Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Az-Zumar   Versículo:
اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰىنِیْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِیْنَ ۟ۙ
39.57. அல்லது விதியை ஆதாரம்காட்டி “ நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பாக்கியம் அளித்திருந்தால் நான் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களில் ஒருவனாக ஆகியிருப்பேன்” என்று கூறாமல் இருப்பதற்காகவும்.
Las Exégesis Árabes:
اَوْ تَقُوْلَ حِیْنَ تَرَی الْعَذَابَ لَوْ اَنَّ لِیْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
39.58. அல்லது வேதனையைக் காணும்போது “நிச்சயமாக மீண்டும் எனக்கு உலகத்திற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி நற்செயல் புரிபவர்களில் ஒருவராகி இருப்பேனே!” என்று ஆசைப்பட்டவனாக கூறாமல் இருப்பதற்காக.
Las Exégesis Árabes:
بَلٰی قَدْ جَآءَتْكَ اٰیٰتِیْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
39.59. நீ எண்ணுவது போல் நேர்வழியை விரும்புவதல்ல விடயம். ஏனெனில் என் சான்றுகள் உன்னிடத்தில் வந்தன. நீ அவற்றை மறுத்து கர்வம் கொண்டாய். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் சான்றுகளையும் நிராகரிக்கக்கூடியவர்களில் ஒருவனாக இருந்தாய்.
Las Exégesis Árabes:
وَیَوْمَ الْقِیٰمَةِ تَرَی الَّذِیْنَ كَذَبُوْا عَلَی اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ— اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْمُتَكَبِّرِیْنَ ۟
39.60. இணையும் பிள்ளையும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக இணைத்துக்கூறி அவன் மீது பொய்யுரைத்தவர்களின் முகங்கள் மறுமை நாளில் துர்பாக்கியத்தின் அடையாளமாக கறுத்திருப்பதை நீர் காண்பீர். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்பவர்களுக்கு நரகில் ஒரு தங்குமிடம் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு ஒரு தங்குமிடம் இருந்தே தீரும்.
Las Exégesis Árabes:
وَیُنَجِّی اللّٰهُ الَّذِیْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ ؗ— لَا یَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
39.61. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை அவன் வேதனையிலிருந்து காப்பாற்றி சுவனம் எனும் வெற்றியான இடத்தில் பிரவேசிக்கச் செய்வான். வேதனை அவர்களைத் தீண்டாது. அவர்களுக்குத் தவறிய உலகபாக்கியங்களுக்காக அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Las Exégesis Árabes:
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ ؗ— وَّهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟
39.62. அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கிறான். அவற்றின் காரியங்களை நிர்வகித்து தான் நாடியவாறு செயல்படுத்துகிறான்.
Las Exégesis Árabes:
لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
39.63. வானங்களிலும் பூமியிலும் நன்மைகளுடைய பொக்கிஷங்களின் திறவுகோல்கள்அவனிடமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு வழங்காமல் அவற்றைத் தடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் ஈமானைப் பெறாமல் மறுமையில் நிரந்தரமான நரகில் நுழைந்து விட்டார்கள்.
Las Exégesis Árabes:
قُلْ اَفَغَیْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّیْۤ اَعْبُدُ اَیُّهَا الْجٰهِلُوْنَ ۟
39.64. -தூதரே!- தங்களின் சிலைகளை வணங்குமாறு கூறி உம்மை வழிகெடுக்க முயலும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “-தமது இறைவனை அறியாதவர்களே!- அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டும் என என்னை ஏவுகிறீர்களா? அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. நான் அவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன்.”
Las Exégesis Árabes:
وَلَقَدْ اُوْحِیَ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۚ— لَىِٕنْ اَشْرَكْتَ لَیَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
39.65. -தூதரே!- அல்லாஹ் உமக்கும் உமக்கு முன்வந்த தூதர்களுக்கும் பின்வருமாறு வஹி அறிவித்தான்: “நீர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கினால் உமது நற்செயல்களின் கூலிகள் வீணாகிவிடும். இவ்வுலகில் உமது மார்க்கத்தை இழந்தும், மறுவுலகில் தண்டனை பெற்றும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி விடுவீர்.
Las Exégesis Árabes:
بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
39.66. மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்குவீராக. அவனுக்கு யாரையும் இணையாக்காதீர். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துபவராகி விடுவீராக.”
Las Exégesis Árabes:
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖۗ— وَالْاَرْضُ جَمِیْعًا قَبْضَتُهٗ یَوْمَ الْقِیٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِیّٰتٌ بِیَمِیْنِهٖ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
39.67. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அவன் அல்லாத பலவீனமான, எதுவும் செய்ய இயலாத படைப்புகளை அவனுக்கு இணையாக்கி விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை உணராமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். அவனுடைய வல்லமையின் வெளிப்பாடுகளில் சிலவைதான்: பூமி அதனுடைய மரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள். (அனைத்தும்) மறுமை நாளில் அவனுடைய கைப்பிடியில் இருக்கும். நிச்சயமாக ஏழு வானங்களும் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும் நம்புபவற்றை விட்டும் அவன் தூய்மையானவன்.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• الكِبْر خلق ذميم مشؤوم يمنع من الوصول إلى الحق.
1. கர்வம் சத்தியத்தை அடையவிடாமல் தடுக்கும் கெட்ட மோசமான பண்பாகும்.

• سواد الوجوه يوم القيامة علامة شقاء أصحابها.
2. மறுமை நாளில் துர்பாக்கியத்தின் அடையாளமாக அவர்களின் முகங்கள் கருமையாகிவிடும்.

• الشرك محبط لكل الأعمال الصالحة.
3. இணைவைப்பு நற்செயல்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

• ثبوت القبضة واليمين لله سبحانه دون تشبيه ولا تمثيل.
4. எவ்வித ஒப்புமையும் உதாரணமும் அற்ற கைப்பிடி, வலக்கரம் இரண்டும் அல்லாஹ்வுக்கு உள்ளது என்பது உறுதியாகிறது.

 
Traducción de significados Capítulo: Az-Zumar
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar