Al-Baqara   Versículo:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ— قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ— وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ— قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
30. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்.
Las Exégesis Árabes:
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
31. பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவற்றை அந்த வானவர்களுக்கு முன்பாக்கி “(வானவர்களே! ஆதமுக்கு என் பிரதிநிதியாக ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினான்.
Las Exégesis Árabes:
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ— اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
32. (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மிக அறிந்தவன், ஞானம் உடையவன்'' எனக் கூறினார்கள்.
Las Exégesis Árabes:
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ— فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ— قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ— وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
33. (பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (வானவர்களை நோக்கி) “பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவற்றை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்'' என்றான்.
Las Exégesis Árabes:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰی وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
34. பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்.
Las Exégesis Árabes:
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪— وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
35. பின்னர், நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்'' என்று கூறினோம்.
Las Exégesis Árabes:
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪— وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
36. எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்துவிட்டான். ஆகவே, (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (சொர்க்கத்திலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரை சுகமும் அனுபவிக்கலாம்'' என நாம் கூறினோம்.
Las Exégesis Árabes:
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
37. பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். (அவ்வாக்கியங்களைக்கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன் தான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
Las Exégesis Árabes:
 
Traducción de significados Capítulo: Al-Baqara
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil- Abdul Hamid Bakawi - Índice de traducciones

Traducida por Sh. Abdulhamid Albaqoi.

Cerrar