Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی آیه: (158) سوره: انعام
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ رَبُّكَ اَوْ یَاْتِیَ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ ؕ— یَوْمَ یَاْتِیْ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ لَا یَنْفَعُ نَفْسًا اِیْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِیْۤ اِیْمَانِهَا خَیْرًا ؕ— قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
6.158. இவ்வுலகில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் தங்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் இந்த நிராகரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பு கூறுவதற்காக உம் இறைவனின் வருகையை எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமையை அறிவிக்கக்கூடிய உம் இறைவனின் சில அத்தாட்சிகளையா? சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது போன்ற உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வெளிப்பட்டுவிடும் நாளில் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கையோ இதுவரை நற்செயல் புரியாத நம்பிக்கையாளனுக்கு அவன் அப்போது செய்யும் செயல்களோ எந்தப் பயனையும் அளிக்காது. தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• أن الدين يأمر بالاجتماع والائتلاف، وينهى عن التفرق والاختلاف.
1. மார்க்கம் ஒற்றுமையாக இருக்கும்படி கட்டளையிடுகிறது. பிரிவினையையும் முரண்பாட்டையும் தடுக்கிறது.

• من تمام عدله تعالى وإحسانه أنه يجازي بالسيئة مثلها، وبالحسنة عشرة أمثالها، وهذا أقل ما يكون من التضعيف.
2. பரிபூரண இறைநீதி மற்றும் நல்லுபகாரத்தின் வெளிப்பாடு, அவன் தீமைக்கேற்பவே கூலி வழங்குகிறான். ஆனால் ஒரு நன்மைக்கு பத்து மடங்கு அதிகமாக கூலி வழங்குகிறான். இரட்டிப்பில் இதுவே மிகக் குறைந்த அளவாகும்.

• الدين الحق القَيِّم يتطَلب تسخير كل أعمال العبد واهتماماته لله عز وجل، فله وحده يتوجه العبد بصلاته وعبادته ومناسكه وذبائحه وجميع قرباته وأعماله في حياته وما أوصى به بعد وفاته.
3. நேர்த்தியான உண்மை மார்க்கம் அடியானின் அனைத்து காரியங்கள் மற்றும் கவனங்களை அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என்பதை வேண்டுகின்றது. தனது தொழுகை, வணக்க வழிபாடுகள், பலியிடல்கள் அனைத்து வணக்கங்கள் மற்றும் செயற்பாடுகள், இவ்வுலக வாழ்க்கை, மரணத்தின் பின் நிறைவேற்றுமாறு கூறும் இறுதி உபதேசம் ஆகிய அனைத்திலும் அடியான் அல்லாஹ்வின் பக்கமே முன்னோக்க வேண்டும்.

 
ترجمهٔ معانی آیه: (158) سوره: انعام
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن