Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: મુહમ્મદ   આયત:
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ— فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِیْهَا الْقِتَالُ ۙ— رَاَیْتَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یَّنْظُرُوْنَ اِلَیْكَ نَظَرَ الْمَغْشِیِّ عَلَیْهِ مِنَ الْمَوْتِ ؕ— فَاَوْلٰى لَهُمْ ۟ۚ
47.20. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்கள் அவன் தன் தூதரின் மீது போர் புரிவதன் சட்டம் யாது என்பதை உள்ளடக்கிய ஏதேனும் அத்தியாயத்தை இறக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர்களாகக் கூறுகிறார்கள்: “அல்லாஹ் போர் புரிவது தொடர்பாக ஓர் அத்தியாயத்தை இறக்க வேண்டாமா?.” -தூதரே!- அவன் போர் புரிவது பற்றி அதன் தெளிவான சட்டங்களை உள்ளடக்கி ஏதேனும் உறுதியான அத்தியாயத்தை இறக்கிவிட்டால் யாருடைய உள்ளத்தில் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் கடுமையான பயத்தினால் மயக்கமுற்றவன் பார்ப்பதைபோல உம்மைப் பார்க்கிறார்கள். எனவே, பயத்தினால் போரை விட்டுப் பின்தங்கியதால் அவர்களின் அழிவு நெருங்கிவிட்டதாக அவர்களை அல்லாஹ் எச்சரித்தான்.
અરબી તફસીરો:
طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ ۫— فَاِذَا عَزَمَ الْاَمْرُ ۫— فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَیْرًا لَّهُمْ ۟ۚ
47.21. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நல்லவற்றைக் கூறுவதே அவர்களுக்கு நல்லது. போர் கடமையாக்கப்பட்டவுடன் அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் உண்மையாக இருந்து அவனுக்குக் கட்டுப்பட்டிருந்தால், நயவஞ்சகம் மற்றும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை விடவும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும்.
અરબી તફસીરો:
فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ ۟
47.22. நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணித்தால் நீங்கள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தவாறு பெரும்பாலும் நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் பூமியில் குழப்பம் விளைவிப்பீர்கள். குடும்ப உறவுகளை துண்டித்து விடுவீர்கள்.
અરબી તફસીરો:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰۤی اَبْصَارَهُمْ ۟
47.23. பூமியில் குழப்பம் விளைவித்து, உறவுகளைத் துண்டிக்கும் அவர்களைத்தான் அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சத்தியத்தை செவியேற்காதவாறு அவர்களின் காதுகளைச் செவிடாக்கி படிப்பினை பெறும்பொருட்டு பார்க்க முடியாதவாறு பார்வைகளையும் குருடாக்கிவிட்டான்.
અરબી તફસીરો:
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا ۟
47.24. குர்ஆனைப் புறக்கணிக்கும் இவர்கள் அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்கள் அதை சிந்தித்துப் பார்த்திருந்தால் அது அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் அறிவித்திருக்கும். எல்லாத் தீமைகளைவிட்டும் தூரமாக்கியிருக்கும். அல்லது அவர்களின் உள்ளங்களில் உபதேசம் உட்செல்லவோ அறிவுரை பயனளிக்கவோ முடியாத அளவுக்கு உறுதியாக மூடி பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா?
અરબી તફસીરો:
اِنَّ الَّذِیْنَ ارْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدَی ۙ— الشَّیْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ— وَاَمْلٰی لَهُمْ ۟
47.25. நிச்சயமாக தூதர் உண்மையானவர் என்பதற்கான ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பின்னரும் தங்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு நிராகரிப்பின் பக்கமும் நயவஞ்சகத்தின் பக்கமும் சென்றவர்களுக்கு ஷைத்தான்தான் அவர்களின் நிராகரிப்பையும் நயவஞ்சகத்தையும் அலங்கரித்துக் காட்டினான். அதனை அவர்களுக்கு இலகுபடுத்தினான். நீண்ட ஆசைகளைக் காட்டி ஆர்வமூட்டினான்.
અરબી તફસીરો:
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِیْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِیْعُكُمْ فِیْ بَعْضِ الْاَمْرِ ۚ— وَاللّٰهُ یَعْلَمُ اِسْرَارَهُمْ ۟
47.26. அவர்கள் இந்த வழிகேட்டைப் பெற்றதற்கான காரணம் தன் தூதருக்கு இறக்கப்பட்டதை வெறுக்கும் இணைவைப்பாளர்களிடம் இரகசியமாக “யுத்தத்திற்குத் தடையேற்படுத்தல் போன்ற சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியதுதான். அவர்கள் இரகசியமாகக் கூறுவதையும் வெளிப்படையாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிகிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே அவற்றில் தான் நாடியதைத் தன் தூதருக்கு அவன் வெளிப்படுத்துகிறான்.
અરબી તફસીરો:
فَكَیْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۟
47.27. உயிர்களைக் கைப்பற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களைக் கைப்பற்றும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையை, அவர்களின் மோசமான நிலைமையை நீர் காண வேண்டுமே!
અરબી તફસીરો:
ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠
47.28. அவர்கள் அனுபவிக்கும் இந்த கடுமையான வேதனைக்குக் காரணம், அவர்கள், நிராகரிப்பு, நயவஞ்சகம், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தல் ஆகிய அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடிய ஒவ்வொன்றையும் பின்பற்றி, இறைவனின்பால் நெருக்கிவைக்கும், அவனது திருப்தியைப் பெற்றுத்தரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுதல், அவனுடைய தூதரைப் பின்பற்றுதல் ஆகியவற்றை வெறுத்தார்கள் என்பதுதான். ஆகவே அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்.
અરબી તફસીરો:
اَمْ حَسِبَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ یُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ۟
47.29. உள்ளத்தில் சந்தேகம் கொண்ட நயவஞ்சகர்கள் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலுள்ள குரோதங்களை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டார்களா? பொய்யர்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார்? என்பதைப் பிரித்தறியவும் நயவஞ்சகர்கள் அவமானப்படவும் அவன் சோதனைகளினால் பரீட்சித்து நிச்சயம் அவற்றை வெளிப்படுத்துவான்.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• التكليف بالجهاد في سبيل الله يميّز المنافقين من صفّ المؤمنين.
1. அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விதியாக்குவது நயவஞ்சகர்களை நம்பிக்கையாளர்களின் அணியிலிருந்து வேறுபடுத்திவிடுகிறது.

• أهمية تدبر كتاب الله، وخطر الإعراض عنه.
2. அல்லாஹ்வின் வேதத்தை ஆய்வு செய்வதன் முக்கியத்துவமும், அதனைப் புறக்கணிப்பதன் விபரீதமும்.

• الإفساد في الأرض وقطع الأرحام من أسباب قلة التوفيق والبعد عن رحمة الله.
3. பூமியில் அட்டூழியம் புரிவது, உறவுகளை முறித்துக்கொள்வது அல்லாஹ்வின் உதவி குறைவதற்கும் அவனது அருளை விட்டும் தூரமாவதற்குமுரிய காரணங்களாகும்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: મુહમ્મદ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તફસીર લિદ્ દિરાસતીલ્ કુરઆનિયહ કેન્દ્ર દ્વારા પ્રકાશિત.

બંધ કરો