Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'nahl   Aya:
وَلَقَدْ نَعْلَمُ اَنَّهُمْ یَقُوْلُوْنَ اِنَّمَا یُعَلِّمُهٗ بَشَرٌ ؕ— لِسَانُ الَّذِیْ یُلْحِدُوْنَ اِلَیْهِ اَعْجَمِیٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیْنٌ ۟
16.103. “இந்தக் குர்ஆனை ஒரு மனிதன்தான் முஹம்மதுக்குக் கற்றுக் கொடுக்கிறான்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். தங்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்கள். ஏனெனில் அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுப்பதாகக் கூறும் மனிதனின் மொழி அரபி அல்லாத அந்நிய மொழியாகும். இந்தக் குர்ஆனோ தெளிவான அரபிமொழியின் உயர்ந்த இலக்கிய நடையில் இறக்கப்பட்டதாகும். இவ்வாறிருக்கும் போது அரபி அல்லாத ஒரு மனிதனிடமிருந்து அவர் இந்தக் குர்ஆனைப் பெற்றார் என்று எவ்வாறு அவர்கள் கூற முடியும்?
Tafsiran larabci:
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۙ— لَا یَهْدِیْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
16.104. அல்லாஹ்வின் வசனங்கள் அவனிடமிருந்தே வந்துள்ளன என்பதை உண்மைப்படுத்தாதவர்களுக்கு அவர்கள் அதில் நிலைத்திருக்கும் வரை அவன் நேர்வழிகாட்ட மாட்டான். அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய வசனங்களை பொய்பித்ததனால் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
Tafsiran larabci:
اِنَّمَا یَفْتَرِی الْكَذِبَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ ۟
16.105. முஹம்மது தம் இறைவனிடமிருந்து கொண்டுவந்துள்ளதில் பொய்யர் அல்ல. அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம் பொய்யை புனைந்துகூறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் வேதனையை அஞ்சுவதுமில்லை; நன்மையை எதிர்பார்ப்பதுமில்லை. நிராகரிக்கும் இவர்கள்தாம் பொய்யர்கள்; எனெனில் பொய் கூறுவது அவர்களது வழக்கமாகும். அதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
Tafsiran larabci:
مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِیْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَىِٕنٌّۢ بِالْاِیْمَانِ وَلٰكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَیْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
16.106. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட பிறகு அவனை நிராகரிப்பவர்கள் (இரு வகையினராக இருக்கின்றனர். ஒரு வகையினர்) அவர்களின் உள்ளங்கள் நம்பிக்கையில் உறுதியாக உள்ள நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு தன் நாவினால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறியவர்கள். (இரண்டாவது வகையினர்) நம்பிக்கையை விட நிராகரிப்பை மனதார ஏற்று அதனை மொழிந்தவர். அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர். அவர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவருக்கு கடுமையான வேதனை உண்டு.
Tafsiran larabci:
ذٰلِكَ بِاَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ ۙ— وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
16.107. அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்கான காரணம், மறுமையைவிட தமது நிராகரிப்புக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும் இவ்வுலகின் அற்ப இன்பங்களுக்கு முன்னுரிமை வழங்கியதாகும். நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் ஈமானின்பால் வழிகாட்ட மாட்டான். மாறாக அவர்களைக் கைவிட்டு விடுவான்.
Tafsiran larabci:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
16.108. நம்பிக்கைகொண்ட பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட இவர்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ள முடியாமல் அவர்களின் உள்ளங்களிலும், அவற்றைச் செவியுற்று பயனடைய முடியாமல் செவிகளிலும், ஈமானுக்கான சான்றுகளைக் கண்டுகொள்ள முடியாமல் பார்வைகளிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் பாக்கியம் மற்றும் துர்பாக்கியத்தின் காரணங்களையும் அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள வேதனையையும் அறியாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.
Tafsiran larabci:
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
16.109. நிச்சயமாக உண்மையில் இவர்கள்தாம் மறுமை நாளில் நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்ததனால் தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருந்தால் சுவனம் சென்றிருப்பார்கள்.
Tafsiran larabci:
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ هَاجَرُوْا مِنْ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ— اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
16.110. -தூதரே!- இருந்தபோதிலும் உள்ளங்கள் ஈமானைக் கொண்டு திருப்தியடைந்த நிலையில், நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுமளவுக்கு மக்காவில் இணைவைப்பாளர்களால் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுடைய மார்க்கத்தை சோதித்துப் பார்த்தத பின்னர் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்த பலவீனமான நம்பிக்கையாளர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்யவும் நிராகரித்தோரின் வார்த்தை ஒழிந்து விடவும் போரிட்டார்கள். அதில் ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள். சோதிக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டதனால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறிய அவர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதனால்தான் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறினார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الترخيص للمُكرَه بالنطق بالكفر ظاهرًا مع اطمئنان القلب بالإيمان.
1. உள்ளம் ஈமானில் உறுதியுடன் இருக்கும் நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டால் வெளிப்படையாக நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

• المرتدون استوجبوا غضب الله وعذابه؛ لأنهم استحبوا الحياة الدنيا على الآخرة، وحرموا من هداية الله، وطبع الله على قلوبهم وسمعهم وأبصارهم، وجعلوا من الغافلين عما يراد بهم من العذاب الشديد يوم القيامة.
2. இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் மறுமையைவிட இவ்வுலகத்திற்கே முன்னுரிமை வழங்கினார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை இழந்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலும் செவிகளிலும் பார்வைகளிலும் முத்திரையிட்டு விட்டான். மறுமை நாளில் அவர்களுக்குக் காத்திருக்கும் கடுமையான வேதனையை மறந்தவர்களில் அவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

• كَتَبَ الله المغفرة والرحمة للذين آمنوا، وهاجروا من بعد ما فتنوا، وصبروا على الجهاد.
3. நம்பிக்கை கொண்டு சோதிக்கப்பட்ட பின் புலம்பெயர்ந்து போரில் பொறுமையாக இருந்தோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், கருணையையும் எழுதியுள்ளான்.

 
Fassarar Ma'anoni Sura: Al'nahl
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa