કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

પેજ નંબર:close

external-link copy
11 : 14

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِیَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டே தவிர ஓர் ஆதாரத்தை உங்களிடம் நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது; நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.” info
التفاسير:

external-link copy
12 : 14

وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَكَّلَ عَلَی اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَا ؕ— وَلَنَصْبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیْتُمُوْنَا ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟۠

“நாங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? அவன்தான் எங்களை எங்கள் பாதைகளில் நேர்வழிபடுத்தினான். நீங்கள் எங்களை துன்புறுத்துவதில் நாங்கள் நிச்சயமாக பொறு(த்திரு)ப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” (என்றும் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
13 : 14

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— فَاَوْحٰۤی اِلَیْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِیْنَ ۟ۙ

நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பிடவேண்டும்” என்று கூறினார்கள். ஆகவே, அவர்களுடைய இறைவன் “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு வஹ்யி அறிவித்தான். info
التفاسير:

external-link copy
14 : 14

وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْ بَعْدِهِمْ ؕ— ذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِیْ وَخَافَ وَعِیْدِ ۟

“அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக குடி அமர்த்துவோம். இ(ந்த வாக்கான)து எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ இன்னும் என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்” (என்று அவர்களுடைய இறைவன் வஹ்யி அறிவித்தான்). info
التفاسير:

external-link copy
15 : 14

وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِیْدٍ ۟ۙ

ஆகவே, அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் அழிந்தனர். info
التفاسير:

external-link copy
16 : 14

مِّنْ وَّرَآىِٕهٖ جَهَنَّمُ وَیُسْقٰی مِنْ مَّآءٍ صَدِیْدٍ ۟ۙ

அவனுக்கு பின்புறத்தில் ஜஹன்னம் நரகம் இருக்கும். சீழ் நீரிலிருந்து அவன் புகட்டப்படுவான். info
التفاسير:

external-link copy
17 : 14

یَّتَجَرَّعُهٗ وَلَا یَكَادُ یُسِیْغُهٗ وَیَاْتِیْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَیِّتٍ ؕ— وَمِنْ وَّرَآىِٕهٖ عَذَابٌ غَلِیْظٌ ۟

அதை அவன் (அள்ளி) அள்ளிக் குடிப்பான். அதை இலகுவாக குடித்து விடமாட்டான். ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் (வேதனை) அவனுக்கு வரும். (அந்த வேதனையில்) அவன் இறந்து விடுபவனாக இல்லை. அவனுக்குப் பின்னால் (இன்னும் கடினமான) வேதனை (காத்திருக்கிறது). info
التفاسير:

external-link copy
18 : 14

مَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ ١شْتَدَّتْ بِهِ الرِّیْحُ فِیْ یَوْمٍ عَاصِفٍ ؕ— لَا یَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰی شَیْءٍ ؕ— ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟

தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றது! தாங்கள் செய்ததில் எதையும் அவர்கள் (அடைய) சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும். info
التفاسير: