કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

પેજ નંબર:close

external-link copy
126 : 20

قَالَ كَذٰلِكَ اَتَتْكَ اٰیٰتُنَا فَنَسِیْتَهَا ۚ— وَكَذٰلِكَ الْیَوْمَ تُنْسٰی ۟

அவன் (அல்லாஹ்) கூறுவான்: அவ்வாறுதான் நமது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் நீ அவற்றை மறந்தாய். அவ்வாறே இன்றும் நீ மறக்கப்படுவாய். info
التفاسير:

external-link copy
127 : 20

وَكَذٰلِكَ نَجْزِیْ مَنْ اَسْرَفَ وَلَمْ یُؤْمِنْ بِاٰیٰتِ رَبِّهٖ ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰی ۟

இவ்வாறுதான் வரம்பு மீறிவிட்டு, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவருக்கு கூலிகொடுப்போம். மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும். info
التفاسير:

external-link copy
128 : 20

اَفَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّهٰی ۟۠

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் அவர்களின் இருப்பிடங்களில் (கடந்து) செல்கிறார்கள். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
129 : 20

وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّی ۟ؕ

உமது இறைவனிடம் (அவர்களை முழுமையாக அடையவேண்டிய) ஒரு வாக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையும் முந்தி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (வரம்பு மீறியவர்களுக்கு) மரணம் ஏற்பட்டே இருக்கும். info
التفاسير:

external-link copy
130 : 20

فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ— وَمِنْ اٰنَآئِ الَّیْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰی ۟

அவர்கள் கூறுவதை நீர் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும் அது மறையும் முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்! info
التفاسير:

external-link copy
131 : 20

وَلَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَیٰوةِ الدُّنْیَا ۙ۬— لِنَفْتِنَهُمْ فِیْهِ ؕ— وَرِزْقُ رَبِّكَ خَیْرٌ وَّاَبْقٰی ۟

இவர்களைப் போன்றவர்களுக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் இன்பமளித்தவற்றின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். அதில் (-அந்த இன்பத்தில்) அவர்களை நாம் சோதிப்பதற்காக (அதைக் கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடையே (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும். info
التفاسير:

external-link copy
132 : 20

وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَیْهَا ؕ— لَا نَسْـَٔلُكَ رِزْقًا ؕ— نَحْنُ نَرْزُقُكَ ؕ— وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰی ۟

உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! உம்மிடம் நாம் உணவு எதையும் கேட்கவில்லை. நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான். info
التفاسير:

external-link copy
133 : 20

وَقَالُوْا لَوْلَا یَاْتِیْنَا بِاٰیَةٍ مِّنْ رَّبِّهٖ ؕ— اَوَلَمْ تَاْتِهِمْ بَیِّنَةُ مَا فِی الصُّحُفِ الْاُوْلٰی ۟

இவர்கள் கூறினார்கள்: இவர் (-முஹம்மது நபி) தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா? என்று. முந்திய வேதங்களில் உள்ள தெளிவான சான்று(கள்) அவர்களிடம் வரவில்லையா? info
التفاسير:

external-link copy
134 : 20

وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰی ۟

இதற்கு முன்னரே ஒரு வேதனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
135 : 20

قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْا ۚ— فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِیِّ وَمَنِ اهْتَدٰی ۟۠

(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, எதிர்பாருங்கள். நேரான பாதையுடையவர்கள் யார்? நேர்வழி பெற்றவர் யார்? என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். info
التفاسير: