Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی آیه: (103) سوره: نساء
فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ— فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ— اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟
4.103. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• استحباب صلاة الخوف وبيان أحكامها وصفتها.
1. யுத்தநேரத் தொழுகைக்கான அனுமதியும், அதற்கான சட்டங்கள் அமைப்பு பற்றிய தெளிவுபடுத்ததலும்

• الأمر بالأخذ بالأسباب في كل الأحوال، وأن المؤمن لا يعذر في تركها حتى لو كان في عبادة.
2. எல்லா சூழ்நிலைகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. வணக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட நம்பிக்கையாளன் அவற்றை விடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

• مشروعية دوام ذكر الله تعالى على كل حال، فهو حياة القلوب وسبب طمأنينتها.
3. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் உள்ளத்திற்கு உயிரூட்டும், நிம்மதியை ஏற்படுத்தும்.

• النهي عن الضعف والكسل في حال قتال العدو، والأمر بالصبر على قتاله.
4.எதிரியுடன் போரிடும் போது பலவீனம், சோம்பல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொறுமையைக் கடைபிடிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

 
ترجمهٔ معانی آیه: (103) سوره: نساء
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن