Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Saad   Versículo:

ஸாத்

Propósitos del Capítulo:
ذكر المخاصمة بالباطل وعاقبتها.
அசத்தியத்தைக்கொண்டு தர்க்கம் புரிவதையும், அதன் விளைவுகளையும் குறிப்பிடுதல்.

صٓ وَالْقُرْاٰنِ ذِی الذِّكْرِ ۟ؕ
38.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஈருலகிலும் பயனளிக்கக்கூடிய அறிவுரையை உள்ளடக்கியுள்ள குர்ஆனின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். அல்லாஹ்வுக்கு இணைகள் இருக்கிறது என்று இணைவைப்பாளர்கள் எண்ணுவது போல் அல்ல விடயம்.
Las Exégesis Árabes:
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ عِزَّةٍ وَّشِقَاقٍ ۟
38.2. என்றாலும் நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக்கொள்ளாமல் கர்வத்திலும் முஹம்மதோடு முரண்பாட்டிலும் பகைமையிலும் இருக்கிறார்கள்.
Las Exégesis Árabes:
كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِیْنَ مَنَاصٍ ۟
38.3. நாம் இதற்கு முன்னர் தூதர்களை பொய்ப்பித்த எத்தனையோ தலைமுறைகளை அழித்துள்ளோம். வேதனை அவர்கள் மீது இறங்கிய போது அவர்கள் உதவி தேடியவர்களாக அழைத்தார்கள். உதவி தேடுவது அவர்களுக்குப் பயனளிப்பதற்கு, அது வேதனையிலிருந்து தப்பிப்பதற்கான நேரமாக இருக்கவில்லை.
Las Exégesis Árabes:
وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ؗ— وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۟ۖۚ
38.4. அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என எச்சரிக்கக்கூடிய தூதர் அவர்களிடமிருந்தே வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். முஹம்மது கொண்டுவந்தது உண்மையே என்பதற்கான ஆதாரங்களை அந்த நிராகரிப்பாளர்கள் கண்டபோது, “இந்த மனிதர் மக்களை சூனியத்திற்கு உள்ளாக்கும் ஒரு சூனியக்காரர், அல்லாஹ்விடமிருந்து வஹி வரும் இறைதூதர் என்ற அவரது வாதத்தில் பொய்யர்” என்று கூறினார்கள்.
Las Exégesis Árabes:
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ— اِنَّ هٰذَا لَشَیْءٌ عُجَابٌ ۟
38.5. இந்த மனிதர் பல கடவுள்களை ஒரே கடவுளாக்கி விட்டாரா? நிச்சயமாக அவரது இச்செயல் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.
Las Exégesis Árabes:
وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰۤی اٰلِهَتِكُمْ ۖۚ— اِنَّ هٰذَا لَشَیْءٌ یُّرَادُ ۟ۚ
38.6. அவர்களின் தலைவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் பின்வருமாறு கூறிக்கொண்டே சென்றார்கள்: “நீங்கள் இருக்கும் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். முஹம்மதின் மார்க்கத்தில் நுழைந்துவிடாதீர்கள். உங்கள் தெய்வங்களை வணங்குவதில் நிலைத்திருங்கள். ஒரே இறைவனை வணங்குமாறு முஹம்மது உங்களை அழைப்பது திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்தி நாம் அவரைப் பின்பற்றுவோராக இருக்க வேண்டுமென்பதற்காக அதனை மேற்கொள்கிறார்.
Las Exégesis Árabes:
مَا سَمِعْنَا بِهٰذَا فِی الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ— اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ۟ۖۚ
38.7. ஒரே இறைவனை வணங்குமாறு முஹம்மது கூறுவது போல நம்முடைய முன்னோர்களிடமோ ஈஸாவின் மார்க்கத்திலோ நாம் கேள்விப்பட்டதில்லை. நாம் அவரிடமிருந்து கேள்விப்படுவது பொய்யும் புனைதலுமாகும்.
Las Exégesis Árabes:
ءَاُنْزِلَ عَلَیْهِ الذِّكْرُ مِنْ بَیْنِنَا ؕ— بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْ ذِكْرِیْ ۚ— بَلْ لَّمَّا یَذُوْقُوْا عَذَابِ ۟ؕ
38.8. அல்குர்ஆன் தலைவர்களாகவும் கண்ணியவான்களாகவும் இருக்கும் நம்மீது இறக்கப்படாமல் நமக்கு மத்தியில் அவருக்கு மட்டும் குர்ஆன் இறங்குவது சரியா? ” மாறாக இந்த இணைவைப்பாளர்கள் உம்மீது இறக்கப்படும் வஹியில் சந்தேகம் கொண்டுள்ளார்கள். அவர்கள் இதுவரை அல்லாஹ்வின் வேதனையை அனுபவிக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தைக் கொண்டு ஏமாற்றமடைந்து விட்டார்கள். அவர்கள் வேதனையை அனுபவித்திருந்தால் அல்லாஹ்வை நிராகரிக்கவும் அவனுக்கு மற்றவர்களை இணையாக்கவும் உமக்கு அறிவிக்கப்படும் இறைசெய்தியில் சந்தேகம் கொள்ளவும் துணிந்திருக்க மாட்டார்கள்.
Las Exégesis Árabes:
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِیْزِ الْوَهَّابِ ۟ۚ
38.9. அல்லது யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இந்த இணைவைப்பாளர்களிடம் இருக்கின்றனவா? அவன் தான் நாடியவற்றை நாடியவர்களுக்கு அளிக்கின்றான். நபித்துவமும் அவனுடைய அருட்களஞ்சியங்களில் உள்ளவையாகும். தான் நாடியவர்களுக்கு அதனை அளிக்கின்றான். அவர்கள் தாம் நாடியவர்களுக்கு அதனை அளிக்கவும் தாம் நாடியவர்களுக்கு அதனை தடுக்கவும் அது அவர்களின் வசம் இல்லை.
Las Exégesis Árabes:
اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۫— فَلْیَرْتَقُوْا فِی الْاَسْبَابِ ۟
38.10. அல்லது அவர்கள் வழங்குவதற்கும் தடுப்பதற்கும் தகுதியாக, அவர்களிடம் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் இருக்கின்றனவா? இது அவர்களின் எண்ணமாக இருந்தால் தாம் நாடியவாறு தடுக்கவும் கொடுக்கவும் அவர்கள் தீர்ப்பு சொல்வதை இலகுபடுத்துவதற்காக வானத்தின்பால் கொண்டுசேர்க்கும் காரணிகளை ஏற்படுத்திக் கொள்ளட்டும். அவர்களால் அது ஒருபோதும் முடியாது.
Las Exégesis Árabes:
جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ ۟
38.11. முஹம்மதை பொய்ப்பிக்கும் இவர்கள் தமது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய கூட்டங்களைப் போல தோற்கடிக்கப்படும் கூட்டமாகும்.
Las Exégesis Árabes:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِ ۟ۙ
38.12. இந்த பொய்ப்பிப்பாளர்கள் முதல் பொய்ப்பிப்பாளர்கள் அல்ல. அவர்களுக்கு முன்னரும் நூஹின் சமூகம், ஆதின் சமூகம், மக்களை வேதனை செய்யப் பயன்படுத்தும் படைகளையுடைய ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியவைகள் பொய்ப்பித்துள்ளன.
Las Exégesis Árabes:
وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔیْكَةِ ؕ— اُولٰٓىِٕكَ الْاَحْزَابُ ۟
38.13. ஸமூதின் சமூகமும், லூத்தின் சமூகமும், ஷுஐபின் சமூகமும் பொய்ப்பித்துள்ளன. அந்தக் கூட்டங்களே தமது தூதர்களையும் அவர்கள் கொண்டுவந்ததை நிராகரித்து, பொய்ப்பிப்பதில் ஒன்றிணைந்தவர்கள்.
Las Exégesis Árabes:
اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ۟۠
38.14. இந்தக் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் தூதர்களை பொய்ப்பித்தார்கள். எனவே அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது உறுதியானது. சில காலம் தாமதித்தாலும் அவனின் தண்டனை அவர்கள் மீது இறங்கியது.
Las Exégesis Árabes:
وَمَا یَنْظُرُ هٰۤؤُلَآءِ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ ۟
38.15. முஹம்மதை பொய்ப்பிக்கும் இவர்கள் மீள முடியாத இரண்டாவது முறை சூர் ஊதப்படுவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொய்ப்பித்த நிலையிலேயே மரணித்துவிட்டால் அவர்களுக்கு வேதனை கிடைக்கும்.
Las Exégesis Árabes:
وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ یَوْمِ الْحِسَابِ ۟
38.16. அவர்கள் பரிகாசமாகக் கூறினார்கள்: “எங்கள் இறைவா! மறுமை நாளுக்கு முன்னரே உலகில் எங்களுக்கு வழங்கப்படும் வேதனையில் எங்களுடைய பங்கை விரைவாகத் தந்துவிடு.”
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• أقسم الله عز وجل بالقرآن العظيم، فالواجب تَلقِّيه بالإيمان والتصديق، والإقبال على استخراج معانيه.
1. அல்லாஹ் மகத்தான குர்ஆனைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். அதனை கற்பதும் உண்மைப்படுத்துவதும் அதில் பொதிந்துள்ள விளக்கங்களை எடுக்க முன்வருவதும் கட்டாயமாகும்.

• غلبة المقاييس المادية في أذهان المشركين برغبتهم في نزول الوحي على السادة والكبراء.
2. இணைவைப்பாளர்களின் சிந்தனைகளில் சடவாத அளவீடுகள் மேலோங்கியுள்ளன. அதனால்தான் வஹீயானது தலைவர்கள், பெரியவர்கள் மீதே இறங்க வேண்டுமென விரும்பினர்.

• سبب إعراض الكفار عن الإيمان: التكبر والتجبر والاستعلاء عن اتباع الحق.
3. நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை கொள்ளாமல் புறக்கணித்ததற்கான காரணம்: சத்தியத்தை பின்பற்றாமல் கர்வம் கொண்டதாகும்.

 
Traducción de significados Capítulo: Saad
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar