Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de traducciones


Traducción de significados Versículo: (5) Capítulo: Sura Al-Baqara
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ ۗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
2.5. இந்தப் பண்புகளால் தங்களை அலங்கரித்தவர்கள்தாம் நேர்வழியின் பாதையில் இருப்பவர்கள். தாங்கள் ஆதரவு வைத்ததை அடைந்து, அச்சப்பட்டவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற்று இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெறக்கூடியவர்கள் இவர்களே.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• الثقة المطلقة في نفي الرَّيب دليل على أنه من عند الله؛ إذ لا يمكن لمخلوق أن يدعي ذلك في كلامه.
1. முழு நம்பிக்கையுடன் குர்ஆனில் சந்தேகமில்லை என மறுத்திருப்பது, அது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமே என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், எந்தவொரு படைப்பினமும் தனது வார்த்தையில் இந்தளவு நம்பகத்தன்மையை வாதிட முடியாது.

• لا ينتفع بما في القرآن الكريم من الهدايات العظيمة إلا المتقون لله تعالى المعظِّمون له.
2. அல்லாஹ்வுக்குப் பயந்து அவனைக் கண்ணியப்படுத்துவோர் மட்டுமே குர்ஆன் கூறக்கூடிய மகத்தான போதனைகளிலிருந்து பலனடைவார்கள்.

• من أعظم مراتب الإيمانِ الإيمانُ بالغيب؛ لأنه يتضمن التسليم لله تعالى في كل ما تفرد بعلمه من الغيب، ولرسوله بما أخبر عنه سبحانه.
3. அல்லாஹ் அறிவித்த மறைவான விஷயங்களை நம்புவது ஈமானின் மிக உயர்ந்த படித்தரங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்கள் அனைத்திலும் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அத்துடன், அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர் அறிவித்த மறைவான விஷயங்களில் அவருக்குக் கட்டுப்படுவதாகவும் அமையும்.

• كثيرًا ما يقرن الله تعالى بين الصلاة والزكاة؛ لأنَّ الصلاة إخلاص للمعبود، والزكاة إحسان للعبيد، وهما عنوان السعادة والنجاة.
4. பெரும்பாலும் அல்லாஹ் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்தே கூறுகின்றான். ஏனெனில், தொழுகை வணக்கத்திற்குரியவனுக்கு மனத்தூய்மையுடன் நடப்பதாகும்; ஸகாத் அடியார்களுக்கு உபகாரம் செய்வதாகும். இந்த இரண்டுமே ஈடேற்றம் மற்றும் பாதுகாப்பின் காரணிகளாகும்.

• الإيمان بالله تعالى وعمل الصالحات يورثان الهداية والتوفيق في الدنيا، والفوز والفلاح في الأُخرى.
5. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்கள் புரிவதும் இவ்வுலகில் நேர்வழியையும் பாக்கியத்தையும் வழங்குகின்றன. அத்துடன், மறுமையில் ஈடேற்றத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருகின்றன.

 
Traducción de significados Versículo: (5) Capítulo: Sura Al-Baqara
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de traducciones

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Cerrar