Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: અન્ નિસા   આયત:
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ— وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ— وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
4.163. தூதரே! உமக்கு முந்தைய தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் வஹி அறிவித்தோம். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த தூதர்களுக்கும் வஹி அறிவித்தோம். இப்ராஹீமுக்கும் அவரது மகன்களான இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்கும், இஸ்ஹாக்கின் மகன் யஅகூபிற்கும், அஸ்பாத் (இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் தூதர்களாக அனுப்பப்பட்ட யஅகூபின் மகன்கள்) ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்தோம். மேலும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் வஹீ அறிவித்தோம். தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.
અરબી તફસીરો:
وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ— وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ
4.164. நாம் அனுப்பிய சில தூதர்களைக் குறித்து குர்ஆனில் உமக்கு எடுத்துரைத்துள்ளோம். சில தூதர்களைக் குறித்து நாம் உமக்கு எடுத்துரைக்கவில்லை. நாம் எடுத்துரைக்காமல் விட்டுவிட்டதிலும் ஒரு நோக்கம் இருக்கிறது. மூஸாவை கௌரவப்படுத்துவதற்காக அல்லாஹ் அவருடன் நேரடியாக பேசியும் இருக்கின்றான்.
અરબી તફસીરો:
رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
4.165. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு நன்மை உண்டு என்று நற்செய்தி கூறுவோராகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு என்று எச்சரிக்கை செய்வோராகவுமே நாம் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் அனுப்பப்பட்டபிறகு மக்கள் சாக்குப்போக்குக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அனுப்பினோம். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது தீர்ப்பில் ஞானமிக்கவன்.
અરબી તફસીરો:
لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ— وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
4.166. தூதரே! யூதர்கள் உம்மை நிராகரித்தால் உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அதில் அவன் அடியார்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தனது விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கிய கல்வியை அதிலே இறக்கியுள்ளான். நீர் கொண்டுவந்தது உண்மையே என அல்லாஹ்வின் சாட்சியோடு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனுடைய சாட்சியம் மற்ற அனைவரின் சாட்சியத்தைக் காட்டிலும் போதுமானது.
અરબી તફસીરો:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟
4.167. உமது தூதை நிராகரித்து மக்களை இஸ்லாத்தைவிட்டும் தடுத்தவர்கள் சத்தியத்தைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்கள்.
અરબી તફસીરો:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ
4.168. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அதே நிராகரிப்பில் நிலைத்திருந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; அவனுடைய வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய எந்தவொரு வழியையும் அவர்களுக்குக் காட்டவும் மாட்டான்.
અરબી તફસીરો:
اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
4.169. நரகத்தின்பால் கொண்டு சேர்க்கும் வழியைத் தவிர. அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. எதுவும் அவனைத் தடுக்க முடியாது.
અરબી તફસીરો:
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ— وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.170. மனிதர்களே! தூதர் முஹம்மது உங்களிடம் அல்லாஹ்விடமிருந்து நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டுவந்ததின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நலவாக அமையும். நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், உங்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிடாது. அவன் உங்களின் ஈமானைவிட்டும் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கிடையிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. நேர்வழிக்குத் தகுதியானவர்களை அவன் அறிந்து அதனை அவர்களுக்கு இலகுபடுத்துபனாகவும். அதற்குத் தகுதியற்றவர்களை அறிந்து அதனை விட்டும் அவர்களைத் திருப்பிவிடுபவனாகவும் இருக்கிறான். சொல்லிலும் செயலிலும் தான் அமைத்த சட்டங்களிலும் நிர்ணயத்திலும் அவன் ஞானமிக்கவன்.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• إثبات النبوة والرسالة في شأن نوح وإبراهيم وغيرِهما مِن ذرياتهما ممن ذكرهم الله وممن لم يذكر أخبارهم لحكمة يعلمها سبحانه.
1. நூஹ், இப்ராஹீம் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு தூது மற்றும் நபித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்ற விஷயம் தெளிவாகிறது. அவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். மற்றும் சிலரை தான் அறிந்த சில காரணத்துக்காக குறிப்பிடவில்லை.

• إثبات صفة الكلام لله تعالى على وجه يليق بذاته وجلاله، فقد كلّم الله تعالى نبيه موسى عليه السلام.
2. அல்லாஹ் மூஸாவுடன் பேசி இருக்கிறான். இதிலிருந்து அவனது தகுதிக்கேற்ற விதத்தில் பேசும் பண்பு உண்டு என்பது உறுதியாகிறது.

• تسلية النبي محمد عليه الصلاة والسلام ببيان أن الله تعالى يشهد على صدق دعواه في كونه نبيًّا، وكذلك تشهد الملائكة.
3. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரே என அல்லாஹ்வும் வானவர்களும் சாட்சி கூறும் விடயத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் நபியவர்களுக்கு ஆறுதலளித்தல்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અન્ નિસા
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તફસીર લિદ્ દિરાસતીલ્ કુરઆનિયહ કેન્દ્ર દ્વારા પ્રકાશિત.

બંધ કરો