Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - અબ્દુલ્ હમીદ બાકૂવી * - ભાષાંતરોની અનુક્રમણિકા

XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ બકરહ   આયત:
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
225. (மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவன், அதிகம் பொறுமை உடையவன் ஆவான்.
અરબી તફસીરો:
لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ— فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
226. தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
અરબી તફસીરો:
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
227. ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் ‘தலாக்' விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவன், (அவர்கள் கருதிய ‘தலாக்'கை) நன்கறிபவன் ஆவான்.
અરબી તફસીરો:
وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ— وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ— وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪— وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
228. ‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்.
અરબી તફસીરો:
اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪— فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ— وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ— فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
229. (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). ஆகவே, (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது ஒரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதில் எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால், நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
અરબી તફસીરો:
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ— فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
230. (இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்து கொள்ளும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டு கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய சட்ட வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கிறான்.
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ બકરહ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - અબ્દુલ્ હમીદ બાકૂવી - ભાષાંતરોની અનુક્રમણિકા

તેનું અનુવાદ શૈખ અબ્દુલ્ હમીદ બાકૂવી દ્વારા કરવામાં આવ્યું છે.

બંધ કરો