Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'bakara   Aya:
قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
2.94. தூதரே! நீர் கூறும்: யூதர்களே, மறுமையில் சுவனம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது, மற்ற மக்கள் யாரும் அதில் நுழைய முடியாது என்ற உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த அந்தஸ்தை விரைவாகப் பெறுவதற்காக மரணத்தை விரும்பித் தேடிச்செல்லுங்கள்; கஷ்டம்நிறைந்த இவ்வுலகின் சுமைகளிலிருந்து விடுபட்டுவிடுங்கள்.
Tafsiran larabci:
وَلَنْ یَّتَمَنَّوْهُ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
2.95. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, அவனுடைய வேதங்களை திரித்து தங்களின் வாழ்க்கையில் சேர்த்துவைத்த பாவங்களினால் அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்ப மாட்டார்கள். அவர்களிலும் ஏனையோரிலுமுள்ள அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰی حَیٰوةٍ ۛۚ— وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْا ۛۚ— یَوَدُّ اَحَدُهُمْ لَوْ یُعَمَّرُ اَلْفَ سَنَةٍ ۚ— وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ یُّعَمَّرَ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟۠
2.96. தூதரே! மனிதர்களிலே வாழ்வின் மீது அதிக பேராசையுடையவர்களாக யூதர்களைக் காண்பீர், அது மிகவும் இழிவானதாக இருந்தாலும் சரியே. மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொண்ட வேதக்காரர்களாக அவர்கள் இருந்தும், மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களைக் காட்டிலும் அவர்கள் அதிக பேராசையுடையவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.எவ்வளவு நீண்ட ஆயுளாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைத் தூரமாக்காது. அவன் அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِیْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰی قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَهُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
2.97. தூதரே! வானவர்களில் ஜிப்ரீல் எங்களின் எதிரியாவார் என்று கூறுபவர்களிடம் நீர் கூறுவீராக, அவர்தான் உமது உள்ளத்தில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு குர்ஆனை இறக்கினார். அது தவ்ராத், இன்ஜீல் போன்ற முன்னுள்ள இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது; நன்மையின் பக்கம் வழிகாட்டுகிறது; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் அருட்கொடைகளை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுகிறது. இத்தகைய பண்புடைய ஜிப்ரீலை எதிரிகளாகக் கருதுபவர்கள் வழிகெட்டவர்களாவர்.
Tafsiran larabci:
مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِیْلَ وَمِیْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِیْنَ ۟
2.98. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய வானவர்களுக்கும், தூதர்களுக்கும் ஜிப்ரீல், மீக்காயில் என்னும் நெருங்கிய இரு வானவர்களுக்கும் எதிரிகளாக இருக்கின்றார்களோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் ஏனையவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் எதிரியாவான். யாருக்கு அல்லாஹ் எதிரியாக இருக்கின்றானோ அவர் வெளிப்படையான நஷ்டத்தில் வீழ்ந்துவிட்டார்.
Tafsiran larabci:
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكَ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ۚ— وَمَا یَكْفُرُ بِهَاۤ اِلَّا الْفٰسِقُوْنَ ۟
2.99. தூதரே! உமது தூதுத்துவத்தையும் வஹியையும் உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை உம்மீது இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்தாம் அவை தெளிவாக இருந்தும் மறுப்பார்கள்.
Tafsiran larabci:
اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِیْقٌ مِّنْهُمْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
2.100. யூதர்களின் தீய குணங்களில் ஒன்று, அவர்கள் ஏதேனும் உடன்படிக்கை செய்யும்போதேல்லாம் அவர்களில் ஒருபிரிவினர் அதனை முறித்துவிடுகின்றனர். இந்த யூதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் இறக்கியதை உண்மையாகவே நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையான ஈமான் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றத் தூண்டுகிறது.
Tafsiran larabci:
وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِیْقٌ مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ ۙۗ— كِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؗ
2.101. தவ்ராத்தில் கூறப்பட்டபடி முஹம்மது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு தூதராக அவர்களிடம் வந்தபோது அவர்களில் ஒரு பிரிவினர் தவ்ராத்தில் கூறப்பட்டதை புறக்கணித்துவிட்டார்கள். அதனை அலட்சியமாக தம் முதுகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்தார்கள். சத்தியத்திலிருந்து பயனடையாத, அதனைப் பொருட்படுத்தாத மூடர்களைப் போன்றவர்கள் இவர்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• المؤمن الحق يرجو ما عند الله من النعيم المقيم، ولهذا يفرح بلقاء الله ولا يخشى الموت.
1. உண்மையான நம்பிக்கையாளன் அல்லாஹ்விடம் கிடைக்கும் நிலையான அருட்கொடைகளை எதிர்பார்க்கிறான். எனவே அவன் அல்லாஹ்வை சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறான்; மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.

• حِرص اليهود على الحياة الدنيا حتى لو كانت حياة حقيرة مهينة غير كريمة.
2. யூதர்கள் இவ்வுலக வாழ்க்கையின்மீது அதிக பற்றுடையவர்கள், அது எவ்வளவுதான் இழிவானதாக, மோசமானதாக இருந்தாலும் சரியே.

• أنّ من عادى أولياء الله المقربين منه فقد عادى الله تعالى.
3. அல்லாஹ்வின் நெருங்கிய நேசர்களை பகைப்பவன் அல்லாஹ்வை பகைக்கிறான்.

• إعراض اليهود عن نبوة محمد صلى الله عليه وسلم بعدما عرفوا تصديقه لما في أيديهم من التوراة.
4. தங்களிடமுள்ள தவ்ராத் வேதத்தை முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மைப்படுத்துவதை யூதர்கள் நன்கறிந்த பின்னரும் அவரது தூதுத்துவத்தை மறுத்தார்கள்.

• أنَّ من لم ينتفع بعلمه صح أن يوصف بالجهل؛ لأنه شابه الجاهل في جهله.
5. தாம் பெற்ற கல்வியால் பயனடையாதவர் அறியாத மூடரைப் போலாவார். ஏனெனில் அவன் மடமையில் மூடருக்கு ஒப்பானவன்.

 
Fassarar Ma'anoni Sura: Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa