Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Suratu Alhijr   Aya:

அஸூரா அல்ஹிஜ்ர்

daga cikin abunda Surar ta kunsa:
توعد المستهزئين بالقرآن، والوعد بحفظه تأييدًا للنبي وتثبيتًا له.
நபியவர்களுக்கு உறுதியையும் ஆதரவையும் வழங்குவதற்காக அல்குர்ஆனைப் பரிகாசம் செய்வோரை எச்சரித்தலும் அதனைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்தலும்

الٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟
15.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. உயர்ந்த அந்தஸ்துகளுடைய, அல்லாஹ்விடமிருந்து இறங்கியுள்ளது என்பதை அறிவிக்கக்கூடிய இந்த வசனங்கள், ஏகத்துவத்தையும் சட்ட திட்டங்களையும் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.
Tafsiran larabci:
رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟
15.2. தமக்கு உண்மை புரிந்து, உலகில் நிராகரிப்பில் இருந்தமை தவறு என்பது அவர்களுக்குப் புரியும் போது நாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கக் கூடாதா என்று மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் ஏங்குவார்கள்.
Tafsiran larabci:
ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
15.3. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களை விட்டு விடுவீராக. அவர்கள் கால்நடைகளைப் போன்று உண்ணட்டும்; அழியக்கூடிய இன்பங்களை அனுபவிக்கட்டும்; நீண்ட ஆசைகள் அவர்களை ஈமானை விட்டும், நற்செயல்களை விட்டும் திசைதிருப்பட்டும். மறுமை நாளில் அல்லாஹ்விடம் அவர்கள் சென்றால் அவர்கள் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.
Tafsiran larabci:
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟
15.4. எந்தவொரு அநியாயக்கார ஊர் மீதும் அல்லாஹ்வின் அறிவில் உள்ள அதற்கென குறிக்கப்பட்ட தவணையிலன்றி நாம் அழிவை இறக்கவில்லை. அதனை விட்டு முந்தவும் முடியாது; பிந்தவும் முடியாது.
Tafsiran larabci:
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟
15.5. எந்தவொரு சமூகத்திற்கும் அதற்கான தவணை வருவதற்கு முன்னர் அழிவு வராது. அதற்கான தவணை வந்து விட்டால் தாமதிக்கவும் மாட்டாது. அநியாயக்காரர்கள் அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.
Tafsiran larabci:
وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ
15.6. மக்காவைச் சார்ந்த நிராகரிப்பாளர்கள் தூதரிடம் கூறுகிறார்கள்: “அறிவுரை தன் மீது இறக்கப்பட்ட(தாக எண்ணிக்கொண்டிருப்ப)வரே! நிச்சயமாக உமது இந்த அழைப்பின் மூலம் நீர் பைத்தியக்காரர்களில் ஒருவராக இருக்கின்றீர். பைத்தியக்காரர்கள் செயல்படுவதைப் போன்றே நீர் செயல்படுகின்றீர்.
Tafsiran larabci:
لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
நீர் உண்மையாளராக இருந்தால் நீர் இறைத்தூதர்தான் என சாட்சி கூறும் வானவர்களைக் கூட்டிவரக்கூடாதா?
Tafsiran larabci:
مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟
15.8. மலக்குமார்கள் வரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்துரைத்தவாறு அல்லாஹ் கூறுகிறான்: “உங்களை வேதனையைக் கொண்டு அழிக்கும் சமயத்தில் ஒரு நோக்கத்திற்கேற்பவே தவிர நாம் வானவர்களை இறக்கமாட்டோம். - அவர்கள் நம்பிக்கை கொள்ளாத நிலையில் வானவர்களை நாம் இறக்கினால்- அவர்களுக்கு நாம் அவகாசம் அளிக்க மாட்டோம். மாறாக அவர்கள் உடனே தண்டிக்கப்படுவார்கள்.
Tafsiran larabci:
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
15.9. மனிதர்களுக்கு அறிவுரையாக அமையும் பொருட்டு நாம்தான் இந்த குர்ஆனை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கினோம். நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை கூடுதல், குறைவு, சிதைவு, திரிபு ஆகியவற்றிலிருந்து நாமே பாதுகாப்போம்.
Tafsiran larabci:
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟
15.10. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் தூதர்களை நிராகரித்த கூட்டங்களின்பால் அனுப்பினோம். அவர்கள் தூதர்களை நிராகரித்து விட்டார்கள். உமது சமுதாயத்தினால் மறுக்கப்படுவதில் நீர் புதுமையான ஒரு தூதர் அல்ல.
Tafsiran larabci:
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
15.11. முன்னர் நிராகரித்த அந்த கூட்டங்களிடம் யாரேனும் தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் நிராகரித்தார்கள்; அவரை பரிகாசம் செய்தார்கள்.
Tafsiran larabci:
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
15.12. அந்த சமூக மக்களின் உள்ளங்களில் நாம் நிராகரிப்பை நுழைவித்தது போலவே மக்காவில் வசிக்கும் இந்த இணைவைப்பாளர்களின் உள்ளங்களிலும் அவர்களின் பிடிவாதத்தினாலும் புறக்கணிப்பினாலும் நாம் நிராகரிப்பை நுழைவித்துவிட்டோம்.
Tafsiran larabci:
لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟
15.13. அவர்கள் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்த சமூகங்களை அழிக்கும் அல்லாஹ்வின் வழிமுறை நடந்தேயிருக்கின்றன. எனவே உம்மை நிராகரிப்பவர்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.
Tafsiran larabci:
وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ
15.14. இந்த நிராகரிப்பாளர்களுக்கு தெளிவான ஆதாரங்களின் மூலம் சத்தியம் தெளிவாகி விட்டாலும், அவர்கள் பிடிவாதங்கொண்டவர்களாகவே உள்ளனர். எனவேதான் நாம் அவர்களுக்காக வானத்தின் கதவைத் திறந்து அதில் அவர்கள் ஏறிப் பார்த்தாலும் (நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்).
Tafsiran larabci:
لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠
15.15. நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக “எங்களின் பார்வைகள் தடுக்கப்பட்டு உள்ளது. நாம் காண்பது சூனியத்தின் தாக்கமாகும். நாங்கள் சூனியம் செய்யப்பட்டுள்ளோம்” என்று கூறுவார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• القرآن الكريم جامع بين صفة الكمال في كل شيء، والوضوح والبيان.
1. கண்ணியமிக்க குர்ஆன் அனைத்திலும் பரிபூரணத்தையும், தெளிவு, விளக்கம் ஆகிய பண்புகளையும் ஒரு சேரப் பெற்றுள்ளது.

• يهتم الكفار عادة بالماديات، فتراهم مُنْغَمِسين في الشهوات والأهواء، مغترين بالأماني الزائفة، منشغلين بالدنيا عن الآخرة.
2. நிராகரிப்பாளர்கள் இவ்வுலக விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் மறுமையை விட்டுவிட்டு இவ்வுலக இன்பங்களிலும் இச்சைகளிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். போலியான எதிர்பார்ப்புக்களினால் ஏமாற்றத்தில் உள்ளனர்.

• هلاك الأمم مُقَدَّر بتاريخ معين، ومقرر في أجل محدد، لا تأخير فيه ولا تقديم، وإن الله لا يَعْجَلُ لعجلة أحد.
3. சமுதாயங்களின் அழிவு திகதி குறிப்பிடப்பட்டதாகும். குறித்த தவணையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முற்படுத்தலோ பிற்படுத்தலோ கிடையாது. எவருடைய அவசரத்திற்காகவும் அல்லாஹ் அவசரப்படப் போவதில்லை.

• تكفل الله تعالى بحفظ القرآن الكريم من التغيير والتبديل، والزيادة والنقص، إلى يوم القيامة.
4. மாற்றம், சிதைவு, கூட்டல், குறைத்தல் என்பவற்றை விட்டு மறுமை வரைக்கும் அல்குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.

وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
15.16. தரை மற்றும் கடலின் இருள்களில் மக்கள் பயணம் செய்யும் போது அவர்கள் வழிகாட்டலைப் பெறுவதற்காக நாம் வானத்தில் பிரமாண்டமான நட்சத்திரங்களை ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் வல்லமையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவற்றைப் பார்ப்போருக்கு நாம் அலங்கரித்துள்ளோம்.
Tafsiran larabci:
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
15.17. அல்லாஹ்வின் அருளில் இருந்து விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் வானத்தை பாதுகாத்துள்ளோம்.
Tafsiran larabci:
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
15.18. ஆனால் யாரேனும் வானவர்களின் உரையாடலை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்டால் பிரகாசமான எரிநட்சத்திரம் அவனைப் பின்தொடர்ந்து பொசுக்கி விடும்.
Tafsiran larabci:
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
15.19. மனிதர்கள் தங்குவதற்காக நாம் பூமியை விரித்துள்ளோம். அது அவர்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக உறுதியான மலைகளை அதில் ஏற்படுத்தியுள்ளோம். அதில் எல்லாவகையான தாவரங்களைிலும் நிர்ணயிக்கப்பட்ட ஞானத்திற்கேற்றவற்றை முளைக்கச் செய்தோம்.
Tafsiran larabci:
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
15.20. -மனிதர்களே!- பூமியில் நீங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உணவுப்பொருள்கள், பானங்கள் போன்றவை ஏற்படுத்தியுள்ளோம். உங்களைத் தவிர நீங்கள் வாழ்வாதாரம் அளிக்காத மனிதர்கள், மிருகங்கள் ஆகிய ஏனையோருக்கும் தேவையான வாழ்வாதாரத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
Tafsiran larabci:
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ— وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
15.21. மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பயனளிக்கக்கூடிய அனைத்தையும் உருவாக்குவதற்கு நாம் ஆற்றல் பெற்றவர்களாவோம். நாம் அனைத்தையும் நம் ஞானத்திற்கும் நாட்டத்திற்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவோடுதான் உருவாக்குகின்றோம்.
Tafsiran larabci:
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ— وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
15.22. நாம் காற்றை மேகங்களை சூல்கொள்ளச் செய்யக்கூடியதாக அனுப்புகின்றோம். சூல்கொண்ட மேகங்களிலிந்து மழையை இறக்குகின்றோம். மழை நீரை உங்களுக்குப் புகட்டுகின்றோம். -மனிதர்களே!- ஊற்றுகளாகவும்,கிணறுகளாவும் ஆகும் விதத்தில் இந்த நீரை உங்களால் சேகரிக்க முடியாது. அல்லாஹ்வே அதனை அதில் சேகரிக்கின்றான்.
Tafsiran larabci:
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
15.23. நிச்சயமாக நாமே உயிரற்றவைகளை இல்லாமையிலிருந்து உருவாக்குவதன் மூலமும் மரணத்தின் பின் எழுப்புவதன் மூலமும் உயிர்ப்பிக்கின்றோம். அவற்றின் தவணைகள் நிறைவடைந்துவிட்டால் உயிருள்ளவற்றை மரணிக்கச் செய்கின்றோம். நாமே நிலைத்திருந்து பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் உரிமையாளர்களாவோம்.
Tafsiran larabci:
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
15.24. பிறப்பு மற்றும் இறப்பின் அடிப்படையில் உங்களில் முந்தியவர்கள் யார் பிந்தியவர்கள் யார் என்பதையும் நாம் அறிவோம். அதில் எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.
Tafsiran larabci:
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
15.25. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன்தான் மறுமை நாளில் நற்செயல்புரிந்தவர்களுக்கு நற்கூலி வழங்குவதற்காகவும் தீயசெயல் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்காகவும் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நிச்சயமாக அவன் தன் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Tafsiran larabci:
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
15.26. நாம் மனிதனை தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த களி மண்ணிலிருந்து படைத்தோம். அந்த மண் கருப்பானதாகவும் நீண்ட காலம் இருந்ததனால் மாறக்கூடிய வாசனையுடையதாகவும் இருந்தது.
Tafsiran larabci:
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
15.27. ஆதமைப் படைப்பதற்கு முன்னரே ஜின்களின் தந்தையை கடும் வெப்பமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
Tafsiran larabci:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
15.28. -தூதரே!- உம் இறைவன் வானவர்களிடமும் -அவர்களுடன் இருந்த- இப்லீஸிடமும் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த நிறம் மாறிய கருப்புக் களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகின்றேன்.
Tafsiran larabci:
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
15.29. நான் அவரை செம்மையாகப் படைத்து வடிவம் கொடுத்து முழுமையாக்கியவுடன் என் கட்டளையைச் செயல்படுத்தும் பொருட்டு, அவருக்கு முகமன் கூறும் பொருட்டு நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும்.
Tafsiran larabci:
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
15.30. வானவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைப்படி அவருக்குச் சிரம்பணிந்தார்கள்.
Tafsiran larabci:
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
15.31. ஆனால் -வானவர்களுடன் இருந்த வானவர் அல்லாத- இப்லீஸ் வானவர்களுடன் சேர்ந்து ஆதமுக்குச் சிரம்பணியாமல் தவிர்ந்து கொண்டான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• ينبغي للعبد التأمل والنظر في السماء وزينتها والاستدلال بها على باريها.
1. வானத்தின் பக்கம், அதன் அலங்காரத்தின் பக்கம் அடியான் கவனம் செலுத்துவது அவசியமாகும். அதன் மூலம் அதனை படைத்தவனை அறிந்துகொள்ள வேண்டும்.

• جميع الأرزاق وأصناف الأقدار لا يملكها أحد إلا الله، فخزائنها بيده يعطي من يشاء، ويمنع من يشاء، بحسب حكمته ورحمته.
2. அனைத்து வாழ்வாதாரங்களும் பல்வேறு அளவுகளும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவற்றின் பொக்கிஷங்கள் அவனுடைய கையில்தான் இருக்கின்றன. அவன் தன் ஞானத்திற்கேற்ப, அருளுக்கேற்ப தான் நாடியவர்களுக்கு அவற்றிலிருந்து அளிக்கின்றான்; தான் நாடியவர்களுக்கு அவற்றைத் தடுக்கின்றான்.

• الأرض مخلوقة ممهدة منبسطة تتناسب مع إمكان الحياة البشرية عليها، وهي مثبّتة بالجبال الرواسي؛ لئلا تتحرك بأهلها، وفيها من النباتات المختلفة ذات المقادير المعلومة على وفق الحكمة والمصلحة.
3. பூமியின் மேல் மனித வாழ்வு சிறப்பாக அமைவதற்கு ஏற்ற வகையில் அது தயார்படுத்தப்பட்டு விரிந்ததாக படைக்கப்பட்டுள்ளது. அதில் வாழ்வோரினால் ஆட்டம் கண்டு விடாமல் இருப்பதற்காக உறுதியான மலைகளால் அது ஊன்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வகையான தாவரங்கள் ஞானம் மற்றும் நலன் என்பவற்றுக்கேற்ப குறிப்பிட்ட அளவோடு காணப்படுகின்றன.

• الأمر للملائكة بالسجود لآدم فيه تكريم للجنس البشري.
4. மலக்குமார்களை ஆதமுக்கு சிரம்பணியுமாறு ஏவியது மனித இனத்துக்குக் கிடைத்த கௌரவமாகும்.

قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
15.32. ஆதமுக்கு சிரம்பணிய மறுத்த இப்லீஸிடம் அல்லாஹ் கூறினான்: “என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்த வானவர்களுடன் சேர்ந்து சிரம்பணியாமல் உன்னைத் தடுத்தது எது?
Tafsiran larabci:
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
15.33. இப்லீஸ் கர்வத்துடன் கூறினான்: “நீ காய்ந்த மாற்றமடைந்த கருப்பான களிமண்ணால் படைத்த மனிதனுக்கு சிரம்பணிவது எனக்கு உகந்ததல்ல.
Tafsiran larabci:
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
15.34. அல்லாஹ் இப்லீஸிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”
Tafsiran larabci:
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
15.35. உன்மீது சாபம் உண்டு. நீ மறுமை நாள் வரை என் அருளை விட்டும் தூரமாகி விட்டாய்.
Tafsiran larabci:
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
15.36. இப்லீஸ் கூறினான்: “இறைவா! படைப்புகள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக. என்னை மரணிக்கச் செய்துவிடாதே.”
Tafsiran larabci:
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
15.37. அவனிடம் அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக தவணைகள் பிற்படுத்தப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டோரில் நீ உள்ளாய்.
Tafsiran larabci:
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
15.38. முதல் சூர் ஊதப்பட்டு படைப்புகள் அனைத்தும் மரணிக்கும் நேரம் வரை.
Tafsiran larabci:
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.39. இப்லீஸ் கூறினான்: “இறைவா! நீ என்னை வழிகெடுத்ததனால் பூமியில் பாவம் செய்வதை நான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுவேன். நேரான வழியை விட்டும் அவர்கள் அனைவரையும் கெடுப்பேன்.
Tafsiran larabci:
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
15.40. ஆயினும் உன்னை வணங்குவதற்காக நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட உன் அடியார்களைத் தவிர.
Tafsiran larabci:
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
15.41. அல்லாஹ் கூறினான்: இது என் பக்கம் கொண்டு சேர்க்கக்கூடிய நேரான பாதையாகும்.
Tafsiran larabci:
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
15.42. உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர நிச்சயமாக என்னை மட்டுமே உளத் தூய்மையுடன் வணங்கக்கூடிய என் அடியார்களை வழிகெடுப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
Tafsiran larabci:
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.43. இப்லீஸூக்கும் அவனைப் பின்பற்றிய வழிகெட்டவர்கள் அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
Tafsiran larabci:
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ— لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
15.44. அந்த நரகத்திற்கு ஏழு வாயில்கள் உண்டு. அவற்றின் வழியாக அவர்கள் நுழைவார்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும் இப்லீஸைப் பின்பற்றிய குறிப்பிட்ட தொகையினர் நுழைவார்கள்.
Tafsiran larabci:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
15.45. தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
Tafsiran larabci:
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
15.46. அவர்கள் அவற்றில் நுழையும் போது அவர்களிடம் கூறப்படும்: “துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, பயத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாக நீங்கள் இவற்றில் நுழையுங்கள்.”
Tafsiran larabci:
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
15.47. அவர்களின் உள்ளங்களிலிருக்கும் குரோதத்தையும் பகைமையையும் நாம் நீக்கி விடுவோம். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் சகோதரர்களாக, ஒருவரையொருவர் பார்த்தவாறு கட்டில்களில் அமர்ந்திருப்பார்கள்.
Tafsiran larabci:
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
15.48. அங்கு அவர்களுக்கு களைப்பு ஏற்படாது. அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். மாறாக என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள்.
Tafsiran larabci:
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
15.49. -தூதரே!- என் அடியார்களுக்கு அறிவித்து விடுவீராக: “நிச்சயமாக நான் அவர்களில் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தின் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.”
Tafsiran larabci:
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
15.50. நிச்சயமாக நான் அளிக்கும் தண்டனையே வேதனை மிக்க தண்டனையாகும் என்பதையும் அறிவித்து விடுவீராக. எனவே அவர்கள் என்னுடைய மன்னிப்பைப் பெறுவதற்காக, என் தண்டனையிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளட்டும்.
Tafsiran larabci:
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
15.51. இப்ராஹீமின் விருந்தினர்களாக வருகை தந்த வானவர்களின் தகவலை அவர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் அவருக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறவும் லூத்தின் சமூகத்தினருடைய அழிவைக் கொண்டு அறிவிக்கவும் வந்தவர்களாவர்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• في الآيات دليل على تزاور المتقين واجتماعهم وحسن أدبهم فيما بينهم، في كون كل منهم مقابلًا للآخر لا مستدبرًا له.
1. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வது, ஒன்று கூடுவது, ஒருவரையொருவர் பின்னோக்காமல், முன்னோக்கி தமக்கு மத்தியில் நல்லொழுக்குத்துடன் நடந்து கொள்வது ஆகியவை இறையச்சமுடையோரின் பண்புகள் என்பதற்கு இந்த வசனங்களில் ஆதாரம் இருக்கிறது.

• ينبغي للعبد أن يكون قلبه دائمًا بين الخوف والرجاء، والرغبة والرهبة.
2. அடியானின் உள்ளம் எப்பொழுதும் பயத்திற்கும், ஆதரவு வைப்பதற்கும், அச்சத்திற்கும், ஆர்வத்திற்கும், மத்தியில் இருப்பது அவசியமாகும்.

• سجد الملائكة لآدم كلهم أجمعون سجود تحية وتكريم إلا إبليس رفض وأبى.
3. வானவர்கள் அனைவரும் ஆதமைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவருக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் சிரம்பணியாமல் மறுத்துவிட்டான்.

• لا سلطان لإبليس على الذين هداهم الله واجتباهم واصطفاهم في أن يلقيهم في ذنب يمنعهم عفو الله.
4. அல்லாஹ் வழிகாட்டி, தேர்ந்தெடுத்தவர்களை அல்லாஹ்வின் மன்னிப்பை விட்டும் தடுக்கும் ஒரு பாவத்தில் வீழ்த்துவதற்கு இப்லீஸுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ— قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟
15.52. அவர்கள் அவரிடம் வந்த போது அவருக்கு சலாம் கூறினர். அவர்களது வாழ்த்து முறையை விட அழகிய முறையில் அவர்களுக்கு அவர் பதில் கூறினார். அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். ஏனெனில் அவர் அவர்களை மனிதர்கள் என்று எண்ணினார். அவர்கள் அதிலிருந்து உண்ணாததைக் கண்ட அவர், “நாங்கள் உங்களைக் கண்டு அஞ்சுகிறோம்” என்று கூறினார்.
Tafsiran larabci:
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
15.53. தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக உமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக விரைவில் உமக்கு அறிவு மிக்க ஆண்மகன் பிறப்பான்.”
Tafsiran larabci:
قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟
15.54. பிள்ளை கிடைக்கும் என்ற அவர்களின் நற்செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இப்ராஹீம் அவர்களிடம் கூறினார்: “இந்த தள்ளாத வயதிலும் எனக்கு குழந்தை பிறக்கும் என்று நற்செய்தி கூறுகிறீர்களா? எந்த அடிப்படையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்கள்?
Tafsiran larabci:
قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟
15.55. தூதர்களாக வந்த வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். எனவே நாம் உமக்குக் கூறிய நற்செய்தியை விட்டும் நம்பிக்கையிழந்தவர்களில் ஒருவராகிவிடாதீர்.
Tafsiran larabci:
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
15.56. இப்ராஹீம் கூறினார்: “தன் இறைவனின் அருளிலிருந்து நேரான பாதையை விட்டும் விலகி விட்டவர்கள்தாம் நம்பிக்கை இழப்பார்கள்.”
Tafsiran larabci:
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
15.57. அவர் கேட்டார்: “அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களே! எதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள்?”
Tafsiran larabci:
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
15.58. தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பெரும் குழப்பக்காரர்களும், பெரும் தீயவர்களுமான லூத்தின் சமூகத்தை அழிப்பதற்காக எம்மை அல்லாஹ் அனுப்பியுள்ளான்.”
Tafsiran larabci:
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.59. ஆயினும் லூத்தின் குடும்பத்தினரையும் நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் பாதுகாத்திடுவோம். அவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள்.
Tafsiran larabci:
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ— اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
15.60. ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவளும் அழிக்கப்படுபவர்களுடன் சேர்ந்து அழிக்கப்படுவாள் என்று நாம் தீர்மானித்துவிட்டோம்.
Tafsiran larabci:
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ١لْمُرْسَلُوْنَ ۟ۙ
15.61. தூதர்களாக அனுப்பப்பட்ட வானவர்கள் மனித உருவில் லூத்தின் குடும்பத்தாரிடம் வந்த போது
Tafsiran larabci:
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
15.62. லூத் அவர்களிடம் “அறிமுகமற்ற கூட்டமாக உள்ளீர்களே.” எனக் கூறினார்.
Tafsiran larabci:
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟
15.63. தூதர்களாக வந்த வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “பயப்படாதீர். -லூத்தே!- உம் சமூகம் சந்தேகிக்கக்கூடியஅவர்களை அழிக்கும் வேதனையை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
Tafsiran larabci:
وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
15.64. நாங்கள் வேடிக்கையற்ற சத்தியத்தைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாவோம்.
Tafsiran larabci:
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟
15.65. இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு செல்வீராக. நீர் அவர்களுக்குப் பின்னால் செல்வீராக. உங்களில் யாரும் தம் சமூகத்தினருக்கு என்ன நிகழப் போகிறது என்பதை திரும்பிப் பார்க்கக் கூடாது. அல்லாஹ் உங்களை செல்லுமாறு ஏவிய இடத்துக்கு செல்லுங்கள்.
Tafsiran larabci:
وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟
15.66. அதிகாலையில் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று நாம் விதித்த விஷயத்தை லுதுக்கு வஹி மூலம் அறிவித்தோம்.
Tafsiran larabci:
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
15.67. சதூம் வாசிகள் லூத்தின் விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சியடைந்து மானக்கேடான காரியத்தில் மோகம் கொண்டவர்களாக வந்தார்கள்.
Tafsiran larabci:
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
68. லூத் அவர்களிடம் கூறினார்: “இவர்கள் என் விருந்தினர்கள். எனவே அவர்களிடம் நீங்கள் விரும்புவதைத் தெரிவித்து என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்.
Tafsiran larabci:
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟
15.69. மானக்கேடான காரியத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களின் இந்த மோசமான காரியத்தால் என்னை இழிவுபடுத்திவிடாதீர்கள்.
Tafsiran larabci:
قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟
15.70. அவர்களின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “மக்களில் யாருக்கும் விருந்தளிக்கக் கூடாது என்று நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تعليم أدب الضيف بالتحية والسلام حين القدوم على الآخرين.
1. மற்றவர்களிடம் செல்லும் போது ஸலாம், முகமன் கூற வேண்டும் என விருந்தாளியின் ஒழுங்குமுறை கற்பிக்கப்பட்டுள்ளது.

• من أنعم الله عليه بالهداية والعلم العظيم لا سبيل له إلى القنوط من رحمة الله.
2. அல்லாஹ் யாருக்கு நேர்வழியையும் பெரும் ஞானத்தையும் வழங்கியுள்ளானோ அவர் அவனுடைய அன்பிலிருந்து நம்பிக்கையிழந்துவிட மாட்டார்.

• نهى الله تعالى لوطًا وأتباعه عن الالتفات أثناء نزول العذاب بقوم لوط حتى لا تأخذهم الشفقة عليهم.
3. அல்லாஹ் லூத்தும் அவரைப் பின்பற்றியவர்களும் தம் சமூகத்தார் மீது இரக்கம் கொண்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் மீது வேதனை இறங்கும் போது திரும்பிப் பார்க்கக் கூடாது என்று அவர்களை தடுத்தான்.

• تصميم قوم لوط على ارتكاب الفاحشة مع هؤلاء الضيوف دليل على طمس فطرتهم، وشدة فحشهم.
4. லுதுடைய சமூகம் இந்த விருந்தாளிகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முடிவு செய்தமை, அவர்களது இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் அவர்கள் மிக மோசமானவர்கள் என்பதற்குமுரிய ஆதாரமாகும்.

قَالَ هٰۤؤُلَآءِ بَنَاتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ
15.71. லூத் தனது விருந்தாளிகளுக்கு முன்னால் மன்னிப்பு கேட்டவராக தனது கூட்டத்தாருக்கு கூறினார்: “இவர்கள் உங்கள் பெண்களைச் சார்ந்த என் புதல்விகள். நீங்கள் உங்களின் இச்சைகளைத் தணித்துக்கொள்ள விரும்பினால் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
Tafsiran larabci:
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
15.72. தூதரே! உம் வாழ்க்கையின் மீது சத்தியமாக லூதுடைய சமூகம் தம் எல்லை மீறிய இச்சையினால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.
Tafsiran larabci:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ
15.73. சூரியன் உதிக்கும் சமயத்தில் அழிவை ஏற்படுத்தும் பாரியதொரு சத்தம் அவர்களைத் தாக்கியது.
Tafsiran larabci:
فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ
15.74. நாம் அவர்களின் ஊர்களை தலை கீழாகப் புரட்டி விட்டோம். களிமண் கற்களை அவர்கள் மீது பொழியச் செய்தோம்.
Tafsiran larabci:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟
15.75. மேற்கூறப்பட்ட லூத்தின் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.
Tafsiran larabci:
وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟
15.76. லூத் சமூகத்தின் ஊர்கள் எல்லோராலும் காணமுடியுமான பாதையில்தான் அமைந்துள்ளன. கடந்து செல்லக்கூடிய பயணிகள் அவற்றைப் பார்த்துக் கொண்டுதான் செல்கிறார்கள்.
Tafsiran larabci:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
15.77. நிச்சயமாக நடந்து முடிந்த இந்த விடயத்தில் படிப்பினைபெறக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
Tafsiran larabci:
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
15.78. அடர்ந்த தோப்புகளுடைய ஷுஐபின் ஊர்வாசிகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் ஷுஐபையும் நிராகரித்ததனால் அக்கிரமக்காரர்களாக இருந்தார்கள்.
Tafsiran larabci:
فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ— وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠
15.79. நாம் அவர்களை வேதனையால் தண்டித்தோம். லூத்தின் சமூகம் வசித்த ஊர்களும் ஷுஐபின் சமூகம் வசித்த இடங்களும் கடந்து செல்லக்கூடியவர்களுக்கு தெளிவான பாதையில்தான் அமைந்துள்ளன.
Tafsiran larabci:
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ
15.80. ஹிஜ்ர் வாசிகளான (ஹிஜாஸ் மற்றும் ஷாம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பகுதி) ஸமூத் சமூகத்தினரும் தமது தூதர் ஸாலிஹை நிராகரித்ததனால் அனைத்து தூதர்களையும் நிராகரித்தவர்களாக ஆகிவிட்டனர்.
Tafsiran larabci:
وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ
15.81. அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததன் உண்மைத் தன்மைக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கினோம். அவற்றுள் நாம் வழங்கிய பெண் ஒட்டகமும் அடங்கும். அவர்கள் அந்த ஆதாரங்களைக் கொண்டு படிப்பினை பெறவுமில்லை; அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை.
Tafsiran larabci:
وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟
15.82. அவர்கள் மலைகளிலுள்ள பாறைகளைக் குடைந்து தாங்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்காக வீடுகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
Tafsiran larabci:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ
15.83. அதிகாலையை அவர்கள் அடைந்த போது பயங்கர சப்தத்தை உள்ளடக்கிய வேதனை அவர்களைத் தாக்கியது.
Tafsiran larabci:
فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ
15.84. அவர்கள் சம்பாதித்த செல்வங்களும், கட்டிய வசிப்பிடங்களும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைக் காப்பாற்றவில்லை.
Tafsiran larabci:
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ— وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟
15.85. வானங்களையும் பூமியையையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் நோக்கமின்றி வீணாகப் படைக்கவில்லை. நாம் அவையனைத்தையும் உண்மையாகவே படைத்துள்ளோம். நிச்சயமாக மறுமை நாள் வந்தே தீரும். -தூதரே!- உம்மை பொய்ப்பித்தவர்களை புறக்கணித்து விடும். அவர்களை அழகிய முறையில் மன்னித்து கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.
Tafsiran larabci:
اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
15.86. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் எல்லாவற்றையும் படைத்தவன்; அவற்றைக் குறித்து நன்கறிந்தவன்.
Tafsiran larabci:
وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟
15.87. நாம் உமக்கு ஏழு வசனங்களுடைய ஃபாத்திஹா என்னும் அத்தியாயத்தை வழங்கியுள்ளோம். அதுவே மகத்தான குர்ஆனாகும்.
Tafsiran larabci:
لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟
15.88. நிராகரிப்பாளர்களில் பலதரப்பட்டவர்களுக்கு நாம் வழங்கிய அழியக்கூடிய இன்பங்களை ஏறெடுத்தும் பார்க்காதீர். அவர்களின் நிராகரிப்பிற்காக கவலை கொள்ளாதீர். நம்பிக்கையாளர்களுடன் பணிவாக நடந்து கொள்வீராக.
Tafsiran larabci:
وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ
15.89. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் வேதனையைக் கொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்.
Tafsiran larabci:
كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ
15.90. வேதத்தில் சிலதை ஏற்றுக்கொண்டு சிலதை மறுத்து அல்லாஹ்வின் வேதங்களை பல பகுதிகளாக கூறுபோட்டவர்கள் மீது அல்லாஹ் இறக்கியது போன்ற வேதனை உங்களுக்கும் ஏற்படும் என்பதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أن الله تعالى إذا أراد أن يهلك قرية ازداد شرهم وطغيانهم، فإذا انتهى أوقع بهم من العقوبات ما يستحقونه.
1. அல்லாஹ் ஓர் ஊர்வாசிகளை அழிக்க நாடினால் அவர்களின் தீமை மற்றும் அடாவடித்தனம் அதிகரிக்கும். அது எல்லையை அடைந்து விட்டால் அவர்களுக்குத் தகுதியான தண்டனைகளை அவன் வழங்குவான்.

• كراهة دخول مواطن العذاب، ومثلها دخول مقابر الكفار، فإن دخل الإنسان إلى تلك المواضع والمقابر فعليه الإسراع.
2. வேதனை இறங்கிய இடங்களுக்குச் செல்வது வெறுக்கத்தக்கதாகும். நிராகரிப்பாளர்களின் சவக்குழிகளுக்கு செல்வதும் அதுபோன்றதே. மனிதன் அந்த இடங்கள், அடக்கஸ்தலங்களுக்கு செல்ல நேர்ந்தால் விரைவாக அவற்றைக் கடந்துவிட வேண்டும்.

• ينبغي للمؤمن ألا ينظر إلى زخارف الدنيا وزهرتها، وأن ينظر إلى ما عند الله من العطاء.
விசுவாசி உலக அலங்காரங்களைப் பார்க்காமல் அல்லாஹ்விடம் உள்ள வெகுமதிகளையே பார்க்கவேண்டும்.

• على المؤمن أن يكون بعيدًا من المشركين، ولا يحزن إن لم يؤمنوا، قريبًا من المؤمنين، متواضعًا لهم، محبًّا لهم ولو كانوا فقراء.
4. நம்பிக்கையாளன் இணைவைப்பாளர்களை விட்டும் தூரமாகி இருக்க வேண்டும். அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் கவலைப்படக் கூடாது. நம்பிக்கையாளர்களுக்கு நெருக்கமாகவும், பணிவாகவும் அவர்கள் ஏழையாக இருந்தாலும் அவர்களை நேசிப்போராகவும் இருக்க வேண்டும்.

الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
15.91. அவர்கள் குர்ஆனை பல பிரிவுகளாக மாற்றினார்கள். இவை சூனியம், இவை ஜோதிடம், இவை கவிதை என்றும் அவர்கள் கூறினார்கள்.
Tafsiran larabci:
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.92. -தூதரே!- உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக மறுமை நாளில் அதனைக் கூறுபோட்ட அனைவரிடமும் கேட்டே தீருவோம்.
Tafsiran larabci:
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
15.93. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் நாம் விசாரித்தே ஆகுவோம்.
Tafsiran larabci:
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
15.94. -தூதரே!- எதன் பக்கத் அழைப்பு விடுக்குமாறு அல்லாஹ் உமக்கு கட்டளையிட்டானோ அதனை எடுத்துரைப்பீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதையும் செய்வதையும் பொருட்படுத்தாதீர்.
Tafsiran larabci:
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
15.95. அவர்களைக் கண்டு நீர் அஞ்சாதீர். பரிகாசம் செய்யக்கூடிய நிராகரிக்கும் குறைஷித் தலைவர்கள் விஷயத்தில் நாமே உமக்குப் போதுமானவர்கள்.
Tafsiran larabci:
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
15.96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் இணைவைப்பின் மோசமான விளைவை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
Tafsiran larabci:
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
15.97. -தூதரே!- அவர்கள் உம்மை பொய்பிப்பதனால், பரிகாசம் செய்வதனால் நிச்சயமாக உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் நன்கு அறிவோம்.
Tafsiran larabci:
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
15.98. அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனை தூய்மைப்படுத்தி, அவனுடைய பரிபூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவன் பக்கமே தஞ்சம் புகுந்து கொள்வீராக. அல்லாஹ்வை வணங்கி தொழுகையில் ஈடுபடுபவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக. இதனால் உமது உள்ளம் உணரும் நெருக்கடியிலிருந்து நீர் விடுபடலாம்.
Tafsiran larabci:
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
15.99. மரணம் உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்குவதில் நிலைத்திருப்பீராக.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• عناية الله ورعايته بصَوْن النبي صلى الله عليه وسلم وحمايته من أذى المشركين.
1. அல்லாஹ்வின் அருள் மற்றும் அக்கறையின் வெளிப்பாடு, அவன் தன் தூதரை இணைவைப்பாளர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாத்துள்ளான்.

• التسبيح والتحميد والصلاة علاج الهموم والأحزان، وطريق الخروج من الأزمات والمآزق والكروب.
2. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வின் தூய்மையை பறைசாற்றுவது), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) என்று கூறுவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது கவலைகள் மற்றும் துக்கத்திற்கான சிகிச்சையாக உள்ளது. அவை நெருக்கடி, துன்பம் மற்றும் கஷ்டங்களிலிருந்து வெளியேற்றும் பாதைகளாகும்.

• المسلم مطالب على سبيل الفرضية بالعبادة التي هي الصلاة على الدوام حتى يأتيه الموت، ما لم يغلب الغشيان أو فقد الذاكرة على عقله.
3. ஒரு முஸ்லிம் மரணிக்கும் வரை தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு, அல்லாஹ்வை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளான். ஆனால் மயக்கம் அல்லது சுயநினைவை இழக்கும் சமயத்தில் அவனுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• سمى الله الوحي روحًا؛ لأنه تحيا به النفوس.
4. வஹியை அல்லாஹ் உயிர் எனக் குறிப்பிட்டுள்ளான். ஏனெனில் அதன் மூலமே ஆன்மாக்கள் உயிர் வாழ்கின்றன.

• مَلَّكَنا الله تعالى الأنعام والدواب وذَلَّلها لنا، وأباح لنا تسخيرها والانتفاع بها؛ رحمة منه تعالى بنا.
5. அல்லாஹ் எம்மீது கொண்ட கருணையினால் கால்நடைகளை எமக்கு உரிமையாக்கி எமக்கு அவற்றைக் கட்டுப்படச் செய்துள்ளான். அவற்றை வசப்படுத்தி பயன்பெற அனுமதித்துள்ளான்.

 
Fassarar Ma'anoni Sura: Suratu Alhijr
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa