Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: અશ્ શૂરા   આયત:
وَتَرٰىهُمْ یُعْرَضُوْنَ عَلَیْهَا خٰشِعِیْنَ مِنَ الذُّلِّ یَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِیٍّ ؕ— وَقَالَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اَلَاۤ اِنَّ الظّٰلِمِیْنَ فِیْ عَذَابٍ مُّقِیْمٍ ۟
42.45. -தூதரே!- இந்த அநியாயக்காரர்கள் இழிவுபடுத்தப்பட்டு நரகத்தின் முன் நிறுத்தப்படுவதை நீர் காண்பீர். அப்போது அவர்கள் அதன் கடுமையான பயத்தினால் கடைக்கண்ணால் மக்களைப் பார்ப்பார்கள். அப்போது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை சந்தித்து தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் இழந்தவர்கள்தாம் உண்மையில் நஷ்டமடைந்தவர்கள்.” அறிந்துகொள்ளுங்கள், திட்டமாக நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் என்றும் முடிவடையாத நிரந்தர வேதனையில் வீழ்ந்து கிடப்பார்கள்.
અરબી તફસીરો:
وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِیَآءَ یَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِیْلٍ ۟ؕ
42.46. மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி உதவிசெய்யக்கூடிய யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு வழிகெடுத்து விடுவானோ அவருக்கு சத்தியத்தின்பால் நேர்வழி பெற அதன்பால் கொண்டுசெல்லும் எந்தவொரு வழியும் ஒருபோதும் இல்லை.
અરબી તફસીરો:
اِسْتَجِیْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ ؕ— مَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ یَّوْمَىِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِیْرٍ ۟
42.47. -மனிதர்களே!- வந்தால் தடுக்க முடியாத மறுமை நாள் வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனின் கட்டளைகளை செயல்படுத்தல், அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருத்தல், காலம் தாழ்த்துவதை விட்டுவிடுதல் ஆகிவற்றின் பக்கம் விரைவதன் மூலம் அவனுக்குப் பதிலளியுங்கள். அந்நாளில் உங்களுக்கு நீங்கள் ஒதுங்கும் எந்தப் புகலிடமும் இருக்காது. உலகில் நீங்கள் செய்த பாவங்களையும் உங்களால் மறுக்க முடியாது.
અરબી તફસીરો:
فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ؕ— اِنْ عَلَیْكَ اِلَّا الْبَلٰغُ ؕ— وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ ۟
42.48. -தூதரே!- நீர் ஏவும் விஷயங்களை அவர்கள் புறக்கணித்தால் அறிந்துகொள்ளும், அவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நான் கட்டளையிட்டவற்றை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களை விசாரணை செய்வது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருளை வழங்கி அவனை அனுபவிக்கச் செய்தால் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவர்களின் பாவங்களின் காரணமாக ஏதேனும் துன்பம், சோதனை மனிதர்களைத் தீண்டிவிட்டால், அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிப்பதும், நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வதும் அல்லாஹ் தனது நோக்கத்தின் அடிப்படையில் முடிவுசெய்தவற்றை வெறுப்பதுமே நிச்சயமாக அவர்களின் இயல்பாகும்.
અરબી તફસીરો:
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ ۟ۙ
42.49,50. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் பூரண ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
અરબી તફસીરો:
اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ— وَیَجْعَلُ مَنْ یَّشَآءُ عَقِیْمًا ؕ— اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ ۟
42.49,50. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்குகி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
અરબી તફસીરો:
وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُ ؕ— اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ ۟
42.51. அல்லாஹ் எந்த மனிதனுடனும் நேரடியாக பேச மாட்டான். ஆயினும் உள்ளுணர்வுடனான வஹி அல்லது வேறு வழியில் மூலமோ அல்லது பார்க்காமல் அவனது பேச்சை செவியேற்பதன் மூலம் பேசுவதோ அல்லது ஜிப்ரீல் போன்ற ஒரு வானவரை அனுப்பியோ அன்றி. அந்த வானவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவன் நாடியதை மனித இனத்தைச் சார்ந்த தூதருக்கு வஹியாக அறிவிக்கின்றார். நிச்சயமாக அவன் தன் உள்ளமையிலும் பண்புகளிலும் மிக உயர்ந்தவன். தன் படைப்பில், விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• وجوب المسارعة إلى امتثال أوامر الله واجتناب نواهيه.
1. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் விரைவாகச் செயல்பட வேண்டும்.

• مهمة الرسول البلاغ، والنتائج بيد الله.
2. எடுத்துரைப்பது மட்டுமே தூதர்மீதுள்ள கடமையாகும். முடிவு அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது.

• هبة الذكور أو الإناث أو جمعهما معًا هو على مقتضى علم الله بما يصلح لعباده، ليس فيها مزية للذكور دون الإناث.
3. ஆண் குழந்தைகளை மாத்திரம் அல்லது பெண்குழந்தைகளை மாத்திரம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்குவது தனது அடியார்களுக்கு பொருத்தமானது என அல்லாஹ் அறிந்ததன்படியே நடைபெறுகிறது. இதில் பெண்களை விட ஆண்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை.

• يوحي الله تعالى إلى أنبيائه بطرق شتى؛ لِحِكَمٍ يعلمها سبحانه.
4. அல்லாஹ் அவன் அறிந்த நோக்கங்களின்படி தன் நபிமார்களுக்கு பலமுறைகளில் வஹி அறிவிக்கிறான்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અશ્ શૂરા
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તફસીર લિદ્ દિરાસતીલ્ કુરઆનિયહ કેન્દ્ર દ્વારા પ્રકાશિત.

બંધ કરો