Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Ar-Ra'd   Versículo:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟
13.29. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் பக்கம் நெருக்கி வைக்கக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்ட இவர்களுக்கு மறுமையில் நல்ல வாழ்வு உண்டு. அவர்களுக்கு சுவனம் என்னும் சிறந்த முடிவும் உண்டு.
Las Exégesis Árabes:
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ— قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟
13.30. -தூதரே!- நாம் முந்தைய சமூகங்களின் பக்கம் தூதர்களை அனுப்பியது போன்றே உம் சமூகத்தின் பக்கமும், நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கும் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, உம்மை தூதராக அனுப்பினோம், அது உமது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கப் போதுமானது. ஆயினும் உமது சமூகத்தினர் இந்த அற்புதத்தை அறிந்து கொண்டே நிராகரிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு இணைகளை ஏற்படுத்தி அவனை நிராகரிக்கிறார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் யாருக்கு ஏனைய தெய்வங்களை இணைவைத்துக்கொண்டுள்ளீர்களோ அந்தக் கருணையாளன்தான் என் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
Las Exégesis Árabes:
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ— بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ— اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
13.31. இறைவேதங்களில் ஏதேனும் ஒரு வேதத்தின் பண்புகளில், மலைகளை அதன் இடங்களிலிருந்து நகர்த்தும் அல்லது பூமியைப் பிளந்து ஆறுகளாகவும் ஊற்றுகளாவும் அதனை ஓடச் செய்யும் அல்லது மரணித்தவர்களின் மீது அதனை ஓதுவதனால் அவர்களுக்கு உயிர் வழங்கும் இறைவேதம் ஒன்று இருக்குமானால் அது உமக்கு இறக்கப்பட்ட இந்த அல்குர்ஆன்தான். ஏனெனில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தெளிவான அத்தாட்சியைக் கொண்டதாகும். அவர்கள் பயப்படக்கூடிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருந்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆயினும் அவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். மாறாக அற்புதங்களையும் ஏனையவற்றையும் இறக்கும் முழு அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் நாடினால் சான்றுகளை இறக்காமலே மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்திடுவான் என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? ஆயினும் அல்லாஹ் அவ்வாறு நாடவில்லை. தொடரான வேதனை இறங்குவதற்கான அல்லாஹ்வின் வாக்குறுதி வரும் வரை அல்லாஹ்வை நிராகரித்தவர்களை, அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களைத் திடீரெனத் தாக்கும் கடும் வேதனை அவர்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும் அல்லது அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் எங்கேனும் ஆபத்து இறங்கிக் கொண்டேயிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்தவற்றுக்கான குறித்த காலம் வந்து விட்டால் அதனை நிறைவேற்றாமல் விட்டு விடுவதில்லை.
Las Exégesis Árabes:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
13.32. நீர், தனது சமூகத்தின் நிராகரிப்பும் பரிகாசத்திற்கும் உள்ளாகிய முதலாவது தூதர் அல்ல. -தூதரே!- உமக்கு முன்னிருந்த சமூகங்களும் தமது தூதர்களை பரிகாசம் செய்து நிராகரித்துள்ளார்கள். தூதர்களை நிராகரித்தவர்கள் நான் அவர்களை அழிக்க மாட்டேன் என்று எண்ணுமளவு அவர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். அவகாசத்தின் பின்னர் பல்வேறு வேதனைகளால் அவர்களைத் தண்டித்தேன். அவர்களுக்கான எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை நீர் பார்த்தீரா? அது கடுமையான வேதனையாக இருந்தது.
Las Exégesis Árabes:
اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ— وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ— قُلْ سَمُّوْهُمْ ؕ— اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ— بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
13.33. அனைத்து படைப்பினங்களின் வாழ்வாதரத்தை பாதுகாப்பவனான, ஒவ்வொரு ஆன்மாவும் செய்யும் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குபவன் வணங்கப்படத் தகுதியானவனா? அல்லது வணக்கத்திற்குத் தகுதியற்ற இந்த சிலைகளா? நிராகரிப்பாளர்கள் அநியாயமாகவும் அபாண்டமாகவும் அவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வணங்கும் இணை தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள் அல்லது பூமியில் அல்லாஹ் அறியாத இணைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது உண்மையற்ற வெறும் வார்த்தைகளை அவனிடம் கூறுகிறீர்களா? மாறாக ஷைத்தான் நிராகரிப்பாளர்களின் தீய திட்டங்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். எனவே அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தார்கள். நேர்வழியை விட்டும் அவர்களைத் திருப்பி விட்டான். யாரை அல்லாஹ் நேரான பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை.
Las Exégesis Árabes:
لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ— وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
13.34. நம்பிக்கையாளர்களின் கரங்களினால் கொலை, கைது செய்யப்படுவதன் மூலம் இவ்வுலகில் அவர்களுக்கு தண்டனை உண்டு. அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ உலக வேதனையை விட மிகக் கடுமையானது. ஏனெனில் அது கடுமையான முடிவடையாத நிரந்தரமான வேதனையாகும். மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• أن الأصل في كل كتاب منزل أنه جاء للهداية، وليس لاستنزال الآيات، فذاك أمر لله تعالى يقدره متى شاء وكيف شاء.
1. வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்ட அடிப்படை நோக்கம், நிச்சயமாக அவை வழிகாட்டுவதேயாகும். சான்றுகளை இறக்குமாறு கேட்பதற்கு அல்ல. சான்றுகளை இறக்குவது அல்லாஹ்விடமே உள்ளது. அவன் நாடிய போது நாடியவாறு நிர்ணயம் செய்வான்.

• تسلية الله تعالى للنبي صلى الله عليه وسلم، وإحاطته علمًا أن ما يسلكه معه المشركون من طرق التكذيب، واجهه أنبياء سابقون.
2. , இணைவைப்பாளர்கள் தன் துாதருடன் கடைபிடிக்கும், பொய்பிக்கும் வழிமுறைகள் முன் சென்ற இறைத் தூதர்களும் எதிர்நோக்கியவையே என தன் தூதருக்கு ஆறுதல் கூறி அறிவித்துக் கொடுக்கின்றான்.

• يصل الشيطان في إضلال بعض العباد إلى أن يزين لهم ما يعملونه من المعاصي والإفساد.
3. ஷைத்தான் சில அடியார்களை வழி கெடுப்பதில் அவர்கள் செய்யும் பாவங்களையும் குழப்பத்தையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் அளவுக்கு சென்று விடுகிறான்.

 
Traducción de significados Capítulo: Ar-Ra'd
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar