Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: توبه   آیه:
اِنَّمَا النَّسِیْٓءُ زِیَادَةٌ فِی الْكُفْرِ یُضَلُّ بِهِ الَّذِیْنَ كَفَرُوْا یُحِلُّوْنَهٗ عَامًا وَّیُحَرِّمُوْنَهٗ عَامًا لِّیُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَیُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ؕ— زُیِّنَ لَهُمْ سُوْٓءُ اَعْمَالِهِمْ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟۠
9.37. அரபிகள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தது போன்று புனிதப்படுத்தப்பட்ட மாதத்தின் புனிதத்தை, புனிதப்படுத்தப்படாத ஒரு மாதத்திற்கு மாற்றி, அதனைப் புனித மாதத்தின் இடத்தில் வைத்து அதன் புனிதத்தைப் பிற்படுத்துவது இறைநிராகரிப்பை விட மேலதிகமான நிராகரிப்பாகும். புனித மாதங்களின் விடயத்தில் அவனது சட்டத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர். ஷைத்தான் தவறான இந்த வழிகாட்டலை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வை நிராகரித்தவர்களை வழிகெடுக்கிறான். ஒரு வருடம் அதன் புனிதத்தை மீறுகின்றனர். மற்றொரு வருடம் அதன் புனிதத்தைப் பேணுகின்றனர். உரிய மாதத்துக்கு முரண்பட்டாலும் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் எண்ணிக்கையுடன் உடன்படுவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். எனவேதான் ஒரு மாதத்தின் புனிதத்தை மீறினால் அதற்குப் பகரமாக இன்னுமொரு மாதத்தைப் புனிதப்படுத்துகின்றனர். அதன் மூலம் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் புனிதத்தை அவர்கள் மீறுகின்றனர். அதற்குரிய சட்டங்களுக்கு மாறுசெய்கின்றனர். அவர்களின் இந்த தீய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டியுள்ளான். எனவே அதன்படி செயல்படுகிறார்கள். அவற்றில் ஒன்றே புனித மாதத்தைப் பிற்போடுவதாகும். நிராகரிப்பில் நிலைத்திருக்கும் நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
تفسیرهای عربی:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَی الْاَرْضِ ؕ— اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ ۚ— فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ ۟
9.38. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போரிடுவதற்காக அழைக்கப்பட்டால் சோம்பலுற்று, உங்களின் வீடுகளில் தங்கி விடுகிறீர்களே? அல்லாஹ் தன் பாதையில் போரிடுபவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள நிலையான மறுமை இன்பங்களுக்குப் பகரமாக அழியக்கூடிய, நிரந்தரமற்ற இவ்வுலக இன்பங்களை விரும்புகிறீர்களா? மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலக இன்பங்கள் அற்ப இன்பங்களேயாகும். நிரந்தரமானதை விட்டு விட்டு அழியக்கூடியதையும் மகத்தானதை விட்டுவிட்டு அற்பமானதையும் ஓர் அறிவாளி எவ்வாறு தேர்ந்தெடுப்பான்?
تفسیرهای عربی:
اِلَّا تَنْفِرُوْا یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬— وَّیَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَیْـًٔا ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
9.39. -நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போர்புரிவதற்குப் புறப்படவில்லையெனில் உங்களை அடக்குதல், இழிவுபடுத்தல் போன்றவற்றின் மூலம் அவன் உங்களைத் தண்டிப்பான். உங்களை விடுத்து வேறோரு சமூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படக்கூடியவர்களாக, போருக்காக அழைப்புவிடுக்கப்பட்டால் புறப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. அவன் உங்களை விட்டும் தேவையற்றவன். நீங்கள்தாம் அவன்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிட முடியாது. நீங்கள் இல்லாவிட்டாலும் தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவி செய்வதற்கு அவன் ஆற்றலுடையவன்.
تفسیرهای عربی:
اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ— فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَاَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِیْنَ كَفَرُوا السُّفْلٰی ؕ— وَكَلِمَةُ اللّٰهِ هِیَ الْعُلْیَا ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
9.40. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யவில்லையெனில், அவருடைய அழைப்பை ஏற்று அவனுடைய பாதையில் போர் செய்வதற்கான அவரது அழைப்புக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையெனில், நீங்கள் இல்லாதிருந்த சமயத்திலும் அவன் அவருக்கு உதவிசெய்துள்ளான். அதுதான் இணைவைப்பாளர்கள் அவரையும் அபூபக்கர் (ரழி) அவர்களையும் வெளியேற்றிய சமயமாகும். அவர்கள் இருவரும் ஸவ்ர் என்னும் குகையில் வேறு யாருமின்றி தம்மைத் தேடிக்கொண்டிருந்த நிராகரிப்பாளர்களை விட்டும் மறைந்திருந்தனர். இணைவைப்பாளர்கள் தம்மைக் கண்டுபிடித்து விடுவார்களோ என அபூபக்ர் (ரழி) பயந்த போது தூதர் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் நம்முடனிருந்து பலப்படுத்திக் கொண்டும் உதவி செய்து கொண்டும் இருக்கின்றான்.” அல்லாஹ் தன் தூதரின் உள்ளத்தில் நிம்மதியை இறக்கினான். அவருக்கு உதவி செய்வதற்காக உங்களால் பார்க்க முடியாத அவரைப் பலப்படுத்தும் வானவர் படையை அனுப்பினான். இஸ்லாத்தை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்தினான். அல்லாஹ்வின் வாக்கை உயர்ந்ததாக மாற்றினான். அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்குவதிலும் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது திட்டமிடலில் தான் அமைத்த விதிகளில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• العادات المخالفة للشرع بالاستمرار عليها دونما إنكار لها يزول قبحها عن النفوس، وربما ظُن أنها عادات حسنة.
1. மார்க்கத்திற்கு முரணான பழக்கவழக்கங்களை எவ்வித எதிர்ப்புமின்றி தொடர்ந்து செய்யும் போது உள்ளத்திலிருந்து அதன் அருவருப்புத் தன்மை நீங்கிவிடுகிறது. சில சமயங்களில் அவற்றை நல்ல பழக்கவழக்கங்கள் என்று கருதப்படும்.

• عدم النفير في حال الاستنفار من كبائر الذنوب الموجبة لأشد العقاب، لما فيها من المضار الشديدة.
2. போர்ச் சூழலில் போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டும் புறப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். ஏனெனில் பலவிதமான கெடுதிகள் உள்ளன.

• فضيلة السكينة، وأنها من تمام نعمة الله على العبد في أوقات الشدائد والمخاوف التي تطيش فيها الأفئدة، وأنها تكون على حسب معرفة العبد بربه، وثقته بوعده الصادق، وبحسب إيمانه وشجاعته.
3. மன அமைதியின் சிறப்பு. உள்ளங்கள் நடுங்கும் கடினமான சமயங்களில் அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் பெரும் அருளே மன அமைதியாகும். இறைவனைக் குறித்த அடியானின் புரிதல், அவனது வாக்குறுதியின் மீதுள்ள நம்பிக்கை, அவனுடைய இறைநம்பிக்கை துணிவு என்பவற்றுக்கேற்ப இந்த அருள் கிடைக்கும்.

• أن الحزن قد يعرض لخواص عباد الله الصدِّيقين وخاصة عند الخوف على فوات مصلحة عامة.
4. உண்மையாளர்களாக இருக்கின்ற அல்லாஹ்வின் பிரத்யேக அடியார்களுக்கும் கவலை ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக பொது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உண்டாகும் அச்சத்தின் போது இக்கவலை அவர்களுக்கு ஏற்படும்.

 
ترجمهٔ معانی سوره: توبه
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن