Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: رعد   آیه:

அர்ரஃத்

از اهداف این سوره:
الرد على منكري الوحي والنبوة ببيان مظاهر عظمة الله.
அல்லாஹ்வின் மகத்துவத்தின் வெளிப்பாடுகளைத் தெளிவுபடுத்தி இறைசெய்தியையும் நபித்துவத்தையும் மறுப்போருக்கு மறுப்பளித்தல்

الٓمّٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ— وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
13.1. (الٓمٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- இந்த அத்தியாயத்தின் உயர்ந்த வசனங்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனும் சந்தேகமற்ற உண்மையாகும். அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் கர்வத்தினாலும், பிடிவாதத்தினாலும் இதனை நம்பிக்கை கொள்ளவில்லை.
تفسیرهای عربی:
اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟
13.2. அல்லாஹ்தான் உயர்ந்த வானங்களை நீங்கள் பார்க்கும் தூண்களின்றி படைத்தான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்கேற்ப வடிவமோ உவமையோ கற்பிக்காமல் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் தன் படைப்புகளின் பயன்பாட்டிற்காக சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த குறிப்பிட்ட காலகட்டம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். வானங்களிலும் பூமியிலும் தான் நாடியபடி அவன் கட்டளையிடுகிறான். நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதியாக நம்பி, நற்செயல்களைக் கொண்டு அதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக தன் வல்லமையை எடுத்துரைக்கக் கூடிய சான்றுகளை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
تفسیرهای عربی:
وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ— وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
13.3. அவனே பூமியை விரித்தான். அது மக்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். மக்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் நீர்ப்புகட்டுவதற்காக அதில் ஆறுகளையும் ஏற் படுத்தினான்.ஒவ்வொரு பழவகைகளிலும் உயிரினங்களில் உள்ளதைப் போன்று அவன் ஆண், பெண் என சோடிகளை ஏற்படுத்தியுள்ளான். இரவால் பகலைப் போர்த்துகிறான். பிரகாசமாக இருந்த அது இருட்டாக ஆகிவிடுகிறது. நிச்சயமாக மேற்குறிப்பிட்டவற்றில் அல்லாஹ்வின் படைப்புகளைக் குறித்து சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. அவர்கள்தாம் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.
تفسیرهای عربی:
وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫— وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
13.4. பூமியில் அருகருகே பல பகுதிகள் இருக்கின்றன. அதில் திராட்சைத் பயிர்களும் வயல்களும் ஒரே மூலத்திலிருந்து வந்த ஒன்றுபட்ட பேரீச்சை மரங்களும் தனித்தனியான பேரீச்சை மரங்களும் காணப்படுகின்றன. இந்த தோட்டங்கள், பயிர்கள் அனைத்திற்கும் ஒரே வகையான தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. அருகருகே இருந்தும் ஒரே தண்ணீர் பாய்ச்சப்பட்டாலும் சுவை மற்றும் ஏனைய பயன்பாடுகளில் ஒன்றை விட ஒன்றை சிறப்பித்துள்ளோம். நிச்சயமாக மேற்கூறப்பட்டவற்றில் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் இதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்.
تفسیرهای عربی:
وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
13.5. -தூதரே!- நீர் ஏதேனும் ஒரு விஷயத்தால் ஆச்சரியப்பட்டால் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து, “நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமோ” என்று அவர்கள் கூறும் கூற்றே ஆச்சரியப்படுவதற்குத் தகுதியானதாகும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்ற அவனின் வல்லமையை மறுக்கக்கூடிய, தங்கள் இறைவனை நிராகரிக்கக்கூடிய இவர்களின் கழுத்தில் மறுமை நாளில் நெருப்பிலான விலங்குகள் மாட்டப்படும். இவர்கள்தாம் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு அழிவு ஏற்படாது. வேதனையும் அவர்களை விட்டு நிறுத்தப்படாது.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• إثبات قدرة الله سبحانه وتعالى والتعجب من خلقه للسماوات على غير أعمدة تحملها، وهذا مع عظيم خلقتها واتساعها.
1. அல்லாஹ்வின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளது. வானங்கள் மிகப் பிரமாண்டமான படைப்பாக, விசாலமானதாக இருந்த போதும் அவற்றைத் தாங்கும் எவ்வித தூண்களுமின்றி அவன் படைத்தமை பெரும் வியப்புக்குரிதாகும்.

• إثبات قدرة الله وكمال ربوبيته ببرهان الخلق، إذ ينبت النبات الضخم، ويخرجه من البذرة الصغيرة، ثم يسقيه من ماء واحد، ومع هذا تختلف أحجام وألوان ثمراته وطعمها.
2. அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது தெய்வீகத் தன்மையின் பரிபூரணத் தன்மையையும் படைத்தல் எனும் அத்தாட்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறிய விதையிலிருந்து பெரும் தாவரங்களை அவன் வெளிப்படுத்துகிறான். பின்னர் ஒரே தண்ணீரின் மூலம் அவற்றுக்கு நீர்பாய்ச்சுகிறான். அவ்வாறிருந்தும் அதன் பழங்களின் அளவுகளும், நிறங்களும், சுவையும் வெவ்வேறாக உள்ளன.

• أن إخراج الله تعالى للأشجار الضخمة من البذور الصغيرة، بعد أن كانت معدومة، فيه رد على المشركين في إنكارهم للبعث؛ فإن إعادة جمع أجزاء الرفات المتفرقة والمتحللة في الأرض، وبعثها من جديد، بعد أن كانت موجودة، هو بمنزلة أسهل من إخراج المعدوم من البذرة.
3. இல்லாமையின் பின் சிறு விதையிலிருந்து பெரும் பெரும் மரங்களை அல்லாஹ் உருவாக்கியதில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களுக்கு மறுப்புரை அடங்கியுள்ளது. ஏனெனில் பூமியில் மக்கி மண்ணாகி எஞ்சியுள்ள பகுதிகளை மீண்டும் இணைத்து, இருப்பதைப் புதிதாக உருவாக்குவது இல்லாமலிருந்த ஒன்றை விதையிலிருந்து உருவாக்குவதை விட இலகுவான தரத்தில் உள்ளதாகும்.

 
ترجمهٔ معانی سوره: رعد
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن