Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: یونس   آیه:
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ— قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ— اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
10.21. இணைவைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்திற்கும் ஏழ்மைக்கும் பிறகு மழை, செழிப்பு ஆகிய அருள்களை அவர்கள் அனுபவிக்குமாறு செய்தால் அவர்களோ நம்முடைய சான்றுகளை நிராகரித்து சூழ்ச்சி செய்கிறார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “சூழ்ச்சியிலும், உங்களை விட்டுப் பிடிப்பதிலும், தண்டிப்பதிலும் அல்லாஹ் மிக விரைவானவன். நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை உங்களைக் கண்காணிக்கும் வானவர்கள் எழுதுகிறார்கள். எதுவும் அவர்களை விட்டுத் தப்பிவிட முடியாது எனும் போது எவ்வாறு அவர்களின் படைப்பாளனை விட்டுத் தப்பிவிட முடியும்? உங்களின் சூழ்ச்சிகளுக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான்.
تفسیرهای عربی:
هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ— حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ— وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ— دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
10.22. -மனிதர்களே!- அவனே நிலத்தில் உங்கள் பாதங்களாலும் வாகனங்களிலும் உங்களை நகரச் செய்கிறான். அவனே கடலில் கப்பல்களில் உங்களை பயணிக்கச் செய்கிறான். நீங்கள் கடலில் கப்பல்களில் இருக்கும் போது சாதகமான காற்று வீசினால் அக்காற்றினால் பயணிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் அவ்வாறு சந்தோசத்தில் திளைத்திருக்கும் போது திடீரென்று புயல் காற்று வீசி, நாலாபுறமும் கடலலைகள் அவர்களைச் சூழ்ந்து, தாம் பெரும்பாலும் அழிந்து விடுவோம் என்று அவர்கள் எண்ணும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைத்து, அவனுக்கு வேறு எதையும் இணையாக்காது கூறுவார்கள்: “இறைவா, அழிவை ஏற்படுத்தும் இந்த சோதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்காக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராக ஆகிவிடுவோம்”.
تفسیرهای عربی:
فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ— مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ— ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
10.23. அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்று அவர்களை அச்சோதனையிலிருந்து காப்பாற்றினால் அவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து, பாவங்கள் செய்து உலகில் குழப்பம் விளைவிக்கிறார்கள். -மனிதர்களே!- விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களின் மோசமான விளைவை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதன் மூலம் அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். பின்னர் மறுமை நாளில் நம் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்கள் குறித்து நாம் உங்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப நாம் உங்களுக்குத் தண்டனையளிப்போம்.
تفسیرهای عربی:
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ— اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
10.24. நீங்கள் அனுபவிக்கக்கூடிய இவ்வுலக வாழ்க்கை விரைவாக அழிந்துவிடுவதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதன் மூலம் மனிதர்கள் உண்ணும் தானியங்கள், பழங்கள், விலங்குகள் உண்ணும் புற்பூண்டுகள் போன்ற பல்வேறு விதமான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பூமி தன் அழகிய நிறத்தைப் பெற்று மழையின் மூலம் விளையும் பல்வேறு தாவரங்களின் மூலம் பொலிவுற்று, அவற்றின் உரிமையாளர்கள் அவற்றின் விளைச்சல்களை அறுவடைசெய்ய முடியும் என எண்ணிக்கொண்டிருக்கும் போது அவை அழிய வேண்டும் என்ற நம்முடைய விதி அவற்றுக்கு ஏற்படுகிறது. எனவே அண்மையில் தாவரங்களாலும், மரங்களாலும் செழிப்புற்று காணப்படாதது போன்று அறுவடை செய்யப்பட்டதாக அவற்றை ஆக்கி விடுகின்றோம். இவ்வுலகத்தின் நிலையையும் விரைவாக அது அழிந்துவிடுவதையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு நாம் ஆதாரங்களையும் சான்றுகளையும் தெளிவுபடுத்துகிறோம்.
تفسیرهای عربی:
وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ— وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
10.25. அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் அமைதியின் இல்லமான சுவனத்தின் பக்கம் அழைக்கிறான். அங்கு மக்கள் கவலைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு இந்த அமைதியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின்பால் வழிகாட்டுகிறான்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• الله أسرع مكرًا بمن مكر بعباده المؤمنين.
1. நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் விரைவானவன்.

• بغي الإنسان عائد على نفسه ولا يضر إلا نفسه.
2. மனிதன் செய்யக்கூடிய அநியாயம் அவனுக்கே கேடாக அமையும். அவன் அதன் மூலம் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொள்கிறான்.

• بيان حقيقة الدنيا في سرعة انقضائها وزوالها، وما فيها من النعيم فهو فانٍ.
3. விரைவாக அழிந்து விடும் என்ற இவ்வுலகத்தைப் பற்றிய உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள இன்பங்களும் அழிபவையே.

• الجنة هي مستقر المؤمن؛ لما فيها من النعيم والسلامة من المصائب والهموم.
4. ஒரு முஃமினுடைய தங்குமிடம் சுவர்க்கமே. ஏனெனில் அங்குதான் இன்பங்களும், சோதனைகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றிலிருந்து ஈடேற்றமும் உள்ளது.

 
ترجمهٔ معانی سوره: یونس
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن