Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'bakara   Aya:

அல்பகரா

daga cikin abunda Surar ta kunsa:
الأمر بتحقيق الخلافة في الأرض بإقامة الإسلام، والاستسلام لله، والتحذير من حال بني إسرائيل.
இஸ்லாத்தை நிலைநாட்டி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் பூமியில் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுமாறு ஏவுதலும், பனூ இஸ்ரவேலர்களின் நிலமையை விட்டு எச்சரித்தலும்

الٓمّٓ ۟ۚ
2.1. الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது. ஆனால், குர்ஆனில் எதுவும் நோக்கமின்றிக் கூறப்பட்டிருக்காது என்பதால் இவ்வாறான எழுத்துகள் இடம்பெறுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அறபிகள் பேசுவதற்குப் பயன்படுத்துகிற அவர்களுக்குத் தெரிந்த அதே எழுத்துகளின் மூலம் அமைந்த குர்ஆனைக் கொண்டு சவால் விடுவதே அந்த நோக்கமாகும். அதனால்தான் பெரும்பாலும் இந்த எழுத்துகளைக் குறிப்பிட்ட பின்னர் குர்ஆனைப் பற்றியே பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்திலும் அவ்வாறே வந்துள்ளது.
Tafsiran larabci:
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ ۖۚۛ— فِیْهِ ۚۛ— هُدًی لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
2.2. மகத்துவமிக்க இந்தக் குர்ஆன் இது இறங்கிய மூலத்தின் அடிப்படையிலும், உச்சரிப்பு மற்றும் பொருளின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தனக்குப் பயப்படக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் வரக்கூடிய வழியைக் காட்டுகிறான்.
Tafsiran larabci:
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۙ
2.3. அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
Tafsiran larabci:
وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ— وَبِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
2.3. அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
Tafsiran larabci:
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ ۗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
2.5. இந்தப் பண்புகளால் தங்களை அலங்கரித்தவர்கள்தாம் நேர்வழியின் பாதையில் இருப்பவர்கள். தாங்கள் ஆதரவு வைத்ததை அடைந்து, அச்சப்பட்டவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற்று இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெறக்கூடியவர்கள் இவர்களே.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الثقة المطلقة في نفي الرَّيب دليل على أنه من عند الله؛ إذ لا يمكن لمخلوق أن يدعي ذلك في كلامه.
1. முழு நம்பிக்கையுடன் குர்ஆனில் சந்தேகமில்லை என மறுத்திருப்பது, அது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமே என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், எந்தவொரு படைப்பினமும் தனது வார்த்தையில் இந்தளவு நம்பகத்தன்மையை வாதிட முடியாது.

• لا ينتفع بما في القرآن الكريم من الهدايات العظيمة إلا المتقون لله تعالى المعظِّمون له.
2. அல்லாஹ்வுக்குப் பயந்து அவனைக் கண்ணியப்படுத்துவோர் மட்டுமே குர்ஆன் கூறக்கூடிய மகத்தான போதனைகளிலிருந்து பலனடைவார்கள்.

• من أعظم مراتب الإيمانِ الإيمانُ بالغيب؛ لأنه يتضمن التسليم لله تعالى في كل ما تفرد بعلمه من الغيب، ولرسوله بما أخبر عنه سبحانه.
3. அல்லாஹ் அறிவித்த மறைவான விஷயங்களை நம்புவது ஈமானின் மிக உயர்ந்த படித்தரங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்கள் அனைத்திலும் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அத்துடன், அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர் அறிவித்த மறைவான விஷயங்களில் அவருக்குக் கட்டுப்படுவதாகவும் அமையும்.

• كثيرًا ما يقرن الله تعالى بين الصلاة والزكاة؛ لأنَّ الصلاة إخلاص للمعبود، والزكاة إحسان للعبيد، وهما عنوان السعادة والنجاة.
4. பெரும்பாலும் அல்லாஹ் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்தே கூறுகின்றான். ஏனெனில், தொழுகை வணக்கத்திற்குரியவனுக்கு மனத்தூய்மையுடன் நடப்பதாகும்; ஸகாத் அடியார்களுக்கு உபகாரம் செய்வதாகும். இந்த இரண்டுமே ஈடேற்றம் மற்றும் பாதுகாப்பின் காரணிகளாகும்.

• الإيمان بالله تعالى وعمل الصالحات يورثان الهداية والتوفيق في الدنيا، والفوز والفلاح في الأُخرى.
5. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்கள் புரிவதும் இவ்வுலகில் நேர்வழியையும் பாக்கியத்தையும் வழங்குகின்றன. அத்துடன், மறுமையில் ஈடேற்றத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருகின்றன.

 
Fassarar Ma'anoni Sura: Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa