Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: فتح   آیه:
قُلْ لِّلْمُخَلَّفِیْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰی قَوْمٍ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ یُسْلِمُوْنَ ۚ— فَاِنْ تُطِیْعُوْا یُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ— وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّیْتُمْ مِّنْ قَبْلُ یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۟
48.16. -தூதரே!- உம்முடன் மக்காவிற்குப் புறப்பட்டு வராமல் பின்தங்கிய நாட்டுப்புற அரபிகளிடம் நீர் பரீட்சிக்கும் விதமாகக் கூறும்: “நீங்கள் பலமான சமூகத்தினருடன் போரிடுவதற்கு அழைக்கப்படுவீர்கள். நீங்கள் அவர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். அல்லது அவர்கள் போர் புரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடன் போர் புரியுமாறு அல்லாஹ் உங்களை அழைக்கும்போது நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உங்களுக்கு சுவனம் என்னும் நற்கூலியை வழங்கிடுவான். -அவருடன் மக்காவுக்குப் புறப்படாமல் பின்தங்கி அதனைப் புறக்கணித்தது போன்று- அவனுக்குக் கட்டுப்படாமல் நீங்கள் புறக்கணித்தால் அவன் உங்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.
تفسیرهای عربی:
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— وَمَنْ یَّتَوَلَّ یُعَذِّبْهُ عَذَابًا اَلِیْمًا ۟۠
48.17. பார்வையற்றவர், ஊனமுற்றவர், நோயாளி ஆகியோர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். யார் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் அவரை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.
تفسیرهای عربی:
لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ
48.18. ஹுதைபிய்யா உடன்படிகையின்போது மரத்திற்குக் கீழே உம்மிடம் உறுதிமொழி அளித்த நம்பிக்கையாளர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களில் நம்பிக்கையும் உளத்தூய்மையும் உண்மையும் உள்ளது என்பதை அவன் அறிந்துகொண்டான். எனவேதான் அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கினான். மக்காவில் நுழைவது அவர்களுக்குத் தவறியதற்குப் பகரமாக அல்லாஹ் அவர்களுக்கு கைபர் வெற்றி என்னும் நெருக்கமான ஒரு வெற்றியைக் கூலியாக வழங்கினான்.
تفسیرهای عربی:
وَّمَغَانِمَ كَثِیْرَةً یَّاْخُذُوْنَهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
48.19. அவன் அவர்களுக்கு ஏராளனமான போர்ச் செல்வங்களை அளித்தான். அவர்கள் அவற்றை கைபர்வாசிகளிடமிருந்து கைப்பற்றினார்கள். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.
تفسیرهای عربی:
وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِیْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَیْدِیَ النَّاسِ عَنْكُمْ ۚ— وَلِتَكُوْنَ اٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ وَیَهْدِیَكُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
48.20. -நம்பிக்கையாளர்களே!- எதிர்காலத்தில் இஸ்லாமிய வெற்றிகளில் ஏராளமான போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவீர்கள் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். உங்களுக்கு கைபரின் போர்ச் செல்வங்களை விரைவாக வழங்கியுள்ளான். நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் குடும்பத்தாருக்கு தீங்கிழைக்க நாடிய யூதர்களை அவன் தடுத்தான். இது, அவசரமான இந்த போர்ச் செல்வங்கள் உங்களுக்கு இறை உதவியின் அடையாளமாக இருக்கும்பொருட்டும் உங்களுக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும்தான்.
تفسیرهای عربی:
وَّاُخْرٰی لَمْ تَقْدِرُوْا عَلَیْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟
48.21. தற்சமயம் நீங்கள் அடைய முடியாத வேறுவகையான போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அது அவனுடைய அறிவிலும் திட்டத்திலும் இருக்கின்றது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்தி விடாது.
تفسیرهای عربی:
وَلَوْ قَاتَلَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
48.22. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் உங்களுடன் போரிட்டாலும் உங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். பின்னர் அவர்கள் தங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பாளனையோ உங்களுடன் போராடுவதற்கு தங்களுக்கு உதவி செய்யும் உதவியாளனையோ காண மாட்டார்கள்.
تفسیرهای عربی:
سُنَّةَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ— وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
48.23. நம்பிக்கையாளர்கள் வெற்றி பெறுவதும் நிராகரிப்பாளர்கள் தோல்வியடைவதும் எல்லா காலகட்டத்திலும் இடங்களிலும் நிகழக்கூடிய உறுதியான ஒன்றாகும். இதுதான் இந்த பொய்ப்பிப்பாளர்களுக்கு முன்னர் கடந்துவிட்ட சமூகங்களில் அல்லாஹ்வின் நியதியாகும். -தூதரே!- அல்லாஹ்வின் நியதியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• إخبار القرآن بمغيبات تحققت فيما بعد - مثل الفتوح الإسلامية - دليل قاطع على أن القرآن الكريم من عند الله.
1. -இஸ்லாமிய வெற்றிகள் போன்ற- பின்பு நடந்தேறிய முன்னறிவிப்புகளைக் குர்ஆன் தெரிவித்திருப்பது, நிச்சயமாக அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதம் என்பதற்கான திட்டவட்டமான சான்றாகும்.

• تقوم أحكام الشريعة على الرفق واليسر.
2. மார்க்கத்தின் சட்டங்கள் மென்மை மற்றும் இலகு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

• جزاء أهل بيعة الرضوان منه ما هو معجل، ومنه ما هو مدَّخر لهم في الآخرة.
3. பைஅத்துர் ரிள்வான் என்றும் உறுதிமொழியில் பங்கேற்றவர்களுக்கான கூலியில் சிலவை விரைவாகவும் சிலவை மறுமை நாளுக்காகவும் சேகரித்துவைக்கப்பட்டுள்ளது.

• غلبة الحق وأهله على الباطل وأهله سُنَّة إلهية.
4. சத்தியமும் சத்தியவாதிகளும் அசத்தியத்தையும் அசத்தியவாதிகளையும் மிகைப்பது இறைநியதியாகும்.

 
ترجمهٔ معانی سوره: فتح
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن