Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: شوریٰ   آیه:
فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا ۚ— یَذْرَؤُكُمْ فِیْهِ ؕ— لَیْسَ كَمِثْلِهٖ شَیْءٌ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
42.11. அல்லாஹ்வே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் உங்களிலிருந்து உங்களுக்கு துணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் உங்களுக்காக அவை பெருகும்பொருட்டு இணைகளாகப் படைத்துள்ளான். உங்களை திருமணத்தின் மூலம் இணைகளாக்கி பெருகச் செய்கிறான். உங்களுக்காக ஏற்படுத்திய கால்நடைகளைக் கொண்டு அவற்றின் இறைச்சி, பால் ஆகியவற்றைக் கொண்டு உங்களை வாழச் செய்கிறான். அவனுடைய படைப்புகளில் எதுவும் அவனுக்கு நிகர் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நற்செயல்களுக்கு நன்மையும் தீய செயல்களுக்கு தீமையும் கிடைக்கும்.
تفسیرهای عربی:
لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
42.12. வானங்கள் மற்றும் பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடம் மட்டுமே உள்ளன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை - அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும் பொருட்டு அவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியோரை - அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது அல்லாஹ்வின் விதியை நொந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும்பொருட்டு அதில் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
تفسیرهای عربی:
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ— كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ— اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ ۟ؕ
42.13. நாம் நூஹிற்கு எதை எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டோமோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். -தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டதும் இதுதான் அதன் சாராம்சம்: “நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்துவிடாதீர்கள்.” நீர் இணைவைப்பாளர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிடுமாறும் அழைப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து தன்னை வணங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பாக்கியம் புரிகிறான். அவர்களில் தன் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி அவன் பக்கம் திரும்புபவர்களுக்குத்தான் தன் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
تفسیرهای عربی:
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیْنَهُمْ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
42.14. முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பிறகே நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் பிளவுபட்டார்கள். அவர்கள் அநீதி இழைத்ததன் காரணமாகத்தான் பிளவுபட்டார்கள். அல்லாஹ் தனது அறிவில் முடிவு செய்துள்ள குறிப்பிட்ட தவணையான மறுமை வரை அவர்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவதாக முன்பே முடிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளித்து அவர்களின் நிராகரிப்பினாலும் அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலும் தண்டனையைத் துரிதப்படுத்தியிருப்பான். நிச்சயமாக தங்களின் முன்னோர்களுக்கு பின் தோன்றிய தவ்ராத்தைப் பெற்ற யூதர்களும் இன்ஜீலைப் பெற்ற கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டுவந்துள்ள இந்த குர்ஆனைக்குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அதனை மறுக்கின்றார்கள்.
تفسیرهای عربی:
فَلِذٰلِكَ فَادْعُ ۚ— وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ ۚ— وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ ۚ— وَاُمِرْتُ لِاَعْدِلَ بَیْنَكُمْ ؕ— اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ؕ— لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؕ— لَا حُجَّةَ بَیْنَنَا وَبَیْنَكُمْ ؕ— اَللّٰهُ یَجْمَعُ بَیْنَنَا ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟ؕ
42.15. நேரான இந்த மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி அதில் உறுதியாக இருப்பீராக. அவர்களின் தீய மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களுடன் விவாதம் புரியும் போது நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வின் மீதும் அவன் தன் தூதர்களின் மீது இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கைகொண்டேன். அவன் உங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். நான் வணங்கும் அல்லாஹ்தான் எங்களின் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமாவான். நன்மையோ, தீமையோ எங்களுக்கு எங்களின் செயல்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். ஆதாரம் தெளிவான பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே எந்த விவாதமும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். மறுமை நாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான். அப்போது பொய்யரும் உண்மையாளரும் அசத்தியவாதியும் சத்தியவாதியும் தெளிவாகிவிடும்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• دين الأنبياء في أصوله دين واحد.
1. அடிப்படைகளில் நபிமார்களின் மார்க்கம் ஒரே மார்க்கம்தான்.

• أهمية وحدة الكلمة، وخطر الاختلاف فيها.
2. ஒற்றுமையின் முக்கியத்துவமும் அதில் பிரிவினைபடுவதின் விபரீதமும்.

• من مقومات نجاح الدعوة إلى الله: صحة المبدأ، والاستقامة عليه، والبعد عن اتباع الأهواء، والعدل، والتركيز على المشترك، وترك الجدال العقيم، والتذكير بالمصير المشترك.
3. அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கும் பணி வெற்றி பெறுவதற்கு சில அடிப்படையான தகுதிகள்: சரியான அடிப்படை, அதில் உறுதியாக இருத்தல், மனஇச்சைகளைப் பின்பற்றுவதில் இருந்து தூரமாகுதல், பொதுவிடயத்தில் கவனம்செலுத்தல், பயனற்ற விவாதத்தை விட்டுவிடல், பொதுவான முடிவை நினைவுபடுத்தல்.

 
ترجمهٔ معانی سوره: شوریٰ
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن