Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de traducciones


Traducción de significados Versículo: (176) Capítulo: Sura Al-Nisaa
یَسْتَفْتُوْنَكَ ؕ— قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ— اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ— وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ— فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ— وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ— یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
4.176. தூதரே! அவர்கள் கலாலாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கலாலா என்பது தந்தையும் பிள்ளைகளும் இன்றி மரணமடைந்தவரின் சொத்தாகும். நீர் கூறுவீராக, அல்லாஹ் அதனைக் குறித்து தெளிவுபடுத்துகிறான்: “இறந்தவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லாமல் உடன்பிறந்த சகோதரியோ அல்லது தந்தைவழிச் சகோதரியோ மட்டும் இருந்தால் அவர் விட்டுச் சென்றவற்றில் அவளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதி அளவு சொத்து உண்டு. அவருக்கு உடன்பிறந்த சகோதரனோ அல்லது தந்தைவழிச் சகோதரனோ மட்டும் இருந்து சொத்து பெறக்கூடிய வேறு யாரும் இல்லையெனில் அவர் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார். சொத்து பெறக்கூடிய வேறு யாரேனும் இருந்தால் அவரது பங்குபோக மீதமுள்ள அனைத்தையும் இவர் பெறுவார். இறந்தவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த சகோதரிகளோ அல்லது தந்தைவழிச் சகோதரிகளோ இருந்தால் மூன்றில் நிர்ணயிக்கப்பட்ட இரு பங்கை அவர்கள் பெறுவார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த அல்லது தந்தைவழிச் சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தால் அவர்கள் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார்கள். இதில் பெண்களைப் போன்று ஆண்களுக்கு இரு பங்கு தரப்பட்ட வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு கலாலா குறித்த சட்டங்களையும் பிற சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• عناية الله بجميع أحوال الورثة في تقسيم الميراث عليهم.
1.அனந்தரச் சொத்துப் பங்கீட்டில் அனந்தரம் பெறுவோரின் அனைத்து நிலைகளையும் அல்லாஹ் கவனித்துள்ளான்.

• الأصل هو حِلُّ الأكل من كل بهيمة الأنعام، سوى ما خصه الدليل بالتحريم، أو ما كان صيدًا يعرض للمحرم في حجه أو عمرته.
2. எவை குறித்து பிரத்யேக தடைஉத்தரவு வந்துள்ளதோ அவற்றைத் தவிர மற்ற கால்நடைகள் அனைத்தும் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

• النهي عن استحلال المحرَّمات، ومنها: محظورات الإحرام، والصيد في الحرم، والقتال في الأشهر الحُرُم، واستحلال الهدي بغصب ونحوه، أو مَنْع وصوله إلى محله.
3. தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கிக்கொள்வது தடையாகும். அவற்றுள் சில: இஹ்ராம் உடைய நிலையில் தவிர்க்க வேண்டியவை, ஹரமில் வேட்டையாடுதல், புனித மாதங்களில் போர்புரிதல், பலிப் பிராணியை அபகரிப்பது அல்லது உரிய இடத்தை அடையாது தடுத்துவிடுவது ஆகியவற்றின் மூலம் ஆகுமாக்குதல்.

 
Traducción de significados Versículo: (176) Capítulo: Sura Al-Nisaa
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de traducciones

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Cerrar