Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Versículo: (32) Capítulo: Al-Anfaal
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟
8.32. -தூதரே!- இணைவைப்பாளர்கள் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “அல்லாஹ்வே! முஹம்மது கொண்டு வந்தது உண்மையாக இருக்குமானால் எங்கள் மீது வானத்திலிருந்து எம்மை அழிக்க கல்மழையைப் பொழியச் செய்வாயாக. அல்லது கடுமையான வேதனை ஏற்படுத்துவாயாக.” நிராகரிப்பு,பிடிவாதம் மிகைத்தே இவ்வாறு கூறினார்கள்.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• الشكر نعمة عظيمة يزيد بها فضل الله تعالى، وينقص عند إغفالها.
1. நன்றி செலுத்துவது மிகப் பெரிய அருட்கொடையாகும். அது அல்லாஹ்வின் அருளை இன்னும் அதிகப்படுத்துகிறது. அவனது அருளை மறந்து வாழ்வது அதனைக் குறைத்துவிடுகிறது.

• للأمانة شأن عظيم في استقامة أحوال المسلمين، ما ثبتوا عليها وتخلقوا بها، وهي دليل نزاهة النفس واعتدال أعمالها.
2. முஸ்லிம் சமூகம் அமானிதப் பண்புமிக்கவர்களாகத் திகழ்வது அவர்களது நிலமைகள் சீராவதற்கான முக்கியமானதொரு விடயமாகும். இது ஆன்மாவின் நேர்மை, நீதிமிக்க அதன் செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.

• ما عند الله من الأجر على كَفِّ النفس عن المنهيات، خير من المنافع الحاصلة عن اقتحام المناهي لأجل الأموال والأولاد.
3. செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் காரணமாக அல்லாஹ் தடுத்துள்ளவற்றைச் செய்து அதனால் கிடைக்கும் பலன்களை விட தடுக்கப்பட்டவற்றை விட்டும் ஆன்மாவைத் தடுத்துக்கொள்வதற்கு அல்லாஹ் வழங்கும் கூலி மிகச் சிறந்ததாகும்.

• في الآيات بيان سفه عقول المعرضين؛ لأنهم لم يقولوا: اللَّهُمَّ إن كان هذا هو الحق من عندك فاهدنا إليه.
4. இந்த வசனங்களிலே, புறக்கணிப்பவர்களின் அறிவீனம் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வே, இது சத்தியமாக இருந்தால் இதன்பால் எங்களுக்கு வழிகாட்டு என்று அவர்கள் பிரார்த்திக்கவில்லை.

• في الآيات فضيلة الاستغفار وبركته، وأنه من موانع وقوع العذاب.
5. வசனங்களில், -இஸ்திக்ஃபார்- பாவமன்னிப்புக் கோருதலின் சிறப்பும், அது வேதனையைத் தடுக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்பதும் தெளிவாகிறது.

 
Traducción de significados Versículo: (32) Capítulo: Al-Anfaal
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar