કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

પેજ નંબર:close

external-link copy
38 : 7

قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ— كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ— حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ— قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬— قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟

ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (பாவிகளான) கூட்டங்களில் (இணைந்து) நரகத்தில் நுழையுங்கள் என்று (அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் (நரகத்தில்) நுழையும்போதெல்லாம் அது தன் சக கூட்டத்தை சபிக்கும். இறுதியாக, அதில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து “எங்கள் இறைவா! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தனர். எனவே, அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு!” என்று கூறும். “(உங்களில்) எல்லோருக்குமே இருமடங்கு (வேதனை) உண்டு. எனினும் அறியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான். info
التفاسير:

external-link copy
39 : 7

وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠

அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை. ஆகவே, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்”. info
التفاسير:

external-link copy
40 : 7

اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟

நிச்சயமாக நம் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தவர்கள் அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம். info
التفاسير:

external-link copy
41 : 7

لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟

நரகத்தில் அவர்களுக்கு (கீழே) ஒரு (நெருப்பு) விரிப்பும், அவர்களுக்கு மேல் (போர்த்த நெருப்புப்) போர்வைகளும் உண்டு. அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம். info
التفاسير:

external-link copy
42 : 7

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

ஓர் ஆன்மாவை (அதற்கு நாம் சட்டம் கொடுத்து) சிரமப்படுத்த மாட்டோம் அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர. நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
43 : 7

وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ— وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫— وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ— لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ— وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். இதை அடைவதற்கு எங்களை நேர்வழிபடுத்திய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. அல்லாஹ் எங்களை நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டு வந்தார்கள் என்று (அவர்கள்) கூறுவார்கள். “இந்த சொர்க்கம், நீங்கள் (நன்மைகள்) செய்து கொண்டிருந்ததனால் அதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்” என்று கூறி அழைக்கப்படுவார்கள். info
التفاسير: