Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Sura Al-Masad   Versículo:

ஸூரா அல்மஸத்

Propósitos del Capítulo:
بيان خسران أبي لهب وزوجه.
அபூ லஹப் மற்றும் அவனது மனைவியின் தோல்வியைத் தெளிவுபடுத்தல்

تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ
111.1. நபியவர்களின் சாச்சாவான அபூலஹபின் நஷ்டமான செயலினால் அவனது இரண்டு கைகளும் அழிந்துவிட்டது. ஏனெனில் அவன் தூதருக்குத் தொல்லையளித்துக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.
Las Exégesis Árabes:
مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ۟ؕ
111.2. அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவனை விட்டும் வேதனையைத் தடுக்கவுமில்லை. இறையருளையும் அவனுக்குப் பெற்றத்தரவில்லை.
Las Exégesis Árabes:
سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۟ۙ
111.3. அவன் மறுமை நாளில் எரியக்கூடிய நரகத்தில் பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.
Las Exégesis Árabes:
وَّامْرَاَتُهٗ ؕ— حَمَّالَةَ الْحَطَبِ ۟ۚ
111.4. தூதரின் பாதையில் முட்களைப் போட்டு தொல்லையளித்துக் கொண்டிருந்த அவனது மனைவியான உம்மு ஜமீல் அதில் நுழைவாள்.
Las Exégesis Árabes:
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ۟۠
111.5. அவளது கழுத்தில் உறுதியாக திரிக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அவள் அதன் மூலம் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவாள்.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• المفاصلة مع الكفار.
1. நிராகரிப்பாளர்களை விட்டு தனியாகிவிட வேண்டும்.

• مقابلة النعم بالشكر.
2. அருட்கொடைகளை நன்றிசெலுத்துவதைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
3. மஸத் என்ற இந்த அத்தியாயம் நபித்துவத்தின் அடையளங்களில் ஒன்றாகும். ஏனெனில் நிச்சயமாக அபூ லஹப் காபிராகவே மரணிப்பான் என்பதாக அது தீர்ப்புச்செய்தது. அது போன்றே பத்து வருடங்களுக்குப் பின் அவன் நிராகரிப்பாளனாகவே மரணித்தான்.

• صِحَّة أنكحة الكفار.
காபிர்களின் திருமணங்கள் செல்லுபடியானதாகும்.

 
Traducción de significados Capítulo: Sura Al-Masad
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de traducciones

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Cerrar